நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 21 மார்ச், 2008

புதுச்சேரியில் அயல்நாட்டு அறிஞர்களின் சிறப்புக் கலந்துரையாடல் நிகழ்ச்சி

புதுச்சேரி உளவியல் சங்கத்தின் சார்பில் புதுவைத் தமிழ்ச் சங்கக் கட்டடத்தில் 21.03.2008 மாலைஆறு மணிக்கு அயல்நாட்டு அறிஞர்கள் கலந்துகொள்ளும் சிறப்புக் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

முனைவர் மு.இளங்கோவன் வரவேற்புரையாற்ற, முனைவர் பாஞ்.இராமலிங்கம் கலந்துரையாடலின் நோக்கம் பற்றி எடுத்துரைக்க உள்ளார். முனைவர் வி.முத்து அவர்கள் தலைமையில் நடைபெறும் விழாவில் சிறப்பு விருந்தினராகப் புதுச்சேரி அரசின் மேனாள் கல்வி அமைச்சர் க.இலட்சுமிநாராயணன் அவர்கள் கலந்துகொள்கிறார்.

செர்மணி செம்ணிட்சு தொழில்நுட்பப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் பீட்டர் செடில்மேயர், சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் ஆ.இரா.சிவகுமாரன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளனர்.

முனைவர் சீனிவாசன் அவர்கள் வாழ்த்துரை வழங்க உள்ளார்.

அனைவரையும் புதுச்சேரி உளவியல் சங்கம் அழைக்கிறது.

6 கருத்துகள்:

மாலன் சொன்னது…

செய்தி அறிய மகிழ்ச்சி. நிகழ்ச்சி சிறப்புற அமைய என் அன்பான வாழ்த்துகள் -மாலன்

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

தங்கள் அன்பான வாழ்த்திற்கு நன்றி.
மு.இளங்கோவன்

அ. பசுபதி (தேவமைந்தன்) சொன்னது…

makizhcchi! manamuvandha paaraattukaL! vizhaa veRRipeRa vaazhththukkaL!
Thirucchikkup puRappttuk konduLLEn. thuNaiviyaar vivaram solliyiruppaarkaL.
anbudan
Devamaindhan

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

தங்கள் பாராட்டிற்கு நன்றி.
துன்ப நிகழ்வு ஒன்றிற்குப் புறப்படும்
சூழலிலும் பாராட்டும் தங்கள் பண்பை
வணங்குகிறேன்.
நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது.
மு.இளங்கோவன்

அ. பசுபதி (தேவமைந்தன்) சொன்னது…

நிகழ்ச்சி சிறப்பாக நடந்தமைக்குப் பாராட்டுகள்! தங்களின் முயற்சியும் புதுச்சேரிக்குத் தாங்கள் தந்துவரும் பங்களிப்பையும் போற்றுகிறேன்!
அன்புடன்,
தேவமைந்தன்

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

தங்ககள் அன்பிற்கு நன்றியன்
மு.இளங்கோவன்