கனடாவில் உலகத் தொல்காப்பிய மன்றத்தின் ஆராய்ச்சி மாநாடு 2024 செப்டம்பர் மாதம் 20, 21, 22 ஆகிய (வெள்ளி, காரி, ஞாயிறு) மூன்றுநாள் நடைபெற்றது. முதல் இரண்டு நாள்களில் தொல்காப்பிய ஆவணங்களின் கண்காட்சி சிறப்பு நிகழ்வாக நடைபெற்றது.
முனைவர் மு. இளங்கோவனால் தொகுக்கப்பட்ட தொல்காப்பியம் குறித்த ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட ஆவணங்கள் கண்காட்சியை அழகுபடுத்தின. இந்தக் கண்காட்சியைப் பலரும் நேரில் கண்டுகளித்தனர். நேரில் பார்க்க இயலாதவர்களும் இக்கண்காட்சியைத் தாங்கள் இருந்த இடத்திலிருந்து காண்பதற்கு வழிசெய்ய வேண்டும் என்று கனடாவில் வாழ்ந்துவரும் மருத்துவர் போல் ஜோசப் அவர்களும், திருகோணமலையைச் சேர்ந்த திருமதி சுவந்தி ஆசிரியர் அவர்களும் முனைவர் இரா. அருள்ராசு அவர்களும் திட்டமிட்டனர்.
எங்களின் நல் வாய்ப்பாக இலங்கையில் பிறந்து, இப்பொழுது கனடாவில் வாழ்ந்துவரும் ஒளி ஓவியர் ஸ்ரீதர் செல்வம் (Srithar Selvam) அவர்கள் எங்களின் விருப்பத்தைப் புரிந்துகொண்டு, மிகச் சிறப்பாக ஒளி ஆவணப்படுத்தி உதவினார்.
திரு. ஸ்ரீதர் செல்வம் அவர்களின் உதவியினுக்கும் அன்புக்கும் என்றும் நன்றியுடையோம். காணொலியைக் கண்டு மகிழுங்கள். தங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக