வெள்ளி, 25 ஏப்ரல், 2008

தொல்காப்பியப் பதிப்புப் படங்கள்

 தமிழின் சிறப்பு உணர்த்தும் நூல்களுள் தொல்காப்பியம் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். தமிழில் கிடைத்துள்ள முதல் இலக்கண நூலாக இது விளங்குகிறது. எழுத்ததிகாரம். சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்னும் மூன்று அதிகாரங்களை உடையது.1610 நூற்பாக்களை உடையது.

 இந்நூல் ஓலைச்சுவடியிலிருந்து முதன்முதல் 1847 இல் மழவை மகாலிங்கையரவர்களால் பதிப்பிக்கப்பெற்றுள்ளது. திருவண்ணாமலை வீரபத்திரையரால் தமது கல்விக்கடல் அச்சகத்தில் பதிப்பிக்கப்பெற்றது. அதன்பிறகு சாமுவேல் பிள்ளை, சி.வை.தாமோதரம் பிள்ளை, பவானந்தம் பிள்ளை, புன்னைவனநாத முதலியார், கு.சுந்தரமூர்த்தி, தண்டபாணி தேசிகர்,ஆ.சிவலிங்கனார் உள்ளிட்ட அறிஞர்பெருமக்களால் அவ்வப்பொழுது பதிப்பிக்கப்பெற்றுள்ளது.

 பழைய பதிப்புகளின் அமைப்பு எவ்வாறு இருக்கும் என்று இன்று அறிவதில் இடர்ப்பாடுகள் உள்ளன. இயன்றவரை அப்பதிப்புகளைப் படத்துடன் அறிமுகம் செய்வேன். முதற்கண் சில பதிப்புகளின் படங்ககள் மின்வருடியும், படம்பிடித்தும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. உலகத் தமிழர்கள் கண்டு களிப்பதுடன கருத்துகள் எழுத என் முயற்சிக்கு உதவியாக இருக்கும்.



1.மழவை மகாலிங்கையர் பதிப்பு(1847,ஆகத்து)


2.சாமுவேல் பிள்ளை பதிப்பு (1858)


3.சாமுவேல் பிள்ளை பதிப்பு (1858)


4.சி.வை.தாமோதரம் பிள்ளை பதிப்பு(1868)


5.இராசகோபாலபிள்ளை பதிப்பு( 1868)


6.சு.கன்னியப்ப முதலியார் பதிப்பு(1868)
நன்றி : 1-6 படங்கள் தொல்காப்பியப் பதிப்புகள்,ச.வே.சு


7.பவானந்தம்பிள்ளை பதிப்பு(1917)


8.பவானந்தம்பிள்ளை பதிப்பு(1917)


9.கா.நமச்சிவாயமுதலியார் பதிப்பு(1922)


10.கா.நமச்சிவாயமுதலியார் பதிப்பு(1922)


11.சி.புன்னைவனநாத முதலியார் பதிப்பு (1922)


12.சி.புன்னைவனநாத முதலியார் பதிப்பு (1922)

5 கருத்துகள்:

  1. மிகவும் சிறப்பான இடுகை. பாராட்டுகள்!
    - தேவமைந்தன்

    பதிலளிநீக்கு
  2. இந்த நற்பணியைத் தொடங்கியதற்கு மிக்க நன்றிகள் ஐயா.

    பதிலளிநீக்கு
  3. தங்கள் பாராட்டிற்கு நன்றி
    மு.இளங்கோவன்

    பதிலளிநீக்கு
  4. திரு.கார்த்திகேசு,திரு.கண்ணன் அவர்களுக்கு...
    தொல்காப்பியப்பதிப்புப்படங்கள் என் தளத்தில் இடப்பட்டிருந்ததைக்கண்ட திரு கார்த்திகேசு அவர்கள்(மலேசியா)
    தமிழ் மரபு அறக்கடளை கண்ணன் அவர்களிடம் இத்தகவலைப்பகிர்ந்து கொண்டார்.
    திரு.கண்ணன் அவர்கள் பின்வருமாறு மின்னஞ்சல் விடுத்து ஊக்கப்படுத்தியுள்ளார்.

    'அன்பின் ரெ.கா, இளங்கோவன்:

    திரு.இளங்கோவன் அவர்களின் வலைப்பதிவைக் காணத்தந்தமைக்கு நன்றி. மிக அரிய
    படங்களை வெளியிட்டுள்ளார். இவைகளின் மூல வடிவை தமிழ் மரபு அறக்கட்டளையின்
    சேகரிப்பில் இடலாம்.

    தமிழ் மரபு மையம், பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் அமைக்கப்படும் போது
    இப்புத்தங்கள் அனைத்தையும் மின்வடிவில் கொண்டு வந்துவிடலாம். அப்போது அவை
    நிரந்தரப் பாதுகாப்பில் இருக்கும்.

    திரு.இளங்கோவன் ஒத்துழைப்புத் தந்தால் அவரது பங்களிப்பாக இவைகளை
    மின்னாக்கம் செய்யலாம்.

    நா.கண்ணன்
    தமிழ்மரபு அறக்கட்டளை'
    http://www.tamilheritage.org
    இருவருக்கும் என் நன்றி.

    பதிலளிநீக்கு
  5. முனைவர் மு.இளங்கோவனுக்கு ஒரு வேண்டுகோள்.எனக்கு மகாலிங்கஐயரின் தொல்காப்பிய முதற்ப்பதிப்பு வேண்டும்.
    எங்கு கிடைக்கும் என்று தெரியப்படுத்தவும்.

    அன்புடன்
    ஆ.மகாலிங்கம்
    சிங்கப்பூர்.
    மின் அஞ்சல் venbaaviri@gmail.com
    செல்பேசி: +65 98127509

    பதிலளிநீக்கு