தமிழாண்டு எனப் பிரபவ தொடங்கி, அட்சய ஈறான அறுபது ஆண்டுப்பெயர்களும் தமிழ்ச்சொற்கள் இல்லை. யாவும் வடசொற்கள் ஆகும். வடசொற்களுக்கு நிகரான தமிழ்ச்சொற்களைக் கீழ்வரும் பட்டியலால் அறியலாம். முதலில் இருப்பவை தமிழ். அடுத்து இருப்பவை வடசொல். இவை "அறுபது வியாழ வட்ட ஆண்டுகள்" என்னும் தலைப்பில் கணியக் களரி என்னும் கணியக் கலைச்சொற்குவை என்னும் தலைப்பில் சேயாறு, வேளியநல்லூர், மூலை ஆற்றங்கரை கோரக்கர் அறிவர் பள்ளியில் மாணவர்களுக்கான தனிச்சுற்று ஏட்டில் ஆதி.சங்கரன் அவர்கள் வழங்கியுள்ளவை. உதவி: வே.முருகையன் அவர்கள்.
...........................................................................
தமிழ் - வடசொல்
1. முதற்பம்- பிரபவ
2. விறல் - விபவ
3. சுடரி - சுக்ல
4. பிறங்கல் - பிரமோதூத
5. குடிமை -பிரசோற்பத்தி
6. ஆளி - ஆங்கிரச
7. திருமுகம் - சிறீமுக
8. எழுச்சி - பவ
9. இளம்பி - யுவ
10. தாது - தாது
11. இறைமை - ஈசுவர
12. புண்ணியம் - வெகுதானிய
13. மயலி - பிரமாதி
14. வியன்திறல் - விக்கிரம
15. நிரலி - விசு
16. ஏரொளி - சித்திரபானு
17. நேரொளி - சுபானு
18. தராவம் - தாரண
19. அரசம் - பார்த்திப
20. வியல் - விய
21. ஆயசித்து - சர்வசித்து
22. ஆயவேலி - சர்வதாரி
23. வயிரி - விரோதி
24. வேற்றிகம் - விக்ருதி
25. கராளி - கர
26. நந்தனம் - நந்தன
27. கொற்றம் - விசய
28. வெற்றி - செய
29. மன்மதம் - மன்மத
30. தென்முகி - துன்முகி
31. நெடும்பாணி - ஏவிளம்பி
32. பாணி - விளம்பி
33. வியரி - விகாரி
34. ஆயகம் - சார்வரி
35. தாவகம் - பிலவ
36. நலமி - சுபகிருது
37. செழுமி - சோபகிருது
38. செம்மல் - குரோதி
39. விழுவகம் - விசுவாவசு
40. நன்புனலி - பராபவ
41. பாய்வகம் - பிலவங்க
42. கீலகம் - கீலக
43. எழில் - சௌமிய
44. பொதுமன் - சாதாரண
45. இரிபிகம் - விரோதிகிருது
46. தண்ணளி - பரிதாபி
47. மற்கி - பிரமாதீச
48. ஆனந்தம் - ஆனந்த
49. திண்மகம் - இராட்சச
50. நளம் - நள
51. பிங்களம் - பிங்கள
52. காளவுத்தி - காளயுக்தி
53. சித்தகம் - சித்தார்த்தி
54. உருத்திரம் - ரௌத்திரி
55. தென்மதி - துன்மதி
56. துந்துமி - துந்துபி
57. உகாரி - உருத்ரோத்காரி
58. கனலி - இரக்தாட்சி
59. குருத்திகம் - குரோதன
60. நிற்றியம் - அட்சய
12 கருத்துகள்:
நல்ல முயற்சி! ஆனால், எதற்கு இதை தமிழ் படுத்தவேண்டும். இந்த 60 ஆண்டு சுழற்சியே தவறான முறை.
இதனால், இன்னும் ஒரு நூறாண்டு கழித்து இதுதான் சரி, இந்த 60 ஆண்டு சுழற்சிக்கு தமிழிலே பெயர் இருக்குது பார் என்பார்கள். ஒரு இடைச்செருகலுக்கு இடம் கொடுத்து விட்டீர்கள்.
இந்த 60 ஆண்டு சுழற்சியே தவறான முறை. அப்புறம் அது எந்த மொழியில் இருந்தால் என்ன?
அன்பரீர், வணக்கம்.
வியாழ ஆண்டுமுறை, மதி ஆண்டு முறை, கதிரவ ஆண்டுமுறை என்று மூன்று கணக்குமுறைகள் பண்டைக்காலத்தில் தமிழர்களிடம் இருந்ததாக அறியமுடிகின்றது. கதிரவ ஆண்டில் கதிரவன் ஒருமுறை சுற்ற எடுத்துக்கொள்ளும் கால அளவு 365 நாள் என்பது போல் வியாழன் தன்னைச் சுற்ற எடுத்துக்கொள்ளும் கால அளவு 60 ஆண்டுகள் ஆகும்.
தமிழர்களிடம் தமிழ்ப்பெயரில் இருந்த இந்த ஆண்டுமுறையை வடமொழிவாணர்கள் தமிழர்களிடமிருந்து பெற்றனர். தமிழ்ச்சொற்களை வடமொழிச்சொற்களாக மாற்றிக்கொண்டனர். எனவே தமிழர்களின் வியாழவட்ட ஆண்டுமுறையை வடமொழியினரின் ஆண்டு என்று மருளும்போக்கு நிலைத்துள்ளது. இதுபற்றியெல்லாம் முடிவுசெய்ய தமிழ் வானியல், கணக்கியல் அறிஞர்களின் துணையை நாட வேண்டியுள்ளது. இது ஆய்வு என்பதால் உணர்ச்சிவயப்படவேண்டிய தேவை இல்லை. உண்மை கிடைக்கும்பொழுது முடிவு சரியானதாக இருக்கும்.
கிருஷ்ணனுக்கும் நாரதனுக்கும் பிறந்ததுதான் 60 தமிழ் ஆண்டுகள் என்று சொன்ன புராணப் புளுகுக்கு வலு சேர்க்கிறீர்கள்.
நமது தமிழ் புலவர்கள் செய்யும் தவறே அது தான்; அவர்களை அறியாமல் ஒரு பொய்யை உண்மையக்குகிறார்கள்.
உங்கள் காலத்திலேயே நீங்கள் இந்த கூத்தை பார்க்கத்தான் போகிறீர்கள்.
இளவங்கோவன்,
ஏன் இப்படி தவறான தகவல்களை பரப்புகிறீர்கள்?
//வியாழ ஆண்டுமுறை, மதி ஆண்டு முறை, கதிரவ ஆண்டுமுறை என்று மூன்று கணக்குமுறைகள் பண்டைக்காலத்தில் தமிழர்களிடம் இருந்ததாக அறியமுடிகின்றது.//
Q1: வியாழ ஆண்டுமுறை என்று எதில் வருகிறது? ஆதாரம்??
*********
// கதிரவ ஆண்டில் கதிரவன் ஒருமுறை சுற்ற எடுத்துக்கொள்ளும் கால அளவு 365 நாள் //
Q2: என்ன சொல்கிறீர்கள்??? கதிரவன் யாரைச் சுற்ற 365 நாள் எடுக்கிறது?
Q3: கதிரவன் --> சூரியன் --> Sun
Sun ஒரு நட்சத்திரம் . அது யாரைச் சுற்றுகிறது?
Q4:பூமியானது சூரியனைச் சுற்ற 365 நாள் எடுத்துக்கொள்கிறது என்பதை 17 மே, 2012 இருந்து மாற்றிவிட்டார்களா?
//என்பது போல் வியாழன் தன்னைச் சுற்ற எடுத்துக்கொள்ளும் கால அளவு 60 ஆண்டுகள் ஆகும்.//
என்ன கொடுமை இது?
Q5: வியாழன் என்றால் Jupiter
சரியா? வியாழன் யாரைச் சுற்ற 60 ஆண்டுகள் எடுக்கிறது?
Jupiter தன்னைத்தானே சுற்ற (பூமியின் 24 மணி நேரம் போல) எடுத்துக்கொள்ளும் நேரம் 9.92 hrs
Jupiter சூரியனைச் சுற்றிவர எடுத்துக்கொள்ளும் நாட்கள் (பூமியின் 365 நாட்கள் போல) 4333 நாட்கள் ~12years
http://nssdc.gsfc.nasa.gov/planetary/factsheet/jupiterfact.html
*****************
//இதுபற்றியெல்லாம் முடிவுசெய்ய தமிழ் வானியல், கணக்கியல் அறிஞர்களின் துணையை நாட வேண்டியுள்ளது. இது ஆய்வு என்பதால் உணர்ச்சிவயப்படவேண்டிய தேவை இல்லை. உண்மை கிடைக்கும்பொழுது முடிவு சரியானதாக இருக்கும். //
தயவுசெய்து இந்தக்கட்டுரையை எடுத்துவிடுங்கள்.
Q6: வியாழனுக்கும் 60 ஆண்டு சுற்றுக்கும் என்ன தொடர்பு என்று இந்தக்கால அறிவியல் அறிஞர்கள் சொன்னதை காட்டுங்கள்.
Q7: அதுபோல தமிழர்கள் எந்தக் காலத்தில் இந்த வியாழன் 60 ஆண்டு சுற்று ஆண்டுகள் தொடர்பைக் கண்டுபிடித்தார்கள், என்றும் எந்தக்காலத்தில் வியாழவட்ட ஆண்டுமுறையை 60 பயன்படுத்தினார்கள் என்றும் காட்டுங்கள்.
*****
ஏன் இந்தக் கொடுமை? தமிழ் ஆண்டில் இருக்கும் குழப்பங்கள் போதாதா? :-(((((
சங்க காலத் தமிழர் ஓர் ஆண்டினை ஆறு பருவங்களாக பகுத்தனர். ஒவ்வொரு பருவமும் இரண்டு மாதங்களைக் கொண்டிருந்தது. கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என வழங்கப்பட்ட இந்த ஆறு பருவங்கள் தமிழுக்கே உரிய அகத்திணை மரபின் அடிப்படையாகும்.
குமரிக் கண்டத்தில் வாழ்ந்த தமிழர்கள் தென்திசையில் நின்ற கதிரவன் வடதிசைக்குச் செல்ல தொடங்கும் (உத்தராயணம்) நாளையும் இணைத்து கொண்டாடினர். இதன் மூலம் தைத்திங்கள் முதல்நாள் தமிழர் பண்பாட்டுத் தளத்தில் சிறப்பான இடத்தைப் பெற்றது.
தமிழ்நாட்டில் கிடைத்துள்ள இலக்கிய, கல்வெட்டு சான்றுகளின்படி ஞாயிற்றை அடிப்படையாகக் கொண்ட தும் சித்திரையில் தொடங்கப் பெறுவதுமான ஞாயிற்று ஆண்டுக் கணக்கு ஒன்றும், கல்வெட்டுச் சான்றுகளின்படி வியாழனை அடிப்படை யாகக் கொண்ட வியாழ ஆண்டுக் கணக்கு ஒன்றும் பின்பற்றப்பட்டு வந்துள்ளன. ஞாயிற்று ஆண்டை சோழ மன்னர்களும், வியாழ ஆண்டை பாண்டியர்களும், சேரர்களும் பின்பற்றியுள்ளனர் என முனைவர்
க. நெடுஞ்செழியன் கூறியுள்ளார்.
சிந்து சமவெளி நாகரிக மக்களால் பின்பற்றப்பட்ட ஆண்டு வியாழ ஆண்டே என்பதை ருசிய அறிஞர்கள் நிறுவியுள்ளனர். 1985ஆம் ஆண்டு மாஸ்கோவில் நடை பெற்ற மகாநாட்டில் ஆய்வுரை வழங்கிய அறிஞர்கள் இந்த உண்மையை வெளியிட்டனர். 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்துசமவெளி யில் பரவியிருந்த நாகரிகம் எகிப்திய மெசபடோமிய நாகரிகங்களைவிட மிக முந்தியது. அதிகமான பரப்பில் பரவியிருந்தது என்பதையும் அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 14-10-85ம் நாளிட்ட தினமணி இதழ் இச்செய்தியை விரிவாக வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 60 ஆண்டு கணக்குமுறை வியாழ ஆண்டிற்கு உரியதாக இருந்தது. பின்னர் ஞாயிற்றாண்டோடு இது கலந்துவிட்டது. இந்த முறை கி.பி. 312ஆம் ஆண்டில் தொடங்கியதாக அறிஞர்கள் கருதுகின்றனர். ஆயினும் 14ஆம் நூற்றாண்டின் இறுதியில் நாயக்க மன்னர்களால் இம்முறை தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதை கல்வெட்டுகள் வழியாக அறிய முடிகிறது.
ஞாயிற்று ஆண்டை அடிப்படை யாகக் கொண்டு ஆண்டிற்கு 365 நாட்கள் என வகுத்ததும் தமிழர்களே என்பதை கிரேக்க நாட்டுப் பயணியான மெகஸ்தனிஸ் எழுதிய குறிப்புகளின் மூலம் அறிகிறோம்.
சாலிவாகன சகம் என்ற ஆண்டுமுறை சித்திரை மாதத்தை முதல் நாளாக கொண்டி ருந்தது. இதுதவிர
பசலி, கொல்லம் என்னும் தொடர் ஆண்டுகளும் தமிழகத்தில் வழக்கில் இருந்தன.
சங்க காலத் தமிழர் ஓர் ஆண்டினை ஆறு பருவங்களாக பகுத்தனர். ஒவ்வொரு பருவமும் இரண்டு மாதங்களைக் கொண்டிருந்தது. கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என வழங்கப்பட்ட இந்த ஆறு பருவங்கள் தமிழுக்கே உரிய அகத்திணை மரபின் அடிப்படையாகும்.
குமரிக் கண்டத்தில் வாழ்ந்த தமிழர்கள் தென்திசையில் நின்ற கதிரவன் வடதிசைக்குச் செல்ல தொடங்கும் (உத்தராயணம்) நாளையும் இணைத்து கொண்டாடினர். இதன் மூலம் தைத்திங்கள் முதல்நாள் தமிழர் பண்பாட்டுத் தளத்தில் சிறப்பான இடத்தைப் பெற்றது.
தமிழ்நாட்டில் கிடைத்துள்ள இலக்கிய, கல்வெட்டு சான்றுகளின்படி ஞாயிற்றை அடிப்படையாகக் கொண்ட தும் சித்திரையில் தொடங்கப் பெறுவதுமான ஞாயிற்று ஆண்டுக் கணக்கு ஒன்றும், கல்வெட்டுச் சான்றுகளின்படி வியாழனை அடிப்படை யாகக் கொண்ட வியாழ ஆண்டுக் கணக்கு ஒன்றும் பின்பற்றப்பட்டு வந்துள்ளன. ஞாயிற்று ஆண்டை சோழ மன்னர்களும், வியாழ ஆண்டை பாண்டியர்களும், சேரர்களும் பின்பற்றியுள்ளனர் என முனைவர் க. நெடுஞ்செழியன் கூறியுள்ளார்.
சிந்து சமவெளி நாகரிக மக்களால் பின்பற்றப்பட்ட ஆண்டு வியாழ ஆண்டே என்பதை ருசிய அறிஞர்கள் நிறுவியுள்ளனர். 1985ஆம் ஆண்டு மாஸ்கோவில் நடை பெற்ற மகாநாட்டில் ஆய்வுரை வழங்கிய அறிஞர்கள் இந்த உண்மையை வெளியிட்டனர். 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்துசமவெளி யில் பரவியிருந்த நாகரிகம் எகிப்திய மெசபடோமிய நாகரிகங்களைவிட மிக முந்தியது. அதிகமான பரப்பில் பரவியிருந்தது என்பதையும் அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 14-10-85ம் நாளிட்ட தினமணி இதழ் இச்செய்தியை விரிவாக வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 60 ஆண்டு கணக்குமுறை வியாழ ஆண்டிற்கு உரியதாக இருந்தது. பின்னர் ஞாயிற்றாண்டோடு இது கலந்துவிட்டது. இந்த முறை கி.பி. 312ஆம் ஆண்டில் தொடங்கியதாக அறிஞர்கள் கருதுகின்றனர். ஆயினும் 14ஆம் நூற்றாண்டின் இறுதியில் நாயக்க மன்னர்களால் இம்முறை தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதை கல்வெட்டுகள் வழியாக அறிய முடிகிறது.
ஞாயிற்று ஆண்டை அடிப்படை யாகக் கொண்டு ஆண்டிற்கு 365 நாட்கள் என வகுத்ததும் தமிழர்களே என்பதை கிரேக்க நாட்டுப் பயணியான மெகஸ்தனிஸ் எழுதிய குறிப்புகளின் மூலம் அறிகிறோம்.
சாலிவாகன சகம் என்ற ஆண்டுமுறை சித்திரை மாதத்தை முதல் நாளாக கொண்டி ருந்தது. இதுதவிர
பசலி, கொல்லம் என்னும் தொடர் ஆண்டுகளும் தமிழகத்தில் வழக்கில் இருந்தன.
///குமரிக் கண்டத்தில் வாழ்ந்த தமிழர்கள் தென்திசையில் நின்ற கதிரவன் வடதிசைக்குச் செல்ல தொடங்கும் (உத்தராயணம்) நாளையும் இணைத்து கொண்டாடினர்.///
மன்னிக்க வேண்டும். ஒரே தவறை எத்தனை முறை கூறினாலும் உண்மையாகாது. தயவு செய்து நான் கூறுவதை சரியான முறையில் எடுதுக் கொள்ளுங்கள்.
நமது முன்னோர்களுக்கு இருந்த அப்போது அறிவு அவ்வளவு தான். இந்த அறிவை என்று நான் சொல்லுவது முட்டாள்கள் என்று அர்த்தம் எடுத்துக் கொள்ளவேண்டாம். அப்போது இருந்த அறிவு என்றால் ஆங்கிலத்தில்...Data-> Information-> knowledge-> Wisdom என்று எடுத்துக் கொள்ளுங்கள்.
இப்பொழுது இருக்கும் knowledge and Wisdom அப்போது உலகத்தில் யாருக்கும் இல்லை. உலகம் தட்டை என்று தன் எல்லோரும் நினைத்துக் கொண்டு இருந்தார்கள். சூரியன் ஒரு கிரகமும் அல்ல! அது எங்கும் நகர்வது இல்லை. கதிரவன் வடதிசைக்குச் செல்லவது மாதிரரி ஒரு தோற்றமே! பூமி திரும்புவதால் அது மாதிரி ஒரு தோற்றம். அதில் தவறு அல்லை. அப்போது இருந்த knowledge and Wisdom அவ்வளவு தான்.
மன்னிக்க வேண்டும், தமழில் எனக்கு இதற்க்கு மேல் அழகாக விளக்கி எழுத வரவில்லை.
ஆனால், இந்த "கிருஷ்ணனுக்கும் நாரதனுக்கும் பிறந்ததுதான் 60 தமிழ் ஆண்டுகள் என்று சொன்ன புராணப் புளுகுக்கு வலு சேர்ப்பதால்," நான் எதிர்த்தேன்!
ஒரு செய்தியைப் பகிரும் முன்னர் நன்கு ஆய்ந்தறிய வேண்டும் என்பதை முகநூல் (Facebook) மூலம் கற்றுக் கொண்டேன். பூம்புகார் குறித்து ஒரு பதிவைப் பகிர்ந்த போது நண்பர் ஒருவர் அப்பதிவிலிருக்கும் சில கருத்துகள் அறிவியல் அடிப்படையற்றது என்பதைத் தெளிய வைத்தார். நம் மொழி மீது இருக்கும் பற்றினால் அறிவியிலில் இருந்து விலகிவிடக் கூடாது. நமக்குத் தேவை முத்தமிழோடு நான்காம் தமிழான அறிவியில் தமிழ்.
அன்பிற்குரிய இராஜ்குமார் உள்ளிட்ட நண்பர்களே!
தங்கள் கருத்தினைப் பதிந்தமைக்கு நன்றியன்.
தங்கள் தமிழ்ப்பற்றும் அறிவியல் பார்வையும் மகிழ்ச்சி தருகின்றன. பண்டைக் காலத்தில் தமிழர்கள் எவ்வாறு மிகப்பெரும் அறிவுபெற்றவர்களாக இருந்துள்ளனர் என்பதை அறியவும், அவற்றைப் பிற்காலத்தில் வேற்றவர் எவ்வாறு கவர்ந்துகொண்டனர் என்பதை அறியவும் மேற்கொள்ளும் சிறு ஆய்வு முயற்சி இது என்ற அளவில் இந்த இழையை வளர்த்தெடுப்போம்.
அனைவருக்கும் நன்றியன்.
வியாழ வட்ட ஆண்டுமுறை குறித்த ஒரு தெளிவு:
18.05.2012 இல் வெளியிட்ட என் கருத்துரையில் சிறு பொருட்குழப்பம் தரும்படி பதிய நேர்ந்தமைக்கு வருந்துகின்றேன். புவி தன்னைத்தானே ஒருமுறை சுற்ற எடுத்துக்கொள்ளும் கால அளவு 24 மணி நேரம் ஆகும். புவி, கதிரவனை ஒருமுறை சுற்ற எடுத்துக்கொள்ளும் கால அளவு 365 நாள் ஆகும். அதுபோல் வியாழன் ஒருமுறை கதிரவனைச் சுற்ற எடுத்துக்கொள்ளும் கால அளவு 1 2 ஆண்டு ஆகும். ஆனால் சிலபொழுது ஒருமுறை சுற்ற 11.08ஆண்டு எனவும், 11.09ஆண்டு எனவும்,12.02 ஆண்டு எனவும் அமைவது உண்டு. ஐந்து முறை வியாழன் கதிரவனைச் சுற்றும்பொழுது சராசரியாக (5x12=60)அறுபது என்ற கணக்கைப் பெறுவதால் இந்த அமைப்பில் தமிழர்கள் வியாழ ஆண்டை அமைத்தனர். ஆனால் தொன்மச் செய்திகளைப் புகுத்தி வடவர்கள் கதை கட்டிய காரணத்தால் நம் கணக்குமுறையையே நாம் வெறுத்தொதுக்க நேர்ந்துள்ளது.
//ஐந்து முறை வியாழன் கதிரவனைச் சுற்றும்பொழுது சராசரியாக (5x12=60)அறுபது என்ற கணக்கைப் பெறுவதால் இந்த அமைப்பில் தமிழர்கள் வியாழ ஆண்டை அமைத்தனர்.//
இளங்கோவன்,
ஏன் இப்படி பிடித்த முயலுக்கு மூணூகால் கதை...?? :-(((
1.நாம் ஆண்டு என்று சொல்வது பூமி சூரியனைச் சுற்றும் காலம்.
2.வியாழனுக்கு அது சூரியனைச் சுற்றும் காலம்தான் ஆண்டு.
(சிங்கப்பூர் டாலர் வேறு அமெரிக்க டாலர் வேறு)
3. வியாழனின் ஒரு ஆண்டானது , ஒப்பீட்டளவில் பூமியின் ஆண்டிற்கு 12 மடங்காக உள்ளது என்பதே கணிதம் மற்றும் அறிவியல். அதற்காக வியாழன் சூரியனைச் சுற்ற 12 ஆண்டுகள் எடுக்கிறது என்று ஒப்பீடு இல்லாமல் சொல்வது தவறு.
***
அதை விடுங்கள்
4. = 60 என்ற கணக்கு வரவேண்டும் என்றால், எந்தக் கோளின் சுற்றுக்கணக்கையும் சராசரியாக 60 க்கு கொண்டுவர முடியும்.
5.நீங்கள் 60 என்பதில் மாறாமல் இருக்க, உங்கள் எண்ணப்படி 12 x 5 =60 என்று எதோ ஒரு கணக்கைச் சொல்கிறீர்கள்.
6.ஏன் 1x60=60 என்று கூட கணக்குச் சொல்லி பூமியையும் இந்த 60 உடன் தொடர்பு படுத்தலாம்.
7. Saturn சூரியணைச் சுற்ற எடுக்க ஆகும் காலம் 29.46 பூமி ஆண்டு. தோராயமாக இதை 30 என்று கொண்டால்... பூமியை இரண்டுமுறை சுற்ற எடுக்கும் ஆண்டு 60 என்றுகூட கொண்டுவரலாம்.
30x 2 = 60
7.அறிவியலோடு விளையாட வேண்டாம். :-((((
மதங்கள் அறிவியலை வளைப்பதுபோல மொழி என்ற பெயரில் உங்கள் பங்கிற்கு எதையாவது சொல்ல வேண்டாம்.
உலக அறிவியல் எல்லாம் ஏற்கனவே தமிழில் உள்ளது (இஸ்லாமியரின் குரான் போல) என்று தமிழை புனிதமாக்க முனைவதில் உடன்பாடு இல்லை.
*****
உங்களுக்கான கேள்வி.
------------------------
எந்தப் "புத்தகத்தில்" அல்லது எங்கு உள்ள "கல்வெட்டில்" அல்லது எங்கே கண்டெடுக்கப்பட்ட "ஓலைச் சுவடியில்" .....;;
தமிழன் வியாழன் சூரியனைச் சுற்ற எடுக்கும் ஆண்டான 12 (பூமியுடன் ஒப்பீட்டளவு) ஐ எடுத்துக்கொண்டுஇ அதை 5 ஆல் பெருக்கி (5x 12 ஐந்து முறை சுற்ற) 60 என்று கணித்தான் என்று சொல்லவும்.
அதற்கான பிரதி இருந்தால் இங்கே அந்தப் பக்கத்தை மட்டும் வெளியிடவும்.
வெறுமனே ஜிம்பிளிக்கா ஜிங்கா என்று ஏதாவது ஒரு வார்த்தையைச் புத்தகத்தின் பெயராகச் சொல்ல வேண்டாம். :-)))
அப்படி என்றால் நான்கூட "களவுலமள" என்ற பண்டைக்கால தமிழ்ப் புத்தகத்தில் "கடவுள் என்பவரின் பெயர் டவுசர்" என்று உள்ளது என்று சொல்லிச் செல்லலாம்.
..
அன்புள்ள திரு இளங்கோவனுக்கு, இந்த Reference-ஐப் பாருங்கள்....
http://en.wikipedia.org/wiki/Galileo_Galilei
///Galileo Galilei (Italian pronunciation: [ɡaliˈlɛːo ɡaliˈlɛi]; 15 February 1564[4] – 8 January 1642),[1][5] was an Italian physicist, mathematician, astronomer, and philosopher who played a major role in the Scientific Revolution. His achievements include improvements to the telescope and consequent astronomical observations and support for Copernicanism. Galileo has been called the "father of modern observational astronomy",[6] the "father of modern physics",[7] the "father of science",[7] and "the Father of Modern Science"
Galileo was found "vehemently suspect of heresy", namely of having held the opinions that the Sun lies motionless at the centre of the universe, that the Earth is not at its centre and moves, and that one may hold and defend an opinion as probable after it has been declared contrary to Holy Scripture. He was required to "abjure, curse and detest" those opinions.[59]
His observations of the satellites of Jupiter created a revolution in astronomy that reverberates to this day: a planet with smaller planets orbiting it did not conform to the principles of Aristotelian Cosmology, which held that all heavenly bodies should circle the Earth,[87] and many astronomers and philosophers initially refused to believe that Galileo could have discovered such a thing.[88] His observations were confirmed by the observatory of Christopher Clavius….///
முனைவர் மு.இளங்கோவன் கூறியது....
///அதுபோல் வியாழன் ஒருமுறை கதிரவனைச் சுற்ற எடுத்துக்கொள்ளும் கால அளவு 1 2 ஆண்டு ஆகும். ஆனால் சிலபொழுது ஒருமுறை சுற்ற 11.08ஆண்டு எனவும், 11.09ஆண்டு எனவும்,12.02 ஆண்டு எனவும் அமைவது உண்டு. ஐந்து முறை வியாழன் கதிரவனைச் சுற்றும்பொழுது சராசரியாக (5x12=60)அறுபது என்ற கணக்கைப் பெறுவதால் இந்த அமைப்பில் தமிழர்கள் வியாழ ஆண்டை அமைத்தனர். ///
நீங்கள் சொல்வது உண்மையாக இருந்தால், சான்றுகள் கல்வெட்டுகள் தகுந்த ஆதாரங்களுடன் மேற்கோள் காட்டி “கலிலியோவிற்கு முன்பே தமிழன் வியாழன் கதிரவனைச் சுற்றுவதைக் கண்டு படித்து விட்டான்” என்று விக்கிபீடியாவில் எழுதுங்கள். யார் வேண்டுமானால் தகுந்த ஆதரங்களுடன் விக்கிபீடியாவை மாற்றி எழுதலாம்.
நானும் தமிழன் தான். ஆனால், கலிலியோவிற்கு முன்பு எல்லோரும் உலகம் தட்டை என்றும் சூரியன் பூமியை சுற்றுகிறது என்று தான் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.
கருத்துரையிடுக