நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 27 மார்ச், 2014

தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் அறக்கட்டளைக் கருத்தரங்கம்


முனைவர் எஸ். பத்மநாபன் உரை


தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் அறக்கட்டளை சார்பில் இன்று (27.03.2014) பிற்பகல் 2 மணியளவில் சமூக மாற்றமும் இதழ்களும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. ஆய்வுக்களஞ்சியம் இதழாசிரியர் முனைவர் எஸ். பத்மநாபன் அவர்கள் வரலாற்று இதழ்கள் என்ற தலைப்பிலும், முனைவர் மு.இளங்கோவன் மின் இதழ்கள் என்ற தலைப்பிலும் உரையாற்றினர். தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மாண்பமை துணைவேந்தர் ம. திருமலை அவர்களும், பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியர்கள் பலரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். தமிழ் இலக்கியத் துறைத்தலைவர் முனைவர் க. திலகவதி அவர்கள் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக இருந்து நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்தினார்.

துணைவேந்தர் முனைவர் ம. திருமலை அவர்கள்


பேராசிரியர் க. திலகவதி வரவேற்புரை

1 கருத்து:

சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country சொன்னது…

தங்கள் வருகை மகிழ்வினைத் தந்தது. பணி காரணமாக தங்களைச் சந்திக்க இயலவில்லை.கருத்தரங்கு பற்றி நண்பர்கள் மூலமாகக் கேட்டறிந்தேன். நன்றி.