முனைவர் மு.பொன்னவைக்கோ(கோப்புப்படம்)
பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளிலிருந்து அலுவலக முறையில் மடல்கள் பல்கலைக்கழகத்திற்கு வந்தால் தமிழில்தான் வரவேண்டும். ஆங்கிலத்தில் வந்தால் பல்கலைக்கழகம் விடையளிக்காது எனப் பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் பொன்னவைக்கோ அவர்கள் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் நேதாசி சுபாசு சந்திரபோசு கல்லூரியின் ஐந்தாம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கிப் பட்டமளிப்புவிழா உரையாற்றிய பொழுது துணைவேந்தர் அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஆங்கிலமொழிக்கு அடிமையாகிக் கிடக்கும் தமிழக மக்களுக்குத் துணைவேந்தரின் உரை விழிப்புணர்ச்சி ஏற்படுத்தட்டும்.
தமிழை ஆட்சிமொழியாக்கும் அரசின் விருப்பத்தை நிறைவேற்றும் பொன்னவைக்கோ அவர்களுக்கு உலகெங்கும் உள்ள தமிழ்ப்பற்றாளர்களின் சார்பில் வாழ்த்துகளும் பாராட்டுகளும்!
பாரதிதாசன் பல்கலைக்கழகம் தமிழகப் பல்கலைக் கழகங்களுக்கு முன்னோடியாக விளங்கிப் பாவேந்தர் அவர்கள் விரும்பிய புதியதோர் உலகம் படைக்கட்டும்!
தமிழ் வாழ்க என்று பேசுவதால் பயனில்லை.
பதிலளிநீக்குதமிழ் இணையத்தில் விளையாட முடிகிறது,உலகெங்கும்.ஆனால் தமிழ்நாட்டில் தான் தமிழ் எங்கும் இல்லை.
இந்த நிலை மாற துணைவேந்தரின் முயற்சி வரவேற்கத் தக்க ஆரம்பமே!
மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நாமும் நமது தொடர்புகளைத் தமிழிலேயே கொள்வோம்.
தங்கள் தமிழ் அன்பிற்கு நன்றி.
பதிலளிநீக்குமு.இளங்கோவன்
He is not wearing dhoti but suit,coat and tie.Should he not
பதிலளிநீக்குwear the traditional tamil dress
in functions. I would like to know as to under which rule he has decided that only letters in Tamil
from affiliated colleges will be
replied. Can UGC also take a stand
that letters in Hindi only will be
replied.
These fanatics are doing more harm
than good.