நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2012

புறநானூறு உரை - நூல்வெளியீட்டு விழா

அமெரிக்கப் பொறியாளர் முனைவர் இர. பிரபாகரன் அவர்கள் எழுதிய புறநானூறு(1-200) உரை நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறுகின்றது. காவ்யா பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த நூல் சென்னைத் தேவநேயப்பாவாணர் நூலக அரங்கில் வெளியீடு காண உள்ளது.

பேரா.சு.சண்முகசுந்தரம், மருத்துவர் இர.பாஸ்கரன், முனைவர் ஜி.விசுவநாதன், முனைவர் மு.அனந்தகிருஷ்ணன், முனைவர் ப.மருதநாயகம், பேராசிரியர் இல.மறைமலை, பேரா.முருகரத்தனம், சொ.சீனிவாசன், பேராசிரியர் உருக்குமணி, இல.சுந்தரம் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

அமெரிக்காவில் உள்ள தமிழர்களுக்குப் புறநானூறு வகுப்புகள் நடத்திய பட்டறிவுடன் பொறியாளர் இர.பிரபாகரன் அவர்கள் புறநானூறுக்குப் பொருத்தமான உரை வரைந்துள்ளார்கள். தமிழார்வலர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்கலாம்.

நாள்; 21.02.2012, செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணி
இடம்: சென்னை, தேவநேயப்பாவாணர் நூலக அரங்கம்

1 கருத்து:

T.S.Kandaswami சொன்னது…

Thank you professor for the information . It is a commendable effort .Wish the function all suceess.