முனைவர் மலையமான் அவர்கள்
முனைவர் மலையமான் அவர்களின் இயற்பெயர் நா.
இராசகோபாலன் ஆகும். இவர் 15.07.1932 இல் ஆரணியில் பிறந்தவர். பெற்றோர்
திருவாளர்கள் நாராயணன், பாலகுசாம்பாள். போளூரில் தொடக்கக் கல்வி பயின்றவர். புலவர்
முதுகலை, முனைவர் பட்டம் பெற்றவர். எழுத்தர், வரைவாளர், ஆசிரியர், மதிப்பியல்
பேராசிரியர், நூலகர், பதிப்பாசிரியர் எனப் பன்முகம் கொண்டவர். 1955 முதல்
சென்னையில் வாழ்ந்து வருகின்றார். பல நூல்களையும் குறிப்பிடத்தக்க
ஆய்வுக் கட்டுரைகளையும் தொடர்ந்து எழுதி வருபவர். இவர் நூல்கள் பல்கலைக்கழங்களில்
பாடநூல்களாக இருந்த பெருமைக்குரியன.
மலையமான் அவர்களின் நூல்கள்:
1. நோயே டாக்டரானால்
2. நீர் மாங்கனி (கவிதை நாடகம்)
3. இருதலைப் பறவை
4. உயிர்க் கொடை
5. கடல் வயிறு.
தமிழ்மொழி பற்றிய நூல்கள்:
1. தமிழ் ஆட்சி மொழி
2. மொழியும் இனமும்
3. மொழி இனச் சிந்தனைகள்
4. தமிழும் தமிழரும்
5. தமிழா! தமிழா!
6. சிந்தனைக் களஞ்சியம் (மரபுத் தொடர் அகராதி)
7. செவ்வியல்
மொழி – தமிழ்
8. செவ்வியலும் செந்தமிழும்
9. தமிழ் வாழ வேண்டும்
10. செந்தமிழ்ச் சிந்தனைகள்
கவிதைகள்
1. மலையமான் கவிதைகள்
2. இதயவரிகள்
திருக்குறள் தொடர்பான நூல்கள்
1. திருக்குறள் துளிகள்
2. குறளில் ஒளிஉவமைகள்
3. குறளின் ஓளியில்
4. குறளின் அலைகள்
வாழ்க்கை வரலாறு
1.
நோபில் பரிசு பெற்ற கவிஞர்கள்
2.
காட்டு மலர்கள்
மலையமான் பெற்ற
பட்டங்கள்
1.
தமிழின் சீர் பரவுவார்
2.
திருக்குறள் பரப்புச் செம்மல்
3.
மொழிப்போர் மறவர் (தலைநகர் தமிழ்ச் சங்கம்)
4.
செம்மொழிச் செம்மல் முதலியன.
மலையமானின் அறிவியல் நூல்களை ஆராய்ச்சி செய்து சிலர்
இளம் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். நீர்மாங்கனி நூலை ஆய்வு செய்து சிலர் பட்டம்
பெற்றுள்ளனர்.
பேராசிரியர் சரளா இராசகோபாலன் அவர்கள்
முனைவர் சரளா இராசகோபாலன்
முனைவர் சரளா இராசகோபாலன் அவர்கள் 23.01.1942 இல் சென்னையில்
பிறந்தவர். இவர் தம் இலக்கிய இணையர் முனைவர் மலையமான் எனப்படும் நா. இராசகோபாலன்
ஆவார். சரளா அவர்களின் தந்தையார் பூ. இராசவடிவேலு அவர்கள் ஜனமித்திரன், முன்னேற்றம்
இதழ்களை நடத்தியவர். தாயார் பெயர் உமயபார்வதி.
முனைவர் சரளா அவர்கள் சேத்துப்பட்டுப் பள்ளியிலும்
இராணிமேரி கல்லூரியிலும் கல்வி பயின்றவர். முனைவர் சரளா அவர்கள் சென்னை
பல்கலைக்கழகத்தில் முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களைப் பெற்றவர். இராணி மேரி
கல்லூரி, நந்தனம் அரசு கல்லூரி, மாநிலக்கல்லூரி, வாலாசா அறிஞர் அண்ணா அரசு மகளிர் கல்லூரி,
மதுரை மீனாட்சிக் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் தமிழ்ப்பேராசிரியராக 1966 முதல் 2000 வரை (34 ஆண்டுகள்) பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
தமிழக அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது,
குன்றக்குடி ஆதீனத்தின் ஒளவையார் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர்.
இவர் எண்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
முனைவர் சரளா அவர்கள் எழுதிய நூல்களுள் சங்க இலக்கியத்தில் தோழி,
வழிவழிச் சிலம்பு, தமிழ்த்தென்றலும் பெண்மையும், பழமொழிகளில் பெண்மை, வேதநாயகரும்
பெண்மையும், புரட்சிக் கவிஞரும் பெண்மையும், பாரதிதாசனின் இலக்கியப் பெண்கள்,
குடும்ப விளக்கும் இருண்ட வீடும், குடும்ப விளக்கு – ஓர் ஆய்வு, பாரதிதாசன்
நாடகங்கள் ஓர் பார்வை, பாரதியின் பாஞ்சாலி சபதம், கம்பர் கண்ட குகன், சிலம்புவழிச்
சிந்தனைகள், சிலப்பதிகாரத்தில் வஞ்சிக் காண்டம், கண்ணகி வழிபாடு, இளங்கோவின்
அடிச்சுவட்டில், சமயம் வளர்த்த மகளிர், வள்ளுவர் வழிச் சிந்தனைகள், வள்ளுவம் ஒரு
பார்வை, வள்ளுவரின் காமத்துப்பால், திருவள்ளுவர் வழியில் பாரதியார்,
பேராண்மையாளர்களின் பெண்ணுரிமைச் சிந்தனைகள், மலையருவி ஒரு பார்வை, கல்லாடம் ஓர் ஆய்வு, மதுரைக் காண்டம் உள்ளிட்டவை குறிப்பிடத்தகுந்தன.
முனைவர் மலையமான்
முனைவர் சரளா இராசகோபாலன் முகவரி:
(பழைய எண் 63) புதிய எண் 4, அரங்காச்சாரி தெரு,
ஆழ்வார்பேட்டை, சென்னை- 600018
செல்பேசி: 7418297544
தொலைபேசி 044- 24996611
பகிர்வுக்கு நன்றிகள்.
பதிலளிநீக்குarimugathirku nandi anna
பதிலளிநீக்குமுனைவர் மலையமான் அவர்களின் மொழியும் இனமும் புத்தகம் எங்கு கிடைக்கும்
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு