கதிரவன் என்ற சிறுவனின் தந்தை பொதுவுடைமை இயக்கத்தில் தன்னைக் கரைத்துக்கொண்டு குடும்ப நினைவும், குடும்பப்பொறுப்பும் இல்லாமல் கட்சிப்பணியில் கரைந்துபோகிறார். அவர் இரவு அரிசி வாங்கித் தந்தால்தான் அடுப்பு எரியும் என்ற நிலை. இத்தகு குடும்பத்தில் பிறந்த கதிரவன் மற்ற சிறுவர்களைப் போல் தீபாவளிக்கு வெடி வெடிக்க முடியாமுலும், புத்தாடை அணியமுடியாமலும் ஏங்கும் ஏக்கம் சிறுகதையில் சிறப்பாகப் பதிவாகியுள்ளது. உள்ளூர்த் தையல்காரரிடம் சிவப்புத் துணியில் கால் சட்டை தைத்தும் அதனை வாங்கக்கூட காசில்லை. தையல்காரரே பல நாளுக்குப் பிறகு காந்திக்கணக்கில் வைத்துத் தைத்த துணியை இலவசமாகத் தரும் அவலம் கண்டு கதிரவன் என்ற சிறுவன் மேல் இரக்கம் ஏற்படுகின்றது.
கதிரவனின் தாய்மாமன் வாங்கி வரும் தீபாவளிப் பரிசுப்பொருள் சிறுவன் கதிரவனுக்கு நடுஇரவில் மகிழ்ச்சியூட்டுகிறது. தாய்மாமன் சொற்களை நிறைவேற்றும் கதிரவனின் சூளுரை கதையில் முத்தாய்ப்பாக அமைகின்றது.
கதையைப் படித்து முடித்துக் கதிரவனின் நிலைக்கு இரங்கியபொழுது அது இயக்குநர் கௌதமனின் இளமைக்காலம் என்று அறிந்து திடுக்கிட்டுப் போகின்றோம். குளிரூட்டி அறைகளில் பிறந்து வளர்ந்து இன்று திரைத்துறையை ஆட்டிப்படைக்கும் செல்வச் சீமான்கள் நடுவே சோளக்கஞ்சி குடித்து வளர்ந்த கௌதமன் போன்ற உழைப்பாளிகளின் நம்பிக்கைதான் இந்தத் தலைமுறைக்குத் தேவை.
நம்பிக்கையோடு இருங்கள் கௌதமன்!
காலம் உங்கள் உழைப்புக்கு உரிய பரிசு மாலையோடு உங்களைத் தேடி வரும்.
ஆம்.அந்த 'மகிழ்ச்சி' நாளுக்கு நாங்களும் காத்துள்ளோம்.




நன்றி;
சினிமா எக்சுபிரசு
என் வலைப்பூவில் ஏற்ற இசைவளித்த வ.கௌதமன்
இயக்குநர் வ.கௌதமனை அழைக்க + 91 98413 25400 begin_of_the_skype_highlighting + 91 98413 25400 end_of_the_skype_highlighting
தலைவரே ,
பதிலளிநீக்குஇயக்குனருக்கு எமது வாழ்த்துகள் .நெஞ்சில் ஒரே உறுத்தல் ,கண்ணில் பனித்துளியோடு,பலமுறை படிடிக்க(அழுவ) வைத்து விட்டது
கௌதமனின் நடை
சோழன்
வாரிலியங்காவல்