புதுவைத் தலைக்கோல் நாடகக்குழுவின் வெள்ளி
விழாவை முன்னிட்டுத் “தற்கால அரங்கின் போக்குகளும் இயக்கங்களும்” (Trends and Movements in Contemporary Theater ) என்ற பொருண்மையில் புதுச்சேரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம் 2013 திசம்பர்
6, 7 ,8 ஆகிய மூன்று நாள் நடைபெற உள்ளது.
இந்தப் பன்னாட்டுக் கருத்தரங்கில் உலகின்
புகழ்பெற்ற நாடகவியல் அறிஞர்கள் கலந்துகொண்டு ஆய்வுரை வழங்க உள்ளனர். சிறப்பு நிகழ்ச்சிகளும்
நடைபெற உள்ளன. இந்தக் கருத்தரங்கில் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரை
படைக்கலாம்.
ஆய்வுக்கட்டுரைகள் நாடகம், தெருக்கூத்து,
நாடக இயக்கங்கள், திரைப்படம், கதை, திரைக்கதை, இயக்கம், திரைமொழி, நடிப்பு, இசை, பல்லூடகக்
கலை, அரங்க வரலாறு, அரசியல், அரங்குசார் தொழில்நுட்பங்கள், நிகழ்த்துக்கலைக் கொள்கைகள்,
திறனாய்வுகள் குறித்த பொருண்மைகளில் அமையலாம்.
கட்டுரைச்
சுருக்கம் 500 சொற்களுக்குள் 2013 நவம்பர் 15 ஆம் நாளுக்குள் அனுப்ப வேண்டும்.
முழுமையான
கட்டுரை 2013 நவம்பர் 25 ஆம் நாளுக்குள் அனுப்ப வேண்டும்.
பேராளர்
கட்டணம்:
அயல்நாட்டுப்
பேராளர் உருவா 1500 – 00(உணவு, தங்குமிடம்)
உள்நாட்டுப்
பேராளர் உருவா 750 -00 (உணவு, தங்குமிடம்)
மாணவப்
பேராளர்கள் உருவா 200-00
மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்
அனைத்துத்
தொடர்புகளுக்கும்:
முனைவர்
வ. ஆறுமுகம் அவர்கள்
இணைப்பேராசிரியர், நிகழ்கலைத்துறை,
புதுவைப்
பல்கலைக்கழகம்,
புதுச்சேரி-
605 014
செல்பேசி: 0091
9443278059
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக