வெள்ளி, 23 பிப்ரவரி, 2018

மலேசியாவில் முதலாம் உலகத் தமிழ்க் குழந்தை இலக்கிய மாநாடு - 2018





     மலேசியத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையின் ஆதரவுடன் முதலாம் உலகத் தமிழ்க் குழந்தை இலக்கிய மாநாட்டினை மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் 2018, சூன் மாதம் 8,9,10(மூன்று நாள்) ஆகிய நாள்களில் நடத்துகின்றது. இந்த மாநாட்டின் கருப்பொருள் "புத்துலக வளர்ச்சிக்கேற்பத் தரமான குழந்தை இலக்கிய வளர்ச்சியை நோக்கி..." என்பதாகும்.  முனைவர் முரசு. நெடுமாறன் தலைவராகவும், மன்னர் மன்னன் மருதை செயலாளராகவும் இருந்து இந்த மாநாட்டினை நடத்துகின்றனர்.

     நலிந்துவரும் குழந்தை இலக்கிய வளர்ச்சிக்குப் புத்துயிரூட்டல், கற்றல் கற்பித்தல் முறைகளில் கவிதை, கதை, கட்டுரை, நாடகம் போன்ற குழந்தை இலக்கியங்களைப் பயன்படுத்தும் உத்திகளை ஆராய்தல், கணினித் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு வெளிவரும் படைப்புகளை ஊக்கப்படுத்துதல், புலம்பெயர்ந்த நாடுகளில் குழந்தை இலக்கியத்தின் நிலைகளை ஆராய்தல் என்பனவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த மாநாடு நடைபெறுகின்றது.

     முதலாம் உலகத் தமிழ்க் குழந்தை இலக்கிய மாநாட்டில் ஆய்வாளர்கள் குழந்தை இலக்கியம் குறித்த ஆய்வுக்கட்டுரைகளை வழங்கலாம். 15 மணித்துளிகளில் ஆய்வுக்கட்டுரை வழங்குமாறு தங்கள் ஆய்வுரையை மாநாட்டுக்கு அனுப்பலாம்.

·         ஆய்வுக்கட்டுரையின் சுருக்கம் அனுப்ப இறுதிநாள்: 15.03.2018
·         கட்டுரையின் முழுவடிவம் அனுப்ப இறுதிநாள்:  15.04.2018
·      ஆய்வுக்கட்டுரை அனுப்ப வேண்டிய 
   மின்னஞ்சல் முகவரி: info@childtamil.com
·         இணையதள முகவரி: www.childtamil.com

பின்வரும் தலைப்புகளைத் தழுவி ஆய்வுக்கட்டுரையைப் படைக்கலாம்:

· நலிந்துவரும் குழந்தை இலக்கிய வளர்ச்சிக்குப் புத்துயிரூட்டும் வழிமுறைகள்.
·         நாட்டுப்புறச் சிறுவர் பாடல்களும் புதிய குழந்தைப் பாடல்களும்
·         குழந்தைகளுக்கான கதைப்பாடல்கள், காவியங்கள் - ஒரு நோக்கு
·         அழ. வள்ளியப்பாவிற்கு முன்பும் பின்பும்
·   கணினிக் காலத்திற்கேற்ற குழந்தை இலக்கியத் தோற்றத்திற்குரிய வழிவகைகளை ஆராய்தல்
·         புலம்பெயர்ந்த நாடுகளில் குழந்தை இலக்கியத்தின் நிலை
·         கற்றல் கற்பித்தலில் கவிதையைப் பயன்படுத்தும் உத்திகள்
·   தமிழ் மழலையர்க்கான கதை, கட்டுரை, நாடக நூல்கள்- ஒரு பார்வை

மாநாட்டுப் பதிவுக்கட்டணம்:

மலேசியப் பேராளர்களுக்கு: 300 மலேசிய வெள்ளி
மாணவர்களுக்கு: 100 மலேசிய வெள்ளி
அயலகப் பேராளர்களுக்கு: 250 அமெரிக்க டாலர்
இந்திய, இலங்கைப் பேராளர்களுக்கு: 100 அமெரிக்க டாலர்

தொடர்பு முகவரி:

ICOCIT Secretarieat, No. 50 A,
First Floor, Jalan 1/19, Seksyen 1,
46000 Petaling Jaya,
Selangor D.E.
Malaysia

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக