நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
தூய நெஞ்சக் கல்லூரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தூய நெஞ்சக் கல்லூரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 8 டிசம்பர், 2012

தூய நெஞ்சக் கல்லூரியின் வீரமாமுனிவர் தமிழ் மன்றத்தின் முத்தமிழ் மன்ற விழா




வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் வீரமாமுனிவர் தமிழ் மன்றத்தின் சார்பில் முத்தமிழ் மன்ற விழா நடைபெறுகின்றது.

பல்லூடகத் தாக்கமும் சமூகப் போக்கும் என்ற பொருண்மையில் விழா நடைபெறுகின்றது. முனைவர் நெல்லை.சு.முத்து அவர்கள் இந்த விழாவை இன்று தொடங்கி வைத்தார்கள்.

இன்று (08.12.2012) சனிக்கிழமை பிற்பகல் நடைபெறும் நிறைவு விழாவில் நான் கலந்துகொண்டு நிறைவுரையாற்றுகின்றேன். திரைப்பட இயக்குநர் வ.கௌதமன் அவர்களும் கலந்துகொண்டு உரையாற்றுகின்றார்.

என் பேச்சைத் தமிழ் இணையத்தை அறிமுகப்படுத்தும் வகையிலும், மாணவர்களுக்குப் பயன்படும் வகையிலும் அமையும். நண்பர் செல்வமுரளி அவர்களும் நிகழ்ச்சிக்கு வர உள்ளார். பேராசிரியர் பார்த்திபராஜா வரவேற்புரையாற்ற உள்ளார். 

கல்லூரியின் முதல்வர் அருட்தந்தை அ.மரியசூசை அடிகளார் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள். கல்லூரிப் பேராசிரியர்களும் மாணவர்களும் இந்த நிகழ்ச்சியைச் சிறப்பாக ஒருங்கிணைத்துள்ளனர்.

தமிழ் இணைய ஆர்வலர்கள் கலந்துகொள்ளலாம்.


வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010

திருப்பத்தூர், தூய நெஞ்சக் கல்லூரியில் தமிழ் இணையம் அறிமுக விழா


அழைப்பிதழ்

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் தூயநெஞ்சக் கல்லூரியில்(தன்னாட்சி) தமிழ் இணையம் அறிமுக விழா 11.08.2010 அறிவன்(புதன்)கிழமை பிற்பகல் 2.00 மணி முதல் 4.00 மணி வரை நடைபெற உள்ளது.

கல்லூரி முதல்வர் அருட்தந்தை முனைவர் அ. மரியசூசை அவர்கள் தலைமையில் நடைபெறும் விழாவில் கு.கலையரசி அவர்கள் வரவேற்புரையும், பேராசிரியர் பி.பாலசுப்பிரமணியன் அவர்கள் அறிமுகவுரையும் ஆற்ற உள்ளனர்.

புதுச்சேரி முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் கலந்துகொண்டு தமிழ் இணையம் வளர்ச்சியும் வாய்ப்பும் என்ற தலைப்பில் காட்சி விளக்க உரையாற்ற உள்ளார். க.பிரபாகர் அவர்கள் நன்றியுரையாற்றுவார்.

தமிழ் முதுகலை, இளம் முனைவர், முனைவர் பட்ட ஆய்வுமாணவர்கள், தமிழ்ப் பேராசிரியர்கள், அருகில் உள்ள கல்லூரி சார்ந்த பேராசிரியர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளனர்.

விழாவுக்கான ஏற்பாடுகளைக் கல்லூரி முதல்வர் அருட்தந்தை முனைவர் அ.மரியசூசை அவர்கள் செய்துள்ளார். அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறலாம்.