அண்மையில்
பொதிகைத் தொலைக்காட்சியில் நடவுப்பாடல்களைப் பாடி அறிமுகம் செய்தேன். தமிழகத்திலும்
கடல் கடந்த நாடுகளிலும் இந்த நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இலண்டன், அமெரிக்கா,
மலேசியா, சிங்கப்பூர், இலங்கை வாழ் நண்பர்கள் இந்த நிகழ்ச்சியை ஒளிவட்டாக மாற்றி வழங்கி
உதவும்படி அன்பு வேண்டுகோள் வைத்தனர். ஒளிவட்டில் இனி இந்த நடவுப்பாடல்கள் கிடைக்கும்.
வரும் அறிவன் கிழமை(புதன்) புதுச்சேரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்த ஒளிவட்டு வெளியிடப்பட
உள்ளது. இந்த நிகழ்ச்சியில் புதுவையின் சட்டப்பேரவைத் தலைவர் மாண்புமிகு வ.சபாபதி(எ) கோதண்டராமன் அவர்களும், கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு தி.தியாகராசன் அவர்களும் கலந்துகொண்டு வெளியிட உள்ளனர்.
நாட்டுப்புறப் பாடல்களை ஆர்வமுடன் கேட்கும் நண்பர்களும், தமிழிசை ஆர்வலர்களும் இந்த ஒளிவட்டை வாங்கி என் முயற்சியை ஊக்கப்படுத்தலாம்.