வெள்ளி, 27 மார்ச், 2015

திருவண்ணாமலையில் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் திரையிடல்!



பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் திரையிடும் நிகழ்ச்சிக்குத் திருவண்ணாமலைத் தமிழிசை மன்றம் ஏற்பாடு செய்துள்ளது.

திருவண்ணாமலைத் தமிழிசை மன்றத்தின் செயலாளர் திரு. சீனி. கார்த்திகேயன் அவர்கள் வரவேற்புரையாற்றுகின்றார்.  பேராசிரியர் வே.நெடுஞ்செழியன் அவர்கள் தலைமையில் நடைபெறும் விழாவில் பேராசிரியர் வெ. இராமு, மு.இளங்கோவன் உரையாற்ற உள்ளனர்.

ஆவணப்படத்தைக் கவிஞர் ஜெயபாஸ்கரன் அவர்கள் வெளியிட, திருவண்ணாமலைத் தமிழிசை மன்றத்தின் நிறுவுநர் திரு. அருள்வேந்தன் பாவைச்செல்வி அவர்கள் பெற்றுக்கொள்கின்றார். 

சோ.ஏ. நாகராசன் அவர்கள் நன்றியுரையாற்ற உள்ளார்.

நாள்: 29.03.2015, ஞாயிறு மாலை 5 மணியளவில்

இடம்: ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம், வேங்கிக்கால், திருவண்ணாமலை

அனைவரும் வருக!

நிகழ்ச்சி ஏற்பாடு: திருவண்ணாமலைத் தமிழிசை மன்றம்


தொடர்புக்கு: 94424 14069

2 கருத்துகள்:

  1. விழா சிறக்க வாழ்த்துக்கள் ஐயா

    பதிலளிநீக்கு
  2. தொடர் வாழ்த்து, உமது தொடர் பணிக்கு. சிறக்கட்டும் தங்களின் சீரிய தொண்டு.

    பதிலளிநீக்கு