பாவலரேறு பெருஞ்சித்திரனார்
தமிழ் மொழி, இன, நாட்டு விடுதலைக்கு உழைத்தவர் தமிழறிஞர் பெருஞ்சித்திரனார் ஆவார். இவர் இயற்றிய பாடல்கள் இருபதாம் நூற்றாண்டின் மொழியுணர்வு ஊட்டும் ஈடு,இணையற்ற பாடல்களாகும். தமிழ் மரபறிந்து யாத்த இவரின் பாடல்களில் தமிழ்ச் செழுமையைக் காணலாம். கருத்தாழம் நிரம்பிய தேர்ந்த சொற்களும், சுற்றிவளைக்காத சொல்லாட்சிகளும், பிழையற்ற யாப்புகளும், உணர்ச்சிக்கும் கருத்தகலத்திற்கும் ஏற்பத் தெரிந்தெடுக்கப்பட்ட யாப்பும் இவர் பாடல்களில் கண்டு உவக்கலாம்.
பாவலரேறு அவர்களின் பாடல்கள் முன்பே கனிச்சாறு என்னும் பெயரில் முத்தொகுதிகளாக வெளிவந்தன. இப்பொழுது எட்டுத்தொகுதிகளாகக் கனிச்சாறு என்னும் பெயரில் வெளிவர உள்ளன.
1700 பக்கங்கள் கொண்ட இந்த நூல்தொகுதிகளின் விலை 1300 உருவா ஆகும். முன்பதிவு செய்பவர்களுக்கு 900 உருவா விலையில் கிடைக்கும்.
பதிவுசெய்ய இறுதிநாள் 30.11.2011 ஆகும்.
தமிழ்ப்பற்றாளர்களின் இல்லந்தோறும் இருக்க வேண்டிய அரிய தமிழ் ஆவணம்.
தென்மொழி, சென்னை என்னுப் பெயரில் காசோலை, வரைவோலை அனுப்பலாம்.
தொடர்புக்கு:
தென்மொழி, மேடவாக்கம் கூட்டுச்சாலை,
சென்னை - 600100
செல்பேசி: + 91 9444440449 / 9444230 460
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக