திங்கள், 21 மார்ச், 2011
மதுரைத் தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம் -முனைவர் கு. கல்யாணசுந்தரம் (சுவிசு) சிறப்புப் பொழிவு
மதுரைத் தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம்
(Project Madurai)
நிறுவுநர் முனைவர் கு. கல்யாணசுந்தரம் (சுவிசு)
சிறப்புப் பொழிவு
நாள்:28.03.2011, திங்கட்கிழமை
நேரம்:மாலை 6.30 - 8.00 மணி
இடம்:புதுவைத் தமிழ்ச்சங்கம்,
எண்.2, தமிழ்ச் சங்க வீதி, வெங்கட்டா நகர், புதுவை - 605 011.
அன்புடையீர் ! வணக்கம்.
தமிழ் இலக்கியங்களையும், இலக்கண நூல்களையும் மின் வடிவப்படுத்தி, உலகெங்கும் பரவியுள்ள தமிழர்கள் இலவயமாகப் பயன்படுத்தும் நோக்கில் மதுரைத்திட்டம் என்னும் பெயரில் இணையத்தில் பயன்பாட்டுக்கு வைத்துள்ள சுவிசர்லாந்தில் வாழும் முனைவர் கு. கல்யாணசுந்தரம் அவர்கள் தம் மதுரைத்திட்டப் பணிகள் குறித்துப் புதுவைத் தமிழ்ச்சங்கத்தில் சிறப்புரையாற்ற உள்ளார்கள். அனைவரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இணையத் தமிழின் பயன் நுகர அழைக்கின்றோம்.
நிகழ்ச்சி நிரல்
தமிழ்த்தாய் வாழ்த்து
தலைமை: முனைவர் வி. முத்து அவர்கள்
தலைவர், புதுவைத் தமிழ்ச்சங்கம்.
வரவேற்புரை:முனைவர் மு. இளங்கோவன் அவர்கள்
சிறப்புரை:முனைவர் கு. கல்யாணசுந்தரம் அவர்கள்
(நிறுவுநர், மதுரைத்திட்டம், சுவிசர்லாந்து)
தலைப்பு: மதுரைத்திட்டம் மின்பதிப்புப் பணிகள்
நன்றியுரை: முனைவர் ஆ. மணி அவர்கள்
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!-பாவேந்தர்
அனைவரும் வருக !
விழாக்குழுவினர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
3 கருத்துகள்:
நன்முயற்சி. தொடரட்டும். பாராட்டுக்கள்.
அவஸ்யமான முயற்சி. நல்வாழ்த்துகள்.
மு. இளங்கோவன், முனைவர் கு. கல்யாணசுந்தரம் அவர்களை இணையம் வாயிலாக அறிவேன். காலம் சென்ற முனைவர் இரா.திருமுருகனாரின் சிந்துப் பாவியலை ஒருங்குறியில் தட்டச்சு செய்து மதுரைத் திட்டத்தில் சேர்த்திருக்கிறேன். மதுரைத் திட்டத்தின் படைப்புகளை என் வலைதளத்தில் வலையேற்றவும் அவரிடம் அனுமதி வேண்டியிருக்கிறேன். மிக்க மகிழ்ச்சி.
கருத்துரையிடுக