ஞாயிறு, 28 மார்ச், 2010

செம்மொழி இளம் அறிஞர் விருதுக்குரிய தொகை பெற்றேன்…

 இந்திய அரசின் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் செம்மொழி இளம் அறிஞர் விருதுக்குரிய தொகையினை இன்று (28.03.2010) சென்னைத் தாச் கொரமண்டல் விடுதியில் நடைபெற்ற விழாவில் தமிழக முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் திருக்கையால் பெற்றமை மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும்.

  என்னைப் போல் மொத்தம் 15 பேர் இளம் அறிஞர் விருது பெற்றார்கள். மேலும் மூத்த தமிழறிஞர் பேராசிரியர் அடிகளாசிரியர் அவர்களுக்குத் தொல்காப்பியர் விருது ஐந்து இலட்சம் உருவா பரிசிலாக வழங்கப்பெற்றது. இளம் அறிஞர்களுக்குரிய விருதுத் தொகை உருவா ஒரு இலட்சம் ஆகும். இது பற்றிய விரிவான செய்தியைப் பின்னர் வழங்குவேன். கிடைத்த சில படங்களைப் பார்வைக்கு வைக்கிறேன்.


 தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களிடம் செம்மொழி இளம்அறிஞர் விருதுக்குரிய தொகை பெறல். அருகில் முனைவர் வா.செ.குலோத்துங்கன், முனைவர் க.இராமசாமி


செம்மொழி விருதுத்தொகை பெறும் எனக்கு வா.செ.கு.சிறப்பு செய்தல்


தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களிடம் செம்மொழி இளம்அறிஞர் விருதுக்குரிய தொகை பெறல். அருகில் முனைவர் வா.செ.குலோத்துங்கன், முனைவர் க.இராமசாமி



தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களிடம் செம்மொழி இளம்அறிஞர் விருதுக்குரிய தொகை பெறல். அருகில் முனைவர் வா.செ.குலோத்துங்கன்,முனைவர் க.இராமசாமி




தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களிடம் செம்மொழி இளம்அறிஞர் விருதுக்குரிய தொகை பெறல்.அருகில் முனைவர் வா.செ.குலோத்துங்கன்,முனைவர் க.இராமசாமி




என்னுடன் விருது பெற்ற மற்ற பேராசிரியர்கள்

19 கருத்துகள்:

  1. வாழ்த்துகள்; பணி மென்மேலும் ஓங்குக!!

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துகள்! தங்கள் தமிழ்ப் பணி சிறக்கட்டும்!

    பதிலளிநீக்கு
  3. நல்வாழ்த்துகள் இளங்கோவன்! மேலும்மேலும் சிறப்புகள் பெற வாழ்த்துகிறேன். நல்லாக்கங்கள் தர வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  4. வாழ்த்துக்கள். மென்மேலும் உங்கள் பணி சிறக்க.

    அன்புடன்,
    இராம.கி.

    பதிலளிநீக்கு
  5. வாழ்த்துக்கள்.உழைப்பின் அங்கீகாரத்திற்கும்,திறமைக்கும் கிடைத்த வெற்றியின் நிழற்படங்களைப் பார்க்க மட்டற்ற மகிழ்ச்சி.தங்கள் தமிழ்ப் பணி சிறக்கவும்,மேலும் பல வெற்றிகளைப் பெறவும் மீண்டும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. நல்வாழ்த்துகள் திரு.இளங்கோவன், மேலும் சிறப்புப் பெற வாழ்த்துகள்.

    தமிழ் மொழியையும், தமிழினத்தையும் ஒட்டுமொத்தமாக தன் குடும்பத்தினரின் நலனுக்காகக் குழிதோண்டிப் புதைத்து வரும் கலைஞரின் கையால் இப்படியொரு ஒரு விருதை வாங்குவதுதான் நெருடலாக இருக்கிறது.

    நன்றி - சொ.சங்கரபாண்டி

    பதிலளிநீக்கு
  7. முனைவர் மு.இ,

    விருதுக்குரிய தொகையை பெற்றமைக்கு வாழ்த்துகள்.

    விருதினை பெற்றபின் அச்செய்தியையும் படங்களுடன் பகிர வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  8. முனைவர் ஐயா அவர்களுக்கும்,தங்களுடன் விருது பெற்ற அனைத்து ஆசிரியப்பெருமக்களுக்கும் வாழ்த்துக்களும்,வந்தனங்களும். நன்றி!

    பதிலளிநீக்கு
  9. வாழ்த்துக்கள் அய்யா, தொடரட்டும்...

    பதிலளிநீக்கு
  10. வாழ்த்துக்கள் திரு இளங்கோவன்,
    தொடரட்டும் உங்கள் தமிழ்ப்பணி

    பதிலளிநீக்கு
  11. வாழ்த்துகள்! அன்புடன் தஞ்சை இறையரசன்

    பதிலளிநீக்கு
  12. வாழ்த்துக்கள் திரு இளங்கோவன்

    விஜய்

    பதிலளிநீக்கு
  13. மிக்க மகிழ்ச்சி ஐயா. தங்கள் தமிழ்ப்பணி வாழ்க! வளர்க!

    பதிலளிநீக்கு
  14. வாழ்த்துக்கள். மென்மேலும் உங்கள் தமிழ்பணி சிறக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  15. வாழ்த்துகள் இளங்கோ நானே பெற்றதுபோல் உள்ளது

    பதிலளிநீக்கு
  16. முனைவருக்கு எங்கள் இனிய வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு