திருநெல்வேலியை அடுத்துள்ள பாளையங்கோட்டையில் திருநெல்வேலித் தனித்தமிழ் இலக்கியக் கழகம் என்னும் தமிழமைப்பினைப்
பேராசிரியர் பா. வளன் அரசு
அவர்கள் கடந்த ஐம்பத்து நான்கு
ஆண்டுகளாக நடத்தி வருகின்றார். கல்லூரி
மாணவர்களின் எழுத்தாற்றலையும் பேச்சாற்றலையும் வளப்படுத்துவது இவ்வமைப்பின் தலையாய பணிகளுள் ஒன்றாகும்.
தமிழக அளவில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில்
பயிலும் மாணவர்கள் இவ்வமைப்பு நடத்தும் ஆய்வுக்கட்டுரைப் போட்டியில் கலந்துகொண்டு,
ஆய்வுக்கட்டுரை எழுதி, முதல் தகுதிபெறும் எழுத்தோவியத்திற்கு இருபத்தைந்தாயிரம் மதிப்புடைய
தங்கப்பதக்கமும், அவர் பயிலும் கல்லூரிக்கு இருபத்தைந்தாயிரம் மதிப்புடை த.பி.சொ.அரிராம்
சேட்டு நினைவு வெள்ளிச் சுழற்கோப்பையும் பரிசாகப் பெற இயலும்.
இந்த
ஆண்டு ஆய்வுக்கட்டுரை எழுதுவதற்குரிய தலைப்பு:
முத்தமிழ்க்
காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் எழுத்தோவியங்கள்.
தமிழகத்தின் அனைத்துப் பல்கலைக்கழகங்களைச்
சார்ந்த கல்லூரிகளில் பயிலும் ஆண், பெண் ஆகிய
இருபாலரும் இப்போட்டியில் கலந்துகொள்ளலாம்.
எழுத்துரை அறுபது பக்கங்களுக்குக் குறையாமலும்
எழுபது பக்கங்களுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். துணைநூற்பட்டியும் இணைத்தல் வேண்டும்.
முத்தமிழ்க்
காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் எழுத்துப்பணியை விளக்கும் வகையில் ஆய்வுரை அமைதல்
வேண்டும்.
ஆய்வுக்கட்டுரை
அனுப்ப இறுதி நாள்: 16.12.2019
கட்டுரையை
அனுப்ப வேண்டிய முகவரி:
முனைவர் பா.வளன் அரசு,
எண்
3, நெல்லை நயினார் தெரு,முனைவர் பா.வளன் அரசு,
பாளையங்கோட்டை
– 627 002, திருநெல்வேலி மாவட்டம்.
பரிசுகள்
08.02.2020 காரி(சனி)க் கிழமை மாலை நெல்லையில் நடைபெறும் விழாவில் வழங்கப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக