புதன், 3 ஜூன், 2009

இலக்கணக்கடல் முனைவர் இரா.திருமுருகனார் மறைவு


முனைவர் இரா.திருமுருகனார்


புதுவைத் தமிழறிஞர் முனைவர் இரா.திருமுருகனார் 03.06.2009 விடியற்காலை 1 மணிக்குப் புதுச்சேரியில் உள்ள தம் இல்லத்தில் இயற்கை எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.இன்று(03.06.2009.) மாலை 4 மணிக்கு உடல் நல்லடக்கம் செய்யப்படும் எனத்தெரிகிறது.புதுச்சேரியில் உள்ள பாவலர் பண்ணை,62மறைமலையடிகள் சாலையில் உள்ள(புதுவைப்பேருந்து நிலையம் அருகில்) அவர் தம் இல்லத்தில் மக்களின் வணக்கத்திற்காக அன்னாரின் உடல் வைக்கப்பட்டுள்ளது.
தொடர்புக்கு:

+ 91 936 266 4390 செல்பேசி
+ 91 413 2201191 தொலைபேசி

திருமுருகனார் வாழ்க்கைக்குறிப்பு அறிய இங்கே சொடுக்குக.

10 கருத்துகள்:

  1. தமிழ்க்காவலைப் படித்து வருகின்றேன்.
    அதிலும் குறிப்பாக எளிய முறையில் மரபுபாவலர் ஆகலாம் என்னும் தொடரை வாசித்து வருகின்றேன்.

    என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்

    பதிலளிநீக்கு
  2. இனிய இசையுடன் சந்த இலக்கணத்தை இனி யார் சொல்லிக்கொடுக்கப்போகிறார்கள்?
    திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் கவிதைப்பட்டறை;சந்தம் செய்யும் விந்திஅ எனும் தலைப்பில் பேசுமாறு அவருக்கு அழைப்பு;பேராசிரியர் இராமர் இளங்கோ தான் அழைத்திருந்தார்;தலைப்பும் அதற்குப் பொருத்தமான பேச்சாளர் இவர் எனும் குறிப்பும் வழங்கியவன் நான்;
    அந்தத் தலைப்பைக் கொடுத்தவரைப் பாராட்டவேண்டும் எனத் தொடங்கி
    சந்தங்களின் வகைகளையும் படைக்கும் முறையையும் மிக அருமையாக விளக்கினார்.
    அவரைப் பிரிந்தது அவர் குடுமபத்தார்க்கு மட்டுமன்றி,தமிழ்ச்சுற்ரத்திற்கு மட்டுமன்றி,தமிழ்க்கவிதையுலகிற்கே மாபெரும் இழப்பு.யார் யாரை ஆறுதல் படுத்துவது?

    பதிலளிநீக்கு
  3. அன்னாரின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன்

    பதிலளிநீக்கு
  4. சிறந்த தமிழ்ப்புலவர். அடியேன் அவரின் இலக்கண நூல்களைப் படித்து பெருமித்தவன்.

    திருமுருகனாரின் ஆன்ம அமைதிக்கு
    இறைவனை வேண்டுகிறேன்.

    அன்புடன்
    நாக.இளங்கோவன்

    பதிலளிநீக்கு
  5. சென்ற ஆண்டு எங்கள் கிராம நூலக திறப்பு விழாவிற்கு திருமுருகன் ஐயா வந்திருந்து பாரதிதாசன் உருவப்படத்தை திறந்து வைத்தார். ' தெளித்தமிழ்' எங்கள் வீட்டிற்கு தவறாமல் வரும் அழகிய இதழ். அவரின் தமிழிசைப் பணி நிலைபெறும்.

    வாழ்க அவர் புகழ் !

    பதிலளிநீக்கு
  6. தமிழ் இலக்கிய,இலக்கண,இசை ஆராய்ச்சிகளில் இவரது அளப்பறிய பங்களிப்பு வெற்றிடமாகி விடுமோ என்று கவலையுற வைக்கிறது.
    வாழ்ந்தால் தமிழுக்கு என்று வாழ்ந்த தமிழ்ப் பெருமகனார்.
    வாழ்க அவர் புகழ்.

    பதிலளிநீக்கு
  7. தமிழுக்கு உண்மையாக உழைத்த இனிய‌
    தொண்டரின் மறைவு பெரிய இழப்பாகும்.

    ஆழ்ந்த இரங்கல்கள்.

    பதிலளிநீக்கு
  8. அன்னாரின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன்

    பதிலளிநீக்கு
  9. அண்ணாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  10. பாதை புதிதாய்ப் பழமரபில் தான்படைத்த மேதை


    தெளிதமிழில் மக்களுக்குத் தேர்ந்த பயிற்சி
    ஒளிமிகத் தந்தே உயர்ந்தார்- வளர்சிந்துப்
    பாக்களுக்கு ஏற்பப் படைத்தார் இலக்கணத்தை
    டாக்டர் திருமுருக னார்.

    தன்னே ரிலாததமிழ் தந்த இலக்கணத்தில்
    இன்னோர் வரலா றிவர்படைத்தார்- உன்னதமாய்
    இச்சிந்துப் பாவியலை எல்லோரும் ஏற்றிடுவார்
    மெச்சிடுவார் மேலும் வியந்து.

    காசுக்கு விற்காமல் கற்ற தமிழ்மொழியை
    ஆசையாய்ச் சொன்ன அறிவாளர்- நேசமாய்
    யார்வந்த போதும் அயராமல் போதித்துப்
    பேர்பெற்றார், வாழ்க புகழ்!

    பாதை புதிதாய்ப் பழமரபில் தான்படைத்த
    மேதை மறைந்து விடுவாரா?- சோதியென
    என்றும் தமிழின் இனிய வரலாற்றில்
    பொன்றாது நிற்கும் புகழ்!


    இலந்தை சு இராமசாமி
    3-6-2009

    பதிலளிநீக்கு