இணையம் பற்றி பலர் தமிழகத்தில் அறிந்திருந்தாலும் தமிழைப் பயன்படுத்தி இணையத்தின் அனைத்துப் பயன்பாடுகளையும் அறியமுடியும் என்று அறிந்தவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. பரவலாகப் பலரும் அறியாமல் உள்ளனர் எனலாம். இத்தகு சூழலில் நான் பல இடங்களில் தமிழ் இணையம் சார்ந்த பயிற்சிபெற்றும் பலருக்குப் பயிற்சி வழங்கியும் தமிழ் இணையப் பரவலுக்கு உதவியுள்ளேன். என் முயற்சிக்குத் தமிழகத்தின் பல பகுதிகளில்-அயல்நாடுகளில் உள்ள நண்பர்கள் பெரிய அளவில் துணை நின்றுள்ளனர். அவர்கள் இல்லை என்றால் என்னால் இவ்வாறு சிறப்பாகப் பயிலரங்குகளை நடத்தியிருக்க முடியாது.அவர்கள் ஒவ்வொருவரையும் சூழல் அமையும்பொழுது உரிய இடங்களில் நன்றியுடன் நினைவுகூர்வேன்.
நேரடியாக அரங்கமைத்துப் பயிற்சி தந்ததுடன் மட்டும் அமையாமல் நண்பர்களின் வீடுகளுக்குச் செல்லும்பொழுதும், என் வீட்டுக்கு வருபவர்களுக்கும், தொலைபேசி உரையாடலிலும் பலருக்குப் பயிற்றுவித்துள்ளேன். இவ்வாறு என் வழியாகத் தமிழ் இணையம் பற்றி அறிந்தவர்கள் பல்லாயிரக்கணக்கில் இருப்பார்கள். இரண்டு நாளுக்கு முன் தொலைபேசியில் உரையாடிய திண்டுக்கல் தமிழாசிரியர் அம்மா அவர்களுக்குத் தொலைபேசியில் வகுப்பெடுத்துள்ளேன். இப்பொழுது அவர்கள் தமிழில் எனக்கு மின்மடல் அனுப்பவும், வலைப்பதிவுக்குப் பின்னூட்டம் இடவும் பழகியுள்ளார்கள்.
இன்று காலை தொலைபேசியில் அழைத்த தமிழ்ப்பேராசிரியர் ஒருவரின் இல்லம் சென்று வலைப்பூ உருவாக்கினேன். அவர் இனித் தமிழிலும் ஆங்கிலத்திலும் மொழியியல் கட்டுரைகளைப் பதிவுசெய்வார்.
அந்தமான் வரலாற்றை அம்மா சாந்தி இலட்சுமணன் அவர்கள் பதிந்து வருவதும் அந்தமான் திரு.கிருட்டினமூர்த்தி (கப்பல் பொறியாளர்) அந்தமான் நிகழ்வுகளைப் பதிந்துவருவதும் எனக்கு நம்பிக்கை தரும் விளைச்சல்களாகும்.
கவிஞர் இரத்தின. புகழேந்தி மண்மணம் மாறாமல் பதிவுகள் இடுவதும் இங்குக் குறிப்பிடவேண்டிய செய்திகளாகும். நேரில், தொலைபேசியில் தமிழ் இணையத்தின் வளர்ச்சியை, வசதிகளை எனக்குத் தெரிந்த வகையில் பயிற்றுவிப்பதில் மகிழ்கின்றேன். ஒரு வரலாற்றுக் குறிப்புக்காக நான் கலந்துகொண்ட பயிலரங்குகள், சந்திப்புகள் பற்றிய விவரங்களை மட்டும் இணைத்துள்ளேன்.
01.சென்னை வலைப்பதிவர் பட்டறை, பார்வையாளர், - 05.08.2007
02.புதுவை வலைப்பதிவர் பயிலரங்கு, பயிற்சியாளர், - 09.12.2007
03.விழுப்புரம் வலைப்பதிவர் பயிலரங்கு, பயிற்சியாளர்,-11.05.2008
04.திருநெல்வேலி இணையப்பயிலரங்கு, பார்வையாளர், 07.06.2008
05.பாரதிதாசன் பல்கலைக்கழகம், தேசியக் கருத்தரங்கு, பயிற்சியாளர், 01,02.08.2008
06.சென்னி கல்லூரி,திருச்சிராப்பள்ளி, இணையப் பயிலரங்கு,பயிற்சியாளர், 22.08.2008 காலை
07.கணேசர் செந்தமிழ்க் கல்லூரி, மேலைச்சிவபுரி, இணையப் பயிலரங்கு, பயிற்சியாளர், 22.08.2008 பிற்பகல்
08.வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி, மதுரை, இணையப் பயிலரங்கு, பயிற்சியாளர், 23.08.2008
09.தருமபுரி தமிழ்ச்சங்கம்,தமிழ் இணையப் பயிலரங்கம், பயிற்சியாளர், 14.09.2008
10.சுப்பிரமணியம் கலை அறிவியல் கல்லூரி, மோகனூர், நாமக்கல், இணையப் பயிலரங்கம், பயிற்சியாளர், 13.10.2008
11.பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி,இணையப் பயிலரங்கம், பயிற்சியாளர்,28.02.2008
12.அரசு ஆடவர் கலைக்கல்லூரி, குடந்தை,கணினிக் கருத்தரங்கு,பயிற்சியாளர், 19.02.2009
13.கே.எசு.ஆர்.கலை அறிவியல் கல்லூரி, திருச்செங்கோடு, பயிலரங்கம், பயிற்சியாளர்,14.03.2009
14.மாவட்ட மைய நூலகம்,கரூர், இணையப் பயிலரங்கம், பயிற்சியாளர், 15.03.2009
15.மாவட்ட மைய நூலகம், நாமக்கல், இணையப் பயிலரங்கம்,பயிற்சியாளர், 16.03.2009
16.மாவட்ட மைய நூலகம், கடலூர்,இணையப் பயிலரங்கம், பயிற்சியாளர், 17.03.2009
17.பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி, பெரம்பலூர், தேசியக் கருத்தரங்கம்,
பயிற்சியாளர்,20.03.2009
18.கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி, கோவை, தமிழ் இணையமும் வலைப்பூக்களும், பயிற்சியாளர் 29.03.2009
19.இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றக் கருத்தரங்கம்,சிறப்புரை: தமிழும் இணையமும், மதுரை காமராசர் பல்கலைக்கழகம, 23,24.05.09
20.நாகர்கோயில், மானிங் ஸ்டார் கல்லூரி,தமிழ் இணையப் பயிலரங்கம், பயிற்சியாளர், 20.06.2009
21.அரசு மேல்நிலைப் பள்ளி,ஊத்தங்கரை, கிருட்டினகிரி மாவட்டம்,18.12.2009
22.சக்தி மாரியம்மன் பொறியியல் கல்லூரி,தண்டலம்,சென்னை. 23.12.2009
23.அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தமிழியல்துறை,30.01.2010
24.அரசு மேல்நிலைப் பள்ளி, ஏம்பலம், புதுச்சேரி,23.02.2010
25.தாகூர் கலைக்கல்லூரி,02.03.2010
26.இராசேசுவரி மகளிர் கலை,அறிவியல் கல்லூரி, பொம்மையார்பாளையம், சிறப்பு உரையாளர், 05.03.2010
27.செல்வம் ஆசிரியர் கல்வி நிறுவனங்கள்,நாமக்கல், 06.03.2010
28.சிறீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ்,கலை அறிவியல் கல்லூரி,பயிலரங்கம்,13.03.2010
29அரசு மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனம்,இலாசுப்பேட்டை,புதுச்சேரி 26.03.2010
30.சிங்கப்பூர், மருதப்பர் உணவக அரங்கில் சிங்கப்பூர் வலைப்பதிவர்களுடன் சந்திப்பு,16.05.2010
31.மலேசியா,பந்திங் கல்லூரி-தமிழாசிரியர்களுக்குத் தமிழ் இணையம் பயிற்சியாளர்,22.05.2010
32.புதுச்சேரி அரசு கல்வித்துறை தமிழாசிரியர்களுக்குத் தமிழ் இணையம் அறிமுகம் 14.06.2010
இப்பட்டியல் நூற்றைக் கடந்துள்ளது......(31.01.2021)
தமிழுக்கும் தமிழருக்கும் மிகச்சிறந்த தொண்டாற்றி வருகிறீர்கள். பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குவாழ்த்துகள், உங்கள் முயற்சி தொடரட்டும்
பதிலளிநீக்குஇன்னும் பல ஆண்டுகள் பல ஆயிரம் பேருக்கு உங்கள் நற்பணி போய்ச் சேர வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஅன்புடன்,
மா சிவகுமார்
தங்களின் இந்த தன்னலமற்ற பணி சிறந்தோங்க இறைவனை வேண்டுகிறோம். இளைய தலைமுறை தங்களின் வழிகாட்டலில் இணையத்தில் தமிழ் வளர்ப்பது வளரட்டும்!
பதிலளிநீக்குஇன்னும்.. இன்னும் தொடர்ந்து உங்களின் பங்களிப்பு பலருக்கு ஊக்கத்தையும், பயனையும் கொடுக்கட்டும் வாழ்த்துகள்!
பதிலளிநீக்குதோழன்
பாலா
வாழ்த்துகள!
பதிலளிநீக்குதமிழ் இணையப் பரவலில் உங்களின் பங்களிப்பு போற்றுதலுக்குரியது.பயன் பெற்ற நான் சொல்வது நன்றியோடுகூடியது.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குதங்கள் தமிழிணைய பங்களிப்புகள் மேன்மேலும் பரவ வாழ்த்துகிறேன்
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் தோழர் ... மிக்க மகிழ்ச்சி உங்கள் குறித்து !
பதிலளிநீக்கு