ஞாயிறு, 9 டிசம்பர், 2012

புதுச்சேரியில் பாரதி விழா



பாரதி இலக்கியச் சுடர் விருது பெறுவோர்


புதுச்சேரியில் அமைந்துள்ள பாரதிதாசன் அறக்கட்டளை பாரதிவிழாவை இன்று(09.12.2012) காலை 10 மணிமுதல் 1 மணி வரை நடத்தியது.

பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் மகன் மன்னர்மன்னன் தலைமையில் நடைபெற்ற விழாவில் முனைவர் நாக.செங்கமலத் தாயார் அனைவரையும் வரவேற்றார்.

பல்லவன் கல்வி நிறுவனங்களின் தலைவர் முனைவர் வி.முத்து அவர்கள் முன்னிலையுரையாற்றினார்.

கோ.பாரதி அவர்கள் பாராட்டுரை வழங்கினார்.

பொறிஞர் “இராதே” இரா.தேவதாசு, முனைவர் சொ.சேதுபதி, முனைவர் மு.இளங்கோவன், முனைவர் இரா.குறிஞ்சிவேந்தன் ஆகியோருக்குப் “பாரதி இலக்கியச்சுடர்” விருது வழங்கப்பட்டது.

முனைவர் அ.கனகராசு நன்றியுரை வழங்கினார்.






கோ.பாரதி, மன்னர்மன்னன், வி.முத்து, மு.இளங்கோவன்


பொறிஞர் தேவதாசு விருதுபெறல்

முனைவர் சொ.சேதுபதி விருதுபெறல்


முனைவர் இரா.குறிஞ்சிவேந்தன் விருதுபெறல்

முனைவர் மு.இளங்கோவன் விருதுபெறல்

4 கருத்துகள்:

  1. வாழ்த்துகள் நண்பரே!

    பதிலளிநீக்கு
  2. பாரதி இலக்கியச் சுடர் விருது பெற்ற தங்களுக்கு வாழ்த்துக்கள் அய்யா.

    பதிலளிநீக்கு
  3. கண்ணும் மணியுமாய்க் கன்னித் தமிழைக் கணித்தமிழை
    எண்ணும் முனைவர் இளங்கோ பெறும்இச் சுடர்விருதால்
    எண்ணம் மகிழ்வர் இருபெரும் பாவலர் இன்றிருந்தால்,
    இன்னும் தமிழால் விருதுகள் வெல்வீர் இனியவரே!
    --அன்புடன்,
    நா.முத்துநிலவன், புதுக்கோட்டை-4
    http://valarumkavithai.blogspot.in/

    பதிலளிநீக்கு
  4. நல்ல ஒரு தகவல்.
    பதிவுக்கு மிக்க நன்றி.


    Canada Tamil News

    பதிலளிநீக்கு