செவ்வாய், 17 பிப்ரவரி, 2009

குடந்தை அரசினர் கலைக்கல்லூரியில் மின்மூலங்கள் குறித்த ஆய்வு மாநாடு

கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரியில்(ஆடவர்) அமைந்துள்ள தமிழ்த்துறையின் சார்பில் மாநில உயர்கல்வி மன்ற நிதியுதவியுடன் "மின்கற்றல் மூலங்களைப் பயன்படுத்தித் தமிழ்மொழி,இலக்கியங்களைத் திறம்படக் கற்பித்தல்" என்னும் பொருளில் ஆய்வு மாநாடு நடைபெற உள்ளது.

இடம் : அண்ணா கலையரங்கம், அரசினர் கலைக்கல்லூரி, கும்பகோணம்
நாள் : 19,20-02-2009(வியாழன், வெள்ளி)

தொடக்கவிழா-19-02-2009 காலை 10 மணி

முனைவர் தி.அரங்கநாதன், முனைவர் க.துரையரசன், முனைவர் பழ.இராசமாணிக்கம், முனைவர் இராம.சந்திரசேகரன், பொறிஞர் சோ.அசோகன்,முனைவர் சா.சிற்றரசு உரையாற்ற உள்ளனர்.

மாநாட்டுக் கருத்துரையாளர்களாக முனைவர் ச.பாசுகரன் (இணையப் பயன்பாடுகளில் தமிழ்), முனைவர் மு.இளங்கோவன் (மின் நூலகங்கள்), முனைவர் சி.மனோகரன் (கல்விசார் இணையத்தளங்கள்), முனைவர் மு.பழனியப்பன் (இணையம் தரும் முத்தமிழ் அமிழ்தம்), முனைவர் தி.நெடுஞ்செழியன் (தமிழ் இணைய இதழ்கள்) ஆகியோர் ஆய்வுரை வழங்க உள்ளனர்.

20.02.09 வெள்ளிக் கிழமை பிற்பகல் நடைபெறும் நிறைவு விழாவில் முனைவர் சொ,இரவி அவர்கள் நிறைவுப்பேருரையாற்ற உள்ளார்.

மாநாட்டில் பங்குகொள்ள விரும்புவோர் அமைப்பாளர் முனைவர் க.துரையரசன் அவர்களுடன் தொடர்புகொள்ளலாம் (செல்பேசி எண் : 94424 26552)

3 கருத்துகள்:

  1. மாநாடு சிறப்புடன் நடந்தேற வாழ்த்துக்கள்.

    அன்புடன்
    இஸ்மாயில் கனி

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் மாநாடு சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.முடிந்தால் வருகின்றேன்.

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்துகள்,என் வலைப்பூவையும் அவ்வப்போது பார்.
    அன்புடன்,
    புகழ்

    பதிலளிநீக்கு