புதன், 30 ஜனவரி, 2008

மின்னருவி இதழ் வெளியீட்டு விழா-சென்னை

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் படைப்பாளிகள் பலர் இணைந்து 'மின் இலக்கியப்பூங்கா' என்னும் அமைப்பைத் தொடங்கி, அதன் சார்பில் 'மின்னருவி' என்னும் இதழைக்கொண்டு வருகின்றனர். இந்த இதழின் வெளியீட்டுவிழா 30.01.2008 மாலை ஆறு மணிக்குச் சென்னைக் கோயம்பேடு நடுவண்பேருந்து நிலையம் எதிரில் உள்ள கோல்டுமைன் உணவகத்தில் நடைபெறுகிறது.

பொறிஞர் பி.பாலகிருட்டிணன் தலைமையில் நடைபெறும் விழாவில் மின்வாரியத் தலைவர் திரு சு.மச்சேந்திரநாதன் இ.ஆ.ப.அவர்கள் முதல் இதழை வெளியிடுகிறார். பாவலர் வா.மு.சேதுராமன், கலைமாமணி ஏர்வாடி இராதாகிருட்டிணன், அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருட்டிணன் ஆகியோர் முதற்படிகளைப் பெற்றுக்கொள்கின்றனர்.

திருவாளர்கள் இரா.கதிர்வேலு,சி.குணசேகரன்,கு.கோவிந்தராசு,ச.கதிரேசன் ஆகியோர் வாழ்த்துரைக்கின்றனர்.திரு.துரை சுந்தரம் அவர்கள் நன்றியுரையாற்ற உள்ளார்.

பாவலர் தமிழியலன், பாவலர் அ.சிவராமன் உள்ளிட்ட தோழர்கள் முன்னின்று இதழை வெளியிடுகின்றனர். தமிழகத்தின் பல பகுதிகளிலும் பணிபுரியும் மின்வாரியத் தோழர்கள் எடுக்கும் இவ் இலக்கிய விழா சிறப்புடன் நடைபெற நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

2 கருத்துகள்: