சனி, 24 நவம்பர், 2012

புலவர் இறைக்குருவனார் மருத்துவமனையில் அனுமதி


தமிழறிஞரும் பன்னூலாசிரியருமான புலவர் இறைக்குருவனார் அவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு, தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தஞ்சையிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புலவர் இறைக்குருவனார் அவர்கள் தமிழறிஞர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் மருமகன் என்பதும் மக்கள் தொலைக்காட்சியில் தமிழக ஊர்ப்பெயர்கள் குறித்துத் தொடர்ந்து உரையாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்க செய்திகளாகும்.

வயிரமூக்குத்தி, வல்லினம் மிகுதலும் மிகாமையும் உள்ளிட்ட பல நூல்களை எழுதியவர்.

1 கருத்து:

  1. புலவர் இறைக்குருவனார் அவர்கள் நலமுடன் திரும்ப வேண்டுகிறேன்...

    பதிலளிநீக்கு