திங்கள், 30 செப்டம்பர், 2013

பாட்டியல் நூல்களில் யாப்பியல் கலைச்சொற்கள் நூலாசிரியர் க.இராதாகிருட்டிணன்


முனைவர் க.இராதாகிருட்டிணன் 

அரியலூர் அரசு கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றுபவர் முனைவர் க.இராதாகிருட்டிணன் ஆவார். இவர் 14.09.1957 இல் பிறந்தவர். இவர்தம் பெற்றோர் திருவாளர்கள் கணபதி, தையல்நாயகி. பெண்ணாடம் அரசு பள்ளியில் தொடக்கக் கல்வி பயின்றவர். கொளஞ்சியப்பர் கல்லூரியில் கல்லூரிப் படிப்பை நிறைவுசெய்தவர். பாட்டியல் நூல்களில் யாப்பியல் கலைச்சொற்கள் என்ற தலைப்பில் ஆய்வு செய்து இளம் முனைவர் பட்டத்தைப் பேராசிரியர் அ.அ.மணவாளன் அவர்களின் நெறிப்படுத்தலில் பெற்றவர். பேராசிரியர் துரை. பட்டாபிராமன் அவர்களின் நெறிப்படுத்தலில் நாமக்கல் கவிஞரின் திருக்குறள் உரை - திறனாய்வு என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டவர். மொழியியல், சோதிடவியல், சைவசித்தாந்தம், கணினி போன்ற துறைகளில் சான்றிதழ் பெற்றவர். 

பேராசிரியர் க.இராதாகிருட்டிணன் அவர்கள் 1987 இல் அருணா சர்க்கரை ஆலை மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியும், 1993 முதல் நேரு நினைவுக்கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றியும், 2009 முதல் ஆத்தூர் அறிஞர் அண்ணா அரசு கல்லூரியில் பணியாற்றியும், 2010 முதல் அரியலூர் அரசு கல்லூரியில் பணியாற்றியும் நன் மாணாக்கர் பலரை உருவாக்கி வருபவர். இருபதிற்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை வரைந்தவர். ஆறு நூல்களைத் தமிழுக்கு வழங்கியுள்ளார்.

பேராசிரியர் க.இராதாகிருட்டிணன் அவர்களின் தமிழ்க்கொடை:

1.   பாட்டியல் நூல்களில் யாப்பியல் கலைச்சொற்கள்
2.   நாமக்கல் கவிஞரின் திருக்குறள் உரை – திறனாய்வு
3.   துணையறிவோம் தொழில்புரிவோம்
4.   வேதாத்திரியின் செயல் வினைத் தத்துவம்
5.   சித்த மருத்துவம்
6.   நவீன இலக்கியத்தில் பெண்ணியல் போக்கு


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக