நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 23 ஜூன், 2012

இலக்கண அறிஞர் ச.சுபாசு சந்திரபோசு


முனைவர் ச.சுபாசு சந்திரபோசு

திருவையாறு அரசர் கல்லூரியில் 1985 முதல் 2008 வரை தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ள முனைவர் ச.சுபாசு சந்திரபோசு அவர்களின் பெற்றோர் திருவாளர் சண்முகம், பாக்கியம் அம்மா ஆவர். இவர் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் ஒக்கநாடு கீழையூரில் 10.06.1949 இல் பிறந்தவர். தமிழில் முதுகலை, இளம் முனைவர், முனைவர் பட்டங்களை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பயின்று பெற்றவர். மொழியியல் முதுகலைப் பட்டத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்று பெற்றவர். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில 1982 முதல் 1985 வரை ஆய்வுப்பணியில் ஈடுபட்டிருந்தார்.

"தமிழ் இலக்கணங்களில் வடமொழி இலக்கணத்தின் செல்வாக்கு" என்ற தலைப்பில் இவர் நல்கைக்குழுவின் நிதியுதவி பெற்றுப் பெருந்திட்டப்பணியை நிறைவு செய்தவர். தற்பொழுது "செம்மொழித் தமிழ்நூல்களில் வினைவழிப்பெயர்கள்" என்னும் திட்டப்பணியைச் செம்மொழி நிறுவனத்திற்காக மேற்கொண்டுள்ளார்.

இலக்கணம், இலக்கியம், படைப்புநூல்கள் என்று பன்முகத்தன்மையில் பல நூல்களை எழுதியுள்ளார். இருபதாம் நூற்றாண்டில் குறிப்பிடத்தக்க இலக்கணப் புலமையும் மொழியியல் அறிவும்கொண்ட அறிஞர்களுள் முனைவர் ச.சுபாசுசந்திரபோசு அவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். கல்லூரிப் பணிகளில் கரைந்துபோனதால் இவர்களைப் போன்ற மேதைகள் வெளியில் தெரியாமல் போய்விடுவது தமிழகத்தின் வரலாறாக உள்ளது.

இலக்கணம்,மொழியியல் தொடர்பான பேராசிரியரின் நூல்கள்:

1. காலங்கள் (தமிழக அரசின் பரிசுபெற்றநூல்)
2. சொல்லியல் ஆய்வுங்கள்
3. எழுத்தியல் ஆய்வுகள்
4. வினைப்பாகுபாட்டில் எச்சங்கள்
5. பழந்தமிழ் வடிவங்கள் மீள்பார்வை

புதினங்கள்

1. மாவீரன் வாட்டாக்குடி இரணியன்
2. சாம்பவான்ஓடைச் சிவராமன்
3. பயிர்முகங்கள்
4. அக்கினிக் குழந்தைகள்
5. மலைப்பாம்பு மனிதர்கள்
6. காலவெள்ளம்
7. கூத்தாயி

சிறுகதைத் தொகுப்புகள்

1. கனவுகள்
2. சிவப்புநாளங்கள்
3. மாத்தாத்தா
4. குதிரைக்கு வைக்கோல்
5. ஐம்பது விழுக்காடு
6. தாமரைச் சிறுகதைகள்(தொகுப்பு)
7. புதுமைப்பித்தன் சிறுகதைகள் (ஐந்து
தொகுதிகள்- தொகுப்பு)

கவிதை

பாரதி நமது நதி
ஆம்பல் ஆறுமுகம்

வரலாறு

கண்ணந்தங்குடி வரலாறு
இலக்கிய வரலாறு

கட்டுரை

நல்லதோர் வீணை

உரைநடை

வீரபத்திர இராமாயணக்கும்மி

சுவடிப்பதிப்பு

வீரபத்திர இராமாயணக்கும்மி 1
வீரபத்திர இராமாயணக்கும்மி 2
சிறுவர் இலக்கியம்
மயக்குறு மாக்கள்

நாட்டுப்புறவியல்

நஞ்சைநாட்டு மனிதர்கள்
நாட்டுப்புறக்கதைகள்
நாட்டுப்புற நகைச்சுவைகள்

பெற்ற விருதுகள்

1.காலவெள்ளம்- சிறந்த நூலுக்கான தமிழக அரசின் பரிசு
2.தமிழறிஞர்கள் மகனுக்குப் பிரிவில் மருத்துவப் படிப்புக்கான இடம்
3.செங்கமலத்தாயார் அறக்கட்டளை இலக்கியவிருது (மன்னார்குடி 2011)

தொடர்பு முகவரி:

பேராசிரியர் ச.சுபாசு சந்திரபோசு
43, அருள்வனம், திருச்சி புறவழிச்சாலை
நாஞ்சிக்கோட்டை அஞ்சல்
தஞ்சாவூர்-

செல்பேசி: 0091 9894905038

1 கருத்து:

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

"காலத்தே பதிதல் என்பது, நல் பருவத்தில் விதை விதைப்பது போன்றது!"

"இலக்கண அறிஞர் ச.சுபாசு சந்திரபோசு" பற்றி தாங்கள் பதிந்தது மிக உயர்வான அறிமுகப் பதிவு!. யாரோ செய்வார்கள் என்று இருந்திடாமல், தங்கள் செய்யும் இத் தொண்டு அந்த தமிழ் அன்னைக்கு செய்யும் உயரியத் தொண்டாகும்.

தங்கள் பணி சிறக்க எனது வாழ்த்துகள்.

அன்புடன்

-தோழன் மபா.
தமிழன் வீதி.