நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 9 ஜனவரி, 2024

முனைவர் கி. பாண்டியன் அவர்கள் எழுதியுள்ள சித்தர் பாடல்களில் வாழ்வியல் உண்மைகள், சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை நெறிகள் நூல்கள் வெளியீட்டு விழா!




 அன்புடையீர், வணக்கம்.

 சித்தர் பாடல்களைத் தம் ஆய்வுப்புலமாக அமைத்துக்கொண்டு, சித்தர் நெறிநின்று, துறையூரில் வாழ்ந்துவரும் முனைவர் கி.  பாண்டியன் அவர்கள் எழுதியுள்ள 1. சித்தர் பாடல்களில் வாழ்வியல் உண்மைகள், 2.  சித்தர்  சிவவாக்கியரின் சிந்தனை நெறிகள் ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா அறிஞர்கள் முன்னிலையில் புதுச்சேரியில் நடைபெற உள்ளது. இவ்விழாவில் மாண்புமிகு புதுச்சேரி சட்டப் பேரவைத் தலைவர் ஏம்பலம் அரங்க. செல்வம் அவர்களும் புதுச்சேரி அரசின் கலை பண்பாட்டுத்துறைச் செயலாளர் சீர்மிகு அ. நெடுஞ்செழியன் இ.ஆ.ப. அவர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர். மயிலம் பொம்மபுர ஆதீனம் இருபதாம் பட்டம் தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள் அவர்கள் கலந்துகொண்டு சித்தர் இலக்கியச் செம்மல் என்ற விருதினை நூலாசிரியருக்கு வழங்கி, அருளாசி வழங்க உள்ளார்கள். தமிழ் இலக்கிய ஆர்வலர்களையும், சமய இலக்கிய ஆர்வலர்களையும் நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம். 

அழைப்பின் மகிழ்வில்

வயல்வெளிப் பதிப்பகம்,

உலகத் தொல்காப்பிய மன்றம்

புதுச்சேரி – 605 003

தொடர்புக்கு: 9442029053


நாள்: 13. 01. 2024, சனி(காரி)க் கிழமை, 

நேரம்:   முற்பகல் 10. 30 மணி முதல் 12. 30 வரை

இடம்: புதுவைத் தமிழ்ச்சங்கம், வெங்கட்டா நகர், புதுச்சேரி 

 

நிகழ்ச்சி நிரல் 

தமிழ்த்தாய் வாழ்த்து: 

தலைமை: முனைவர் க. இளமதி சானகிராமன் அவர்கள்,

புலமுதன்மையர்(ப.நி), புதுவைப் பல்கலைக்கழகம்

 

சித்தர் பாடல்களில் வாழ்வியல் உண்மைகள்

சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை நெறிகள்  நூல்கள்  வெளியீடு

மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் ஏம்பலம் அரங்க. செல்வம் அவர்கள்


நூலின் முதற்படி பெறுதல்: திரு. அ. நெடுஞ்செழியன் அவர்கள் இ.ஆ.ப

செயலாளர், கலை, பண்பாட்டுத்துறை, புதுச்சேரி அரசு

 

நூலின் சிறப்புப் படிகளைப் பெறுதல்:

பாவலர் பத்ரிசியா பாப்புராயர், பிரான்சு

பொறிஞர் மு. பாலசுப்பிரமணியன் அவர்கள்

மருத்துவர் முத்துராமன் சண்முகவேல் அவர்கள், சென்னை

 

முனைவர் கி. பாண்டியன் அவர்களுக்குச் சித்தர் இலக்கியச் செம்மல் என்னும் விருதளித்து அருளாசியுரை:

தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள் அவர்கள்,

இருபதாம் பட்டம், மயிலம் பொம்மபுர ஆதீனம்

 

நூல்கள் அறிமுகவுரை:

முனைவர் ஔவை இரா. நிர்மலா அவர்கள்,

தமிழ்த்துறைத் தலைவர்(ப.நி), கா.மா. அரசு பட்டமேற்படிப்பு, ஆராய்ச்சி நிறுவனம்,

மருத்துவர் க. கலைவேந்தன் அவர்கள், விநாயகா மருத்துவமனை, புதுச்சேரி 

 

வாழ்த்துரை:

முனைவர் க. தமிழமல்லன் அவர்கள், ஆசிரியர், வெல்லும் தூய தமிழ்

சொல்லாய்வுச் செல்வர் முனைவர் சு. வேல்முருகன் அவர்கள்

செந்தமிழ்ச் செம்மல் திரு. சீனு. வேணுகோபால் அவர்கள்

சைவத்திரு. பு. சொ. பூபதி அவர்கள், புதுச்சேரி பன்னிரு திருமுறை வழிபாட்டு மன்றம்

முனைவர் நெய்தல்நாடன் அவர்கள், புதுவைத் தமிழ்ச் சான்றோர் பேரவை

தீந்தமிழ்த் தென்றல் தி. கோவிந்தராசன் அவர்கள், வெற்றித் தமிழர் பேரவை

முனைவர் அரங்க. மு. முருகையன் அவர்கள், சமுதாயக் கல்லூரி, புதுச்சேரி 

ஏற்புரை: முனைவர் கி. பாண்டியன் அவர்கள், நூலாசிரியர் 

நன்றியுரை: திரு. செ.திருவாசகம், நெறியாளர், வயல்வெளிப் பதிப்பகம் 

நிகழ்ச்சித் தொகுப்பு: 

“நற்றமிழ் நாவரசி” திருவாட்டி பூங்குழலி பெருமாள் அவர்கள்

கருத்துகள் இல்லை: