கோவையில் உலகத் தமிழ்மாநாட்டை நடத்தும் விருப்பத்தைத் தமிழக முதலமைச்சர்
மாண்புமிகு கலைஞர் அவர்கள் அறிவித்த அறிவிப்பால்(17.09.2009) உலகெங்கும் பரவி வாழும் தமிழர்களும் தமிழ் ஆய்வாளர்களும் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.அறிஞர் அண்ணா அவர்கள் இரண்டாம் உலகத் தமிழ்மாநாட்டைச் சென்னையில் நடத்திய பெருமைக்கு உரியவர்கள்.அவரின் நூற்றாண்டு நிறைவுவிழா நடைபெற்ற நாளையொட்டி(15.09.2009) இத்தகு அறிவிப்பு வெளிவந்துள்ளமையால் உலகெங்கும் பரவி வாழும் தமிழர்கள் தமிழக முதலமைச்சரைப் பாராட்டியவண்ணம் உள்ளனர்.
கோவையில் நடைபெற உள்ள உலகத் தமிழ்மாநாட்டில் பல்வேறு ஆய்வரங்குகள் நடைபெற
வாய்ப்புள்ளது.அப்பொழுது கணிப்பொறி,இணையம் சார்ந்த அரங்குக்கு முதன்மையளித்து ஆய்வரங்குகள் அமைக்கப்பெற வேண்டும். இணையத்தில் தமிழ் வளர்ந்துள்ள போக்கு, இன்னும் செல்ல வேண்டிய தூரம் யாவும் அறிஞர்களால் விவாதிக்கப்பட வேண்டும். தமிழகத்தில் அண்மைக்காலமாக நடைபெறாதத் தமிழ் இணைய மாநாட்டுக் குறையை இந்த அரங்கு நிறைவு செய்வதாக இருக்கும்.
தமிழுக்கு வாய்ப்பான நேரம் இது.முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஆட்சியில் சென்னையில் நடந்த தமிழ் இணைய மாநாட்டில்தான் தமிழ் விசைப்பலகை 99 அறிமுகம் செய்யப்பட்டது,தமிழ் இணையப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது என்ற வரலாற்று முதன்மை வாய்ந்த நிகழ்வுகள் நடைபெற்றன.எனவே உலகெங்கும் பரவி வாழும் இணையத்தமிழறிஞர்கள், கணினித்துறை வல்லுநர்கள் கலந்துகொண்டு தமிழ் இணைய வளர்ச்சிக்கு உரிய ஆக்கப்பணிகள் குறித்து விவாதிக்க இந்த மாநாட்டடைப் பயன்படுத்திக்கொள்வோம்.
கொங்கு மண்டலத்தில் தமிழ் வளர்ச்சிக்குரிய பல பணிகள் நடைபெற்றுள்ளன.சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் முதல் தெய்வசிகாமணி கவுண்டர் ஐயா உள்ளிட்டவர்கள் உலவிய மண் இஃது.மன வளமும், பணவளமும்,இடவசதிகளும் நிறைந்த பகுதி. வானூர்தி,தொடர்வண்டி,பேருந்து உள்ளிட்ட போக்கு வரவு ஏந்துகள் உடைய மாநகரம். அருகில் உதகை, பொள்ளாச்சி உள்ளிட்ட எழில்கொழிக்கும் பகுதிகள் உண்டு. உலகத் தமிழ் அறிஞர்களை வரவேற்கத் தகுந்த ஊரைத் தேர்வு செய்தமைக்கு முத்தமிழறிஞரைத் தினமணி பாராட்டியுள்ளது பொருத்தமேயாகும்.
கோவை உலகத் தமிழ்மாநாட்டை வரவேற்போம்.
/இத்தகு அறிவிப்பு வெளிவந்துள்ளமையால் உலகெங்கும் பரவி வாழும் தமிழர்கள் தமிழக முதலமைச்சரைப் பாராட்டியவண்ணம் உள்ளனர்./
பதிலளிநீக்குகொன்னுட்டீங்க முனைவரே.
அகதிகள் என்ற பெயரில் விரும்பத்தகாத சக்திகள் நுழையாமல் கண்காணிக்க வேண்டும் :கருணாநிதி
இதை நீங்க பாக்கலியா?
விசைப்பலகை 99 பின்னாடியிருந்த அரசியலை பாக்கலையா?
கொன்னு தொலைச்ச ஈழத்தமிழருக்கும் முத்துக்குமரனுங்களூக்கும் ஆண்டுத்தெவசத்தை நடத்திமுடிச்ச பின்னாடி வெச்சிருக்கலாமே? ராகுல் வேனான்னு சொல்லிட்டாரா?
தமிழ் பேரையும் தமிழன் பேரையும் வெச்சு வெக்கம் கெட்ட பொழைப்புய்யா நீங்க ஒங்க தலவரு தினமனி அல்லாம் பொழைக்கெரது
அரைவாசி ஈழத்தமிழன் செத்துப்போனான் ஆனால் தூறல் அடிக்குது, சகஜநிலைக்கு திரும்புது என பம்மாத்துக்காட்டியவர் இப்போ உலகத்தமிழ் மாநாடு என்கிறார்!
பதிலளிநீக்குஎப்பொழுது நடைபெற உள்ளது என்று அறிவீர்களா?
பதிலளிநீக்குஇந்த மாநாட்டை ஆரம்பித்து வைத்தவர் ஈழத்தைச் சேர்ந்த தனிநாயகம் அடிகளார். யாழ்ப்பாணத்தில் 1974 இல் நடந்த 4வது மாநாட்டை ஸ்ரீமாவோ பண்டாரநாயகா அரசு திட்டமிட்டு குழப்பி துப்பாக்கிச்சூட்டு நடத்தி 12 பேர் இறந்தனர். அன்று நடந்த கொலைகளுக்கு பொறுப்பாக பொலிஸ் அத்தியட்சகர் சந்திரசேகரா, யாழ் நகரபிதா துரையப்பா ஆகிய இருவரை அடையாளம் கண்டு பழிவாங்கப்புறப்பட்ட சிவகுமாரன் பொலிசின் கைகளிள் சிக்காது சயனைட் உட்கொண்டு தன்னை மாய்த்துக்கொண்ட முதலாவது போராளி.
பதிலளிநீக்குஅவனின் இறப்பின் பின்னர் அந்த 12 பேரின் கொலைகளுக்கு காரணமானவ்ர்களில் ஒருவரான துரையப்பாவை கொன்று முடித்தவர் பிரபாகரன்! இவ்வாறான சரித்திரம் கொண்ட மாநாட்டை கருணாநிதி நடத்துவது உலகத்தமிழரின் இழிவான விதி!
மாநாடுகள் எல்லாம் சரிங்கண்ணே
பதிலளிநீக்குமக்களை எப்போத் தமிழ்ப் படிக்க வைக்கப்போறோம்?
யார் வீட்டுப் பிள்ளைகள் தமிழ் படிக்கிறார்கள்.
இங்கிலீசு படிச்சா இங்கிலாந்து வரைக்கும் போகலாம்.
இந்தி படிச்சா இந்தியா முழுதும் போகலாம்
இந்தத் தமிழப் படிச்சா நரகத்துக்கும் இடம் கிடைக்காது.
காலம் பூராப் காலம் பூராப்
பழம்பெருமை பேசியே
காலத்தைக் கடத்திப்புட்டீங்க.
இப்போ வெள்ளைக்காரன் கண்டுபிடிச்ச
கம்யூட்டரைக் கட்டிக்கிட்டுத்
தமிழ் வியாதி பிடிச்சு அலையிறீங்க.
உண்மையாத் தமிழ் வாழனுன்னா
ஒண்ணே ஒண்ணு உருப்படியாச் செய்யணும்.
தமிழ்நாடு முழுவதும்
தமிழ்தான் இருக்கணும்
பிற மொழிகள் வேணுன்னா
விரும்புறவங்க படிக்கட்டும்.
கட்டாயமாப் பிறமொழியைத்
திணிப்பது எந்த விதத்து நியாயம்?
கலைஞரைப் பத்தித் தெரியாம
அவருக்குக் காவடி தூக்காதீங்க.
டெல்லி அவர் மூக்கு உடைஞ்சு கிடக்கு.
கால்பிடிக்கிற வேலையைத் தொடர்ந்து செய்யணுமே.
இந்தியைக் கட்டாயமாக் கொண்டு வந்தாச்சு?
தமிழன் தலையெழுத்து
இங்கிலீசோட இந்தியும் படிப்பான்.
ஆனா தமிழ் படிக்க மாட்டான்.
தமிழ் படிச்சாலும் தரங் கொடுக்க மாட்டான்.
இதுக்கு வழியென்னன்னு
கலைஞர் குடும்பத்தோட
கூட்டாலோசனை பண்ணி
செயற்குழுவும், பொதுக்குழுவும் கூட்டி
அவருக்கு இரண்டு குழு இருக்கணும்
தமிழ்மாநாடு போடப்போறார்.
போட்ட்டும்.
போட்ட்டும்.
தமிழ் வியாபாரிகள் எல்லாம்
கடைவிரிக்க வருவாங்க.
விருதாளர்கள் எல்லாம்
விருந்துண்ண வருவாங்க.
கல்தோன்றி மண்தோன்றிக்
கதைபேசுவாங்க.
தீர்மானம் போடுவாங்க
திட்டம் தீட்டுவாங்க.
எல்லாம் பொய்.
உண்மையா வாழணுன்னா
உங்களால தமிழமுறையா
வாழ முடியுதான்னு பாருஙக....
கணினித் தமிழ் எல்லாம் பொய்
கக்கூசுக் கிறுக்கல் போலத்தான்.
By
Yuvanswang
மிக நன்று
பதிலளிநீக்குநான் எழுதிய கருத்துகளைத் தடை செய்து ‘மிக நன்று’ என மேலெழுந்தமானமாக கருத்துச் சொன்னவரின் கருத்தை பிரசுரித்தது மட்டுமல்லாது எனக்கு மின்னஞ்சலும் அனுப்பி உள்ளீர்கள். மிக மிக நன்று
பதிலளிநீக்குஎன்னமோ போங்க....
பதிலளிநீக்குதமிழனின் பிணத்தின் மீதமர்ந்து உலகத் தமிழ் மாநாடு.
வன்னியில் தமிழனுக்கு கொடுமைகள் தலைவிரித்தாட
இங்கு தமிழறிஞர்கள் சிலப்பதிகாரத்தையும், புறநானூற்றையும் பற்றி விவாதிக்கப் போகிறீர்கள்.
இந்த நிலையில எங்களுக்கு அழைப்பு விடுக்குறீங்க...
நல்லா போய் நடத்துங்க ஐயா ! தமிழ் வளரட்டும்!
மிக அருமை!
பதிலளிநீக்குநிச்சயம் ஆதரிக்க வேண்டும் மற்றும் கலந்து கொள்ள வேண்டும்.
தங்கள் பதிவிற்கு நன்றி
மயிலாடுதுறை சிவா...
தமிழ் இனத்தின் மிகபெரும் திரளை கொன்றுவிட்டு நடத்த இருக்கும் மாநாட்டிற்கு வாழ்த்துகிறீர்களே ..
பதிலளிநீக்குபோங்கடா நீங்களும்..