உலகத்
தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் சார்பில் அண்மையில்
(செப். 24 - 26) மொரீசியசு
நாட்டில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் உலகத் தமிழ்
மாமணி விருது எனக்கு வழங்கப்பட உள்ளதைப்
பேராசிரியர் பாஞ். இராமலிங்கம் அவர்கள்
மடல்வழித் தெரிவித்திருந்தார்கள். அலுவல் காரணமாக மொரீசியசு
நாட்டுக்குச் செல்லும் வாய்ப்பு எனக்கு அமையாமல் போனதால் அந்த விருதினை என்னால் பெற்றுக்கொள்ள
இயலவில்லை. அந்த விருதினை இன்று (28.10.2023) மாலை புதுச்சேரி, முத்தியால்பேட்டையில் அமைந்துள்ள
பால மோகன மகாலில் நடைபெற்ற விழாவில் புதுச்சேரி சட்டப்பேரவையின் மாண்புமிகு பேரவைத்
தலைவர் திரு. அரங்க. செல்வம் அவர்கள் தமிழறிஞர்கள், ஆர்வலர்கள் முன்னிலையில் எனக்கு
வழங்கிப் பாராட்டினார்கள். விருது வழங்கி என் தமிழ்ப்பணிகளை ஊக்கப்படுத்திய உலகத் தமிழ்ப்
பண்பாட்டு இயக்கத்தின் பொறுப்பாளர்களுக்கும், மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களுக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றி. இந்த நிகழ்வில் திரு. குமரன் அவர்களுக்கு உலகக் கலைமாமணி விருதும்,
மொரீசியசு சென்று ஆய்வுக்கட்டுரை வழங்கியவர்களுக்குப் பாராட்டும் செய்யப்பெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக