நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டைத் தூய சேவியர் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம் இன்று(15.09.2010) காலை பத்து மணிக்குத் தொடங்க உள்ளது. இடம்.கௌசானல் அரங்கம்
தொடக்க விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் அருட்பணி அல்போன்சு மாணிக்கம்.சே.ச, துறைத்தலைவர் முனைவர் சோசப் இருதயசேவியர் கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர். கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் இரா.பிரான்சிசுசேவியர் ஆவார்.
நெல்லை,தூத்துக்குடி,கன்னியாகுமரி மாவடத்தின் பல கல்லூரிகளைச் சேர்ந்த தமிழ்ப் பேராசிரியர்கள் கலந்துகொள்கின்றனர்.
புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரித் தமிழ்ப்பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் கலந்துகொண்டு பயிற்சி வழங்குகின்றார்.
தொடர்புக்கு - 9443851775
பயிலரங்கின் பங்குபெற்றதில் நானும் ஒரு நபர். பயனுள்ள பல இணையத்தளத்தை பற்றி அறிய முடிந்தது. விளக்கவுரையும் புரியும் படியாகவும் சுவாரசியமாகவும் இருந்தது. நண்பர் முனைவர் இளங்கோவனுக்கு எனது வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு