தமிழக வரலாற்றில் தந்தை பெரியார் அவர்கள் முழுநேரத் தமிழகச் சிந்தனையாளராக இருந்தார். தமிழ் மக்களுக்கு இடையூறு வரும்பொழுதெல்லாம் அம் மக்களுக்குக் குரல் கொடுப்பதைக் கடமையாகக் கொண்டிருந்தார். அம் மக்களுள் பலர் அவரை அவதூறு பேசினானாலும் அவர்களுக்கு உழைப்பதையே கடமையாகக் கொண்டிருந்தார். அவ்வகையில்
தமிழக மக்களுக்குக் கிடைத்துள்ள உயரிய தலைவர்தான் மருத்துவர் ச.இராமதாசு அவர்கள்.
தமிழ்நாடும் தமிழ்மொழியும் வந்தேறிகளின் வேட்டைக்காடாக மாறாமல் இருக்க அவர் மேற்கொண்ட செயல்பாடுகள் என்றும் வரலாற்றில் நின்று நிலவும். இளைஞர்கள் தவறான வழிக்குச் செல்லாமல் இருக்க அவர் திட்டமிட்டுப் பல நல்ல செயல்களைச் செய்துள்ளார்.
இளைஞர்களின் கல்வி நலன், வேலை வாய்ப்பு, பணி உயர்வு இவற்றை வைத்து இவர் நடத்திய இட ஒதுக்கீட்டுப் போராட்டம் இந்திய மக்களுக்கே வழிகாட்டக் கூடியதாக மாறியுள்ளதை இந்தியச் சமூக வரலாறு உணர்ந்தவர் அறிவர்.
சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற போர்வையில் தமிழகம் கொள்ளை போவதைத் தடுத்து நிறுத்தியவர் மருத்துவர் ச.இராமதாசு அவர்கள். இந்தியப் பெரு முதலாளிகள் சில்லறை வணிகப் போர்வையில் நுழைந்தபொழுது தடுத்து நிறுத்தியவரும் இவரே.
குடிப்பழக்கத்தால் குடும்பப் பெண்கள் மிகுதியாகப் பாதிக்கப்படுவதைத் தம் மகளிர் அணி வழியாக எதிர்ப்பவரும் மருத்துவரே.
மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு உரிய மருத்துவ உதவி கிடைக்க வேண்டும் என்று மருத்துவராக இருந்து இவர் கொடுக்கும் குரல் நோயாளிகளுக்கு அமிழ்தமாக இருக்கிறது.
தமிழ் மொழியைச் சிதைத்து எழுதுவதையே இதழ்கள் தொழிலாகச் செய்து கொண்டிருக்கையில் இவர் தமிழ் ஒசை ஏட்டைநல்ல தமிழில் நடத்துவதைப் பார்க்க மொழி ஞாயிறு பாவாணரும், பாவலரேறு பெருஞ்சித்திரனாரும் இல்லையே என்ற ஏக்கமே மேலிட்டு நிற்கிறது. வானூர்திகளும், குற்றச்சாற்றும், மகிழுந்தும், போக்கிலிகளும் இவரால் அல்லவா வெளியே தெரிந்தனர்.
குத்தாட்டங்களும், அருவருப்பான உடலசைவுகளும், அழுத பெண்களும், பேய் பிசாசு கதைகளும் கொண்டு உயர் சாதியினர் அரசோச்சும் கூடாரமாக இருந்த தொலைக்காட்சிகளின் நடுவே கறுப்பு முகங்கள் கதைத் தலைவர்களானது மருத்துவரால்தானே நடந்தது. தொலைக்காட்சிகளில் இலக்கணம் இலக்கியம், தமிழிசை, நாட்டுப்புறக் கலைகள் புதுவாழ்வு பெற்றது மருத்துவர் ச.இராமதாசு அவர்களால்தானே நடைபெற்றன.
சென்னை நாகரில் தெலுங்கிசை தெருக்கள் தோறும் உள்ள சபாக்களில் அரங்கேறும்பொழுது தமிழ்ப்பண்ணிசை மனிமன்றம் கண்டவர் இவரல்லவா? அதனால்தான் மலேசியா உள்ளிட்ட அயல்நாடுகளில் வாழும் தமிழ் உணர்வாளர்கள் மருத்துவர் ச.இராமதாசு அவர்களைப் பெரிதும் மதிக்கின்றனர்.
இவரின் தைலாபுரம் தோட்டம் இளைஞர்களை, மகளிரை, அரசியல் கட்சியினரை, எழுத்தாளர்களை, கலைஞர்களை அறிவாளிகளாக மாற்றும்
பயிற்சிப் பயிலரங்காக உள்ளதை அங்குச் சென்று பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
2 கருத்துகள்:
//இந்தியப் பெரு முதலாளிகள் சில்லறை வணிகப் போர்வையில் நுழைந்தபொழுது தடுத்து நிறுத்தியவரும் இவரே.
//
???
மக்கள் தொலைக்காட்சியைச் சொல்லுங்கள், அல்லது அவரின் தமிழ் இசை இயக்கம் பற்றிச் சொல்லுங்கள்..அதற்காக ரிலையன்ஸ் வகையறாக்களை "தடுத்து நிறுத்தினார்" என்று இடைச் செருகல் கூடாது. அது கண்முன்னே வரலாற்றை திரிப்பது. போராட்டம் நட்த்தினார் என்று சொல்லுங்கள் சரி. அதோடு அவர் அடுத்த போராட்டத்திற்கு போய்விட்டார்.
கோ-கோ கோலாவிற்கு அன்புமணி சர்டிபிகேட் கொடுத்தார். தாமிரபரணி ஆறுக்கு மார்க்கெட் வரும் வகையில்.
நிச்சயம் இவரின் அரசியல் குழப்பங்களுக்காக நல்ல பணிகள் மூடி மறைக்கப்படக்கூடாது, அதே சமயம் சந்தில் சிந்து பாடவும் கூடாது. :-))
மருத்துவர் அய்யாவின் நல்ல செயல்களை இந்த உலகம் புரிந்து கொள்வதில்லை என்பது வருத்தமான விசயம்.....இந்த மக்களுக்கு
நல்லவர்கள் தேவை இல்லை.. திரைப்படமும் மாணா மயிலாடயும் தான்....
கருத்துரையிடுக