சனி, 10 டிசம்பர், 2011

மதுரை பாத்திமா கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம்


பாத்திமா கல்லூரி(தன்னாட்சி),மதுரை


அழைப்பிதழ்

மதுரை பாத்திமா கல்லூரியின் தமிழ் உயராய்வுமையத்தின் சார்பில் தமிழ் இணையப் பயிலரங்கம் 13.12.2011 செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. கல்லூரி முதல்வர் அருட்சகோதரி முனைவர் ஜோஸ்பின் நிர்மலா மேரி அவர்கள் நிகழ்ச்சிக்குத் தலைமையேற்றுக் கருத்துரை வழங்குவார். கல்லூரிச் செயலாளர் அருட்சகோதரி எஸ்தர் மேரி அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்க உள்ளார்.

முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் தமிழும் இணையமும் என்ற தலைப்பில் தமிழ் இணையப் பயன்பாடுகளை மாணவர்களுக்குக் காட்சி விளக்கம் வழி விளக்க உள்ளார். பாத்திமா கல்லூரியின் தமிழ்த்துறையினர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

நாள்: 13.12.2011 செவ்வாய்க்கிழமை,நேரம்: காலை 9 மணி - மாலை 4 மணி வரை
இடம்: பொன்விழா அரங்கம், பாத்திமா கல்லூரி,மதுரை

3 கருத்துகள்:

  1. தகவல் தொடர்பென்னும் ஒற்றை வசதியில் சுருங்கிப்போன உலகத்தில் பெரும் இடைவெளிகளோடு அமர்ந்திருக்கும் நம் இனத்தின் எதிர்வரும் தேவைகளை வென்றெடுக்க ஒற்றுமைப்படல் எனும் ஆயுதமேந்த இணையம் ஆணைபலத்தோடு துணைநிற்கும் என்பதில் ஐயமேதுமில்லை.

    அதற்குரிய அறிவு வளர்க்கும் தங்களின் இத்தகைய பயிலரங்கம் நமக்கான சிகரத்தைத் தொட நகரும் முயற்சியெனக் கொண்டு மனமகிழ்வோடு என் நன்றியையும் முன்கூட்டிய வாழ்த்தினையும் இங்கே பதிவு செய்கிறேன்.

    மாணவர்களுக்கு என் அன்பும் நலவணக்கமும் உரித்தாகட்டும்!

    வித்யாசாகர்

    பதிலளிநீக்கு
  2. மிக அருமை இளங்கோவன் சார். வாழ்த்துக்கள்.. எங்கள் கல்லூரி அது.. எனக்கும் கலந்துகொள்ள ஆசைதான். ஆனால் சென்னையில் இருக்கிறேன்.. என் வலைத்தளம் பாருங்கள்..

    முடிந்தால் நிச்சயம் இன்னொருநாள் கல்லூரிக்கு சென்று வர வேண்டும். பழைய மாணவியான என்னுடைய அன்பை அவர்களுக்குத் தெரிவியுங்க்ள்.

    நான் வலைத்தளம் எழுதியே குமுதம்., விகடன்., கல்கி., குங்குமம்., அவள் விகடன்., பக்தி ஸ்பெஷல்., இண்டியா டுடே., போன்றவற்றிலும்., கவிதை சங்கமம்., மற்றும் பள்ளி நிகழ்ச்சிகளிலும்., அரசு நிறுவங்களிலும் தொலைக்காட்சியிலும் பங்கெடுத்தும் சீஃப் கெஸ்டாகவும் சென்றுள்ளேன்.

    எங்கள் கல்லூரிக்குச் செல்வதற்கு வாழ்த்துக்கள் சார்.:)

    பதிலளிநீக்கு