தமிழ்மொழி வளர்ச்சிக்குத் தூணென நின்று துணைசெய்யும் அமைப்பு தமிழியக்கம் ஆகும். வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் வேந்தர், கல்விக்கோ முனைவர் கோ. விசுவநாதன் அவர்களைத் தலைவராகக் கொண்டு இயங்கும் தமிழியக்கம் அமைப்பின் ஏழாம் ஆண்டு விழா, புதுச்சேரியில் உள்ள புதுவைப் பல்கலைக்கழக மாநாட்டு அரங்கத்தில் 20.10.2024(ஞாயிறு) காலை 9.30 மணி முதல் நடைபெறுகின்றது. இந்த நிகழ்வில் பேராசிரியர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் தமிழ்ப் பணியைப் பாராட்டி, பாராட்டு விருதுடன் ஓர் இலட்சம் உருவா அவருக்குப் பணப்பரிசில் வழங்கப்பட உள்ளது.
கால்கோள் அரங்கம், நாடக அரங்கம், இசை அரங்கம், பாங்கறி மண்டபம், விருதரங்கம், நிறைவரங்கம் என்ற தலைப்பில் நிகழ்வுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வில் முனைவர் கோ. விசுவநாதன் தலைமையுரையாற்ற உள்ளார். கல்விச் செம்மல் சீனு. மோகன்தாசு வரவேற்புரையாற்ற உள்ளார். புதுவைத் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் முனைவர் வி. முத்து தொடக்கவுரையாற்ற உள்ளார். புதுச்சேரி முதலமைச்சர் ந. அரங்கசாமி, மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் க. இலட்சுமிநாராயணன், மாநிலங்களவை உறுப்பினர் சு. செல்வகணபதி, சட்டமன்ற உறுப்பினர் பி.எம். எல். கல்யாணசுந்தரம், தட்சசீலா பல்கலைக்கழக வேந்தர் ம. தனசேகரன், புதுவைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர், பேராசிரியர் க.தரணிக்கரசு, கம்பன் கழகச் செயலாளர் வே. பொ. சிவக்கொழுந்து, கலை, பண்பாட்டுத்துறை இயக்குநர் வி. கலியபெருமாள், முனைவர் மு. இளங்கோவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்க உள்ளனர்.
நிறைவு விழாவில் சூர்யா சேவியர் சிறப்புரையாற்றவும், புதுவை முன்னாள் முதலமைச்சர் வே. நாராயணசாமி, பாராளுமன்ற உறுப்பினர் வெ.வைத்தியலிங்கம், எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா, புதுவைத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எசு. மோகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆ. அன்பழகன், மார்க்சிய பொதுவுடைமைக் கட்சியின் செயலர் இரா. இராசாங்கம், இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் செயலர் அ.மு.சலீம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செயலர் தே.வ. பொழிலன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கவும் உள்ளனர்.
பேராசிரியர் ஈரோடு தமிழன்பன், புலவர் வே.
பதுமனார். பேராசிரியர் அப்துல்காதர், பேராசிரியர் கு. வணங்காமுடி, பாவலர் மு.அருள்செல்வம்,
நாறும்பூநாதன், சிவாலயம் செ.மோகன் முதலானவர்கள் உரையாற்ற உள்ளனர். தமிழ் உணர்வாளர்கள்
சந்திக்கும் நிகழ்வாக இந்த நிகழ்வு நடைபெற உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக