வியாழன், 13 டிசம்பர், 2012

குவைத் நாட்டில் தமிழர் பண்பாட்டுக் கண்காட்சி நிகழ்ச்சி நிரல்


குவைத் நாட்டில் தமிழர் பண்பாட்டுக் கண்காட்சி 2012 திசம்பர் 14-15 ஆகிய இருநாள் நடைபெறுகின்றது. அதன் நிகழ்ச்சி நிரல் விவரம் கீழே உள்ளது. குவைத் வாழும் தமிழர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கலாம்.

இடம்: ஃபிந்தாசு அரங்கம், குவைத், நாள்: 14,15-12.2012(வெள்ளி, சனி)

நிகழ்ச்சி நிரல்
கண்காட்சி நேரம் காலை 10மணி முதல் இரவு 10 மணி வரை
நாள்: 14-12-2012, கிழமை: வெள்ளி

நேரம்
நிகழ்வு

காலை 09 மணி
கண்காட்சித் திறப்புவிழா
வரவேற்புரை: திரு.குரு.முத்துக்குமார்
அறிமுக உரை: திரு.இலட்சுமி நாராயணன்
சிறப்புரை: முனைவர் மு.இளங்கோவன், புதுச்சேரி
நன்றியுரை:இராமன்

காலை 1030 மணி
கண்காட்சி மலர் வெளியீடு
முனை.திரு.மு.இளங்கோவன் உரை நாட்டுப்புறப்பாடல்கள் பாடலும் உரையும்

காலை 11 மணி
தமிழர் பண்பாட்டு உரை:
திரு.வளநாடன்
திரு.இராவணன்

நண்பகல் 12 மணி
பழங்கால தமிழகக் காட்சிகள் காணொளி
தமிழர் கலைகள் காணொளி

நண்பகல் 1230 மணி
உணவு வேளை: தமிழரின் பாரம்பரிய உணவு வகைகள் பல விற்பனைக்கு வைக்கப்படும்.

பகல் 02 மணி முதல்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர் வாழ்வை பிரதிபலிக்கும்பாலைதிரைப்படம் திரையிடல்

மாலை 05 மணி
சிறப்புத் தமிழ்த்திணை
குறளும் பொருளும்
தொல்தமிழகம்

மாலை 06 மணி
பரதநாட்டியம்
கிராமிய நடனம்
நாட்டுப்புறப்பாடல்கள்

மாலை 07 மணி முதல்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர் வாழ்வை பிரதிபலிக்கும் பாலைதிரைப்படம் திரையிடல்


நாள்: 15-12-2012, கிழமை: காரி (சனி)

நேரம்
நிகழ்வு

காலை 1030 மணி
முனைவர் மு.இளங்கோவன்
தமிழர் பண்பாடும் நாட்டுப்புறவியலும்

காலை 11 மணி
தமிழர் பண்பாடு உரை: திரு.செந்தமிழ் அரசு
சிலப்பதிகாரச் சொற்பொழிவு
திரு. பழ.கிருட்டிணமூர்த்தி

காலை 1130 மணி
விதைத்த வசம்குறும்படம் திரையிடல்
தமிழக நாட்டுப்புறக்கலைகள் காணொளி

நண்பகல் 1230 மணி
உணவு வேளை: தமிழரின் பாரம்பரிய உணவு வகைகள் பல விற்பனைக்கு வைக்கப்படும்

பிற்பகல் 02 மணி முதல்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர் வாழ்வை பிரதிபலிக்கும் பாலைதிரைப்படம் திரையிடல்

மாலை 05 மணி
முனைவர் மு.இளங்கோவன் சிறப்புரை

மாலை 06 மணி
பரதநாட்டியம், கலை நிகழ்ச்சிகள்

மாலை 07 மணி
நிறைவு விழா




அரங்கில் கும்பகோணம் டிகிரி காபி, சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், கூழ், போன்றவையும் எலுமிச்சை சோறு, சாம்பார் சோறு உள்ளிட்ட உணவுகளும் விற்கப்படும்.

வெற்றிலைப் பாக்கு, சுக்கு காபி பானகம், மூலிகைக்குடிநீர் போன்றவை இலவசமாக வழங்கப்படும்.

பழங்குடியினர் ஓவியங்கள், குறுந்தகடுகள், மென்பொருட்கள், நூல்கள் வாங்கக் கிடைக்கும்.

2000க்கும் மேற்பட்ட படங்கள், தமிழகக் கலைப்பொருட்கள், உழவுக்கருவிகள், விளையாட்டுப் பொருட்கள், பனை ஓலைப்பொருட்கள் உள்ளிட்ட தமிழர் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் விளக்கும்விதமான பொருட்கள் காட்சிக்கு வைக்கப்படும்.

கண்காட்சிக்கு வருகைதரும் தமிழ்நாடு பொறியாளர் குழும்ம் பொங்குதமிழ் மன்றத்தின் உறுப்பினர்களுக்குதமிழ் மருத்துவம்என்ற நூல் இலவசமாக வழங்கப்படும்.

பல்வகைக் குறுந்தகடுகளும் சிறுநூல்களும் கண்காட்சியில் வெளியிடப்படும், பயனுள்ள பலசெய்திகளை உள்ளடக்கிய கண்காட்சி மலர் வெளியிடப்படும்.


அனைவரும் வருக! அருந்தமிழர் பண்பாட்டை அறிக!

       தமிழ்நாடு பொறியாளர் குழுமம், பொங்குதமிழ் அறக்கட்டளை

குவைத்தில் தொடர்புக்கு:

திரு. தமிழ்நாடன் : 6685 2906
திரு. சேது : 65094097                                              

2 கருத்துகள்:

  1. நல்ல முயற்சி நாம் தமிழரின் பெயர்ச்சியால் கிடைக்காதது கிடைக்குமென்ற மகிழ்ச்சி. தொடரட்டும் உங்களது தமிழ்ப் பணி

    பதிலளிநீக்கு
  2. நல்ல நிகழ்வாக அமைய வாழ்த்துக்கள்.
    தாங்களும் சிறப்பான முறையில் சிறப்புரை நிகழ்த்த வாழ்த்துக்கள்.

    அன்புடன்
    முனைவர் துரை.மணிகண்டன்.

    பதிலளிநீக்கு