புதன், 20 ஜூன், 2012
தி இந்தியன் எக்சுபிரசு நாளிதழுக்கு நன்றி…
இந்தியன் எக்சுபிரசு மதுரைப் பதிப்பு(18.06.2012, பக்கம் 2)
மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் நடைபெற்ற(17.06.2012) தமிழ் இணையப் பயிலரங்கிற்குச் சென்றபொழுது புதிய நண்பர்கள் பலருடன் உரையாடும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் ஆதரவில் நடைபெற்ற இப்பயிலரங்கம் குறித்த செய்தி அமைப்பாளர்களால் மதுரை நகரம் முழுவதும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இணையப் பயிலரங்க நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாகத் தி இந்தியன் எக்சுபிரசு நிறுவனத்தின் சிறப்புச் செய்தியாளர் அவர்கள் என்னைச் சந்தித்துத் தமிழ் இணையப் பயிலரங்கம் குறித்த பல விவரங்களை ஆர்வமாகக் கேட்டார்கள். பிறகு என் கல்விப் பின்புலம், தமிழ் இணையப் பரவலில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் என் முயற்சி, தமிழ் இணையப் பயிலரங்கத்தால் உலக அளவில் இந்த முயற்சி ஆர்வமுடன் கவனிக்கப்படுவதையெல்லாம் நான் எடுத்துரைத்தேன். இந்தியன்எக்சுபிரசு செய்தியாளர் அவர்கள் அனைத்து விவரங்களையும் சிறப்பாகப் பதிவுசெய்துகொண்டார்கள்.
பயிலரங்கம் தொடங்கியதும் அந்த நிறுவனத்தின் ஒளிப்படக்கலைஞரும் வந்து சிறப்பாகப் படங்களை எடுத்துக்கொண்டார்.
அன்றைய நாள் முழுவதும் சற்றொப்ப ஆறு மணிநேரம் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சி முடிந்து இரவே நான் புதுச்சேரிக்குப் புறப்பட்டுவிட்டேன். விடியற்காலை புதுச்சேரி வந்து சேர்ந்தேன். 18.06.2012 காலை மதுரையிலிருந்து முனைவர் வா. நேரு அவர்கள் செல்பேசியில் தொடர்பு கொண்டு, இந்தியன் எக்சுபிரசு இதழில் என் நேர்காணல் மிகச்சிறப்பாக வெளிவந்துள்ளதாகவும் தென்தமிழகம் முழுவதும் இந்தச் செய்தி வெளியாகும் எனவும் மகிழ்ச்சியுடன் கூறினார்கள். இந்த நேர்காணல் வாயிலாகத் தமிழ் இணையப் பயிலரங்கம் குறித்த செய்தி நன்கு பரவும் என்று நம்புகின்றேன். கன்னியாகுமரி, பாளையங்கோட்டை, தென்காசி எனத் தென் தமிழகத்தின் பலபகுதிகளிலிருந்தும் நண்பர்கள் நாளிதழ்ச்செய்தி கண்டு, பாராட்டிப்பேசினர்.
என் தமிழிணையப் பணியை உலகுக்கு அறிமுகப்படுத்திய தி இந்தியன் எக்சுபிரசு நிறுவனத்தாருக்கும், செய்தி ஆசிரியர், செய்தியாளர், ஒளிஓவியர் ஆகியோருக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றியைப் பணிவுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
7 கருத்துகள்:
ஆச்சர்யமாக உள்ளது, என்னை நானே ஒரு முறை கிள்ளிப்பார்த்துக் கொள்கிறேன். ஸ்ஸ்ஸ் ஆஹ், உண்மைதான். ஒரு தமிழ் பயிலரங்க கட்டுரைக்கு ஆங்கில இதழில் செய்திவெளியிட்டமைக்கு இ.எ க்கு நன்றிகள்.
வாழ்த்துக்கள் நண்பரே, பயணம் செய்ய வேண்டிய தூரம் இன்னும் வெகு தொலைவு உள்ளது, தொடர்க உமது பயணத்தை
வாழ்த்துகள் ஐயா!!
வணக்கம் ஐயா,
தங்களிடம் கேட்ட பாடத்தைப் பயன்படுத்தியே எனது மின்னஞ்சல் முகவரியை உருவாக்கினேன்.
மேலும், தமிழிலில் இணைய தளம் உருவாக்கத் தங்களால் பயிற்றுவிக்கப்பட்ட 10,000 மாணவர்களின் நானும் ஒருவன் என்பதில் பெருமை கொள்கிறேன்.
தங்களது இந்த முயற்சிக்கு எனது பாராட்டுகள்.
அன்பன்
கி.காளைராசன்
வாழ்த்துகள் !!!
வாழ்த்துக்கள் அய்யா.
தங்களின் பணி மேலும் மேலும் சிறக்கட்டும்.
தமிழில் வலைப்பூவை உருவாக்கத் தாங்கள் எனக்கும் பயிற்றுவித்தீர்கள் என்பதைச் சொல்லிக்கொள்வதில் நானும் பெருமகிழ்வு கொள்கிறேன்.
கருத்துரையிடுக