புதன், 16 ஜூன், 2010
பன்னிரு திருமுறை ஒலிபெயர்ப்பு நூல்வெளியீட்டு விழா
நூல்வெளியீடு
சென்னைத் தமிழ்க் கணினி மொழியியல் கழகமும்,காந்தளகம் நூல் வெளியீட்டகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த முனைவர் புனல் க.முருகையன் அவர்களின் ஆய்வு நூலான பன்னிரு திருமுறை ஒலிபெயர்ப்பு நூலும், கன்னடப் பேராசிரியர் க.மலர்விழி அவர்களின் மொழிபெயர்ப்பில் உருவான ஒன்பதாம் திருமுறை கன்னட மொழிபெயர்ப்பு நூலும் இன்று(15.06.2010) மாலை சென்னைப் பல்கலைக்கலைக் கழகத் தமிழ் மொழித்துறையில் வெளியிடப்பட்டன.நானும் நண்பர் திரு.இராசசேகரன் அவர்களும் சென்று வந்தோம்.
பேராசிரியர் ந.தெய்வசுந்தரம் அவர்கள் நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை வரவேற்றதுடன் நூல் பற்றிய அறிமுகத்தையும் நூலின் சிறப்பையும் நூலாசிரியர் சிறப்பையும் அரங்கினருக்கு எடுத்துரைத்தார்.தமிழ்நாட்டரசின் இந்து அறநிலையத்துறை அமைச்சர் திரு.கே.ஆர். பெரியகருப்பன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் அவர்கள் நூலினை வெளியிட்டுத் தலைமையுரையாற்றினார்.
திருப்பனந்தாள் காசித்திருமடம் இணை அதிபர் தவத்திரு சுந்தரமூர்த்தித் தம்பிரான் அடிகளார் அவர்களும்,தருமபுரம் ஆதீனம்,மௌனமடம் கட்டளை விசாரணை முனைவர் தவத்திரு மௌன குமாரசாமித் தம்பிரான் அடிகளார் அவர்களும், திருவாவடுதுறை ஆதீனம் சீர்மன்னு சுப்பிரமணிய் தம்பிரான் அடிகாளர் அவர்களும் கலந்துகொண்டு வாழ்த்துரைத்தனர்.சிங்கப்பூர் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் சுப.திண்ணப்பன் அவர்களும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார்.முனைவர் ஆ.கந்தையா அவர்கள்(ஆத்திரேலியா) கலந்துகொண்டு உரையாற்றினார்.காந்தளகம் சச்சிதானந்தம் அவர்கள் நூல் பற்றிய அறிமுகத்தை வழங்கினார்.
ஏற்புரையாக முனைவர் புனல் க.முருகையன் நூல் எழுந்த காரணம்,உழைப்பு,முயற்சி பற்றி எடுத்துரைத்தார்.
ஒன்பதாம் திருமுறை நூலின் பாடல்,எழுத்துப் பெயர்ப்பு,ஒலிபெயர்ப்பு ஆங்கிலமொழிபெயர்ப்பு என்ற அடிப்படையில் இந்த நூல் அமைந்துள்ளளது.
நூலின் சிறப்பைப் பற்றி முனைவர் ந.தெய்வசுந்தரம் அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
கணினிமொழியியல்(Computer Linguistics) ஆராய்ச்சிக்கு இந்த நூல் ஓர் அடித்தள வரவு.பேச்சை எழுத்துரையாக மாற்றும் மென்பொருள்(Automatic Speech Recognizer-ASR),எழுத்துரையைப் பேச்சாக மாற்றும் மென்பொருள்(Text To Speech-TTS) ஆகியவற்றை உருவாக்குவதற்கு மிக அடிப்படையாக அமைகிற முயற்சி.இதுவரை இதுபோன்ற ஓர் ஆய்வு வெளிவந்துள்ளதாகத் தெரியவில்லை.95 பேச்சொலிகள்(Phonems) திருமுறைத் தமிழ் எழுத்துரையில் உள.என்னென்ன பேச்சொலிகள்,எந்தெந்த மொழிச்சூழலில் பயின்றுவருகின்றன,அவற்றைக் குறிக்கும் ஞால ஒலி நெடுங்கணக்கு வரிவடிவங்கள்(International Phonetic Association) எவை என இந்நூலில் தரப்பட்டுள்ளன.ஓதுவார் வாய்மொழியை அடிப்படையாகக் கொண்டது இந்த ஆராய்ச்சி.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
2 கருத்துகள்:
ninth thirumurai mozhli peyarppukkum, panniru thirumurai oli peyarppu noolukkum entha thodarbum illai. migath thavaraaga nigalvai pathivu seithullirgal
மாற்ற மனங்கழிய நின்ற மறையோனை
நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனை காண
இந்த பக்கத்தில் இருக்கும் வீடியோவை பாருங்கள்.
ஐயா இரகசியங்களை தெளிவாக விளக்கி உள்ளார்.
இங்கே சொடுக்கவும்
ஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான்
அம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன்
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி
தனிப் பெரும் கருணை அருட்பெரும் ஜோதி
கருத்துரையிடுக