திங்கள், 24 மார்ச், 2008

கவிஞர் புதுவைச்சிவம் நூற்றாண்டு விழா ஒருநாள் கருத்தரங்கு

புதுவைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையும் புதுவை இலக்கியப் பொழில் இலக்கிய மன்றமும் இணைந்து கவிஞர் புதுவைச்சிவம் நூற்றாண்டு விழா ஒருநாள் கருத்தரங்கைப் புதுவைப் பல்கலைக்கழகத்தில் இன்று 24.03.2008 முற்பகல் 10 மணிக்கு நடத்துகின்றன.

முனைவர் அ.அறிவுநம்பி வரவேற்க, முனைவர் இரா. திருமுருகனார் தலைமை தாங்குகிறார். தோப்பூர் திருவேங்கடம் தொடக்கவுரையும், முனைவர் சுப. வீரபாண்டியன் சிறப்புரையும் ஆற்ற உள்ளனர். தோழர் வே.ஆனைமுத்து திரு. ச. லோகநாதன், முனைவர் சி.இ.மறைமலை (நிறைவுரை) உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளனர்.ஆய்வாளர்கள் ஆய்வுரை வழங்குகின்றனர்.

கவிஞர் புதுவைச்சிவம் பற்றி அறிய திண்ணையில் வெளிவந்த என் கட்டுரையைக் காணலாம்.

2 கருத்துகள்:

  1. கவிஞர் புதுவைச் சிவம் பற்றிக் கேள்வி தானே ஒழிய, விவரங்கள் தெரியாது. அவை தந்தமைக்கு நன்றி. அவரது முழுக் கவிதை, நாடகம் ஒரே தொகுப்பானால் நல்லது.

    புதுவை தந்த அருமையான கவிஞர் தமிழ்ஒளி ஆவார். அவரைப் பற்றி எழுதுங்கள். இளம் வயதில் மாண்டார்.அவரது கவிதைகள் முழுமையாகத் தொகுக்கப்படல் வேண்டும். இடதுசாரிக் கட்சிக்காரர். இதுபற்றிப் பேசுவோம். கிழக்கு பதிப்பகம் போன்றவற்றில் வெளியிடலாம். அவரது நண்பர்களுடன் தொடர்பு கொண்டால் பல செய்திகள் கிடைக்கும்.

    அன்புடன்,
    நா. கணேசன்

    பதிலளிநீக்கு
  2. தங்கள் கருத்துக்கு நன்றி.
    தமிழ் ஒளி பற்றி எழுதுவேன்.
    சிவம் நூல்கள் தொகுக்கப்பட்டு காவியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது..
    தமிழ்ஒளி நூல்களும் வெளிவந்துள்ளன..
    மு.இளங்கோவன்

    பதிலளிநீக்கு