செவ்வாய், 27 ஜனவரி, 2009

புதுச்சேரி மாநிலத் தமிழாசிரியர்களுக்குத் தமிழ் இணையம் பற்றிய அறிமுகம்


பயிற்சிபெறும் ஆசிரியர்கள்


பயிற்சிபெறும் ஆசிரியர்கள்

புதுச்சேரி அரசு தமிழாசிரியர் பணி வழங்கி அவர்கள் பணியேற்கும் முன்பாக ஒரு புத்தொளிப்பயிற்சி வழங்கி அவர்களைத் தகுதியுடைய ஆசிரியப்பெருமக்களாக வகுப்பறைக்குள் அனுப்புகிறது.அவ்வகையில் பல அணியினர் பயிற்சி பெற்றுச் செல்கின்றனர்.

அண்மையில் இரு அணியினருக்கு யான் தமிழ் இணையம் பற்றிய பயிற்சியளிக்கும் வாய்ப்பு அமைந்தது.ஒவ்வொரு அணிக்கும் முப்பதுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இருந்தனர். இவர்களுக்குத் தமிழ்த்தட்டச்சு,எ.கலப்பை,தமிழில் வெளிவரும் இணைய இதழ்கள்,தமிழ்மரபு அறக்கட்டளை,மதுரைத்திட்டம்,விருபா,வலைப்பூ,உருவாக்கம்,தமிழ்மணம்,தமிழ்வெளி,திரட்டிஉள்ளிட்ட திரட்டிகள்,மின்னஞ்சல்,உராயாடல் உள்ளிட்ட பல செய்திகளைச் சொல்லியும் படக்காட்சி வழி விளக்கியும் தமிழ் இணையம் வளர்ந்து வந்துள்ள வரலாற்றை விளக்கினேன்.

பலரும் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.பயிற்சியில் ஆர்வமுடன் ஐயங்களை எழுப்பித் தெளிவு பெற்றனர்.பல வகைப் பயிற்சிகள் பெற்ற இவர்களுக்கு இணையத்தில் தமிழ் வளர்ந்துவரும் முறைபற்றி அறிந்ததும் மகிழ்ச்சி ஏற்பட்டது.


முனைவர் இராச.திருமாவளவன்(ஒருங்கிணைப்பாளர்)

புதுவை மாநிலத்தின் பல பகுதிகளுக்கும் தமிழ் இணையம் சார்ந்த செய்திகள் ஆசிரியர்கள் வழியாகச் செல்ல வழிவகை செய்தவர் முனைவர் இராச.திருமாவளவன் அவர்கள் ஆவார். இவர்தான் பயிற்சிக்குரிய ஒருங்கிணைப்பாளர்.தமிழ்ப்பற்றுடைய இவர் இலக்கண, இலக்கியங்களில் பரந்துபட்ட பேறிவுடையவர்.காலத்துக்கேற்ற புதுமைகளையும் விரும்புபவர்.


பயிற்சியளிக்கும் யான்

12 கருத்துகள்:

  1. இளங்கோவன் அவர்களே,

    உங்களுடைய தொடர்ச்சியான தமிழ்ப் பணி போற்றுதலுக்குரியது. பல ஊர்களிலும் தமிழ் இணையத்தை அறிமுகம் செய்து வரும் தங்களின் பணிக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    குறிப்பாக தமிழாசிரியர்கள் மத்தியில் இவ்வாறு தமிழ் இணையம் குறித்து பரப்பப்படும் பொழுது, மாணவர்களை அது சென்றடைந்து தமிழின் தொழில்நுட்பம் மாணவர்களைச் சென்று சேரும்.

    நல்ல முயற்சி...

    நன்றி...

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் முனைவரே,

    புதுச்சேரி - ல் கணிணி, இணையம் , தமிழ் பற்றிய
    நிகழ்வுகளை விடாமல் தொடர்வது மகிழ்ச்சியாக
    உள்ளது.

    வாழ்த்துகள்.
    அன்புடன், கடலூர் முகு

    பதிலளிநீக்கு
  3. நட்சத்திர வாழ்த்துகள்!!

    வெங்கடேஷ்

    பதிலளிநீக்கு
  4. please visit our website.. www.thamizhstudio.com.. this website for thamizh kurumbadam, ilakkkiyam, varalaaru.. paartthuvittu ungal karuthukalai yengalukku theriyappadutthavum.

    nanri,
    thamizhstudio.com

    பதிலளிநீக்கு
  5. வணக்கம்...
    பயனுள்ள முயற்சி.காலத்தின் தேவையை உணர்ந்து செயல்பட்டு வருகிறீர்கள்.மகிழ்ச்சி...

    இயல்,இசை,நாடகம் என முத்தமிழோடு அடுத்த தலைமுறைக்கு நான்காவது தமிழாக அறிவியல் தமிழை எடுத்துச்செல்ல வேண்டியது நம்கடமை.
    தொடர்க தங்கள் பணி.
    வாழ்த்துக்கள்.......

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் முனைவர் இளங்கோ,

    நீங்கள் செய்யும் பணி ~ கணி, வலை உலகுகளை ஆசிரியருக்கு எடுத்துச் செல்வது ~ அரிய பணி. உங்கள் வாழ்க்கை வளம்பல பெற்றுயர்க. தமிழ்ச் சமுதாயம் உங்கள் திறன்களை, பற்றை அறிந்து ஊக்கம் பலவழிகளில் அளிப்பதாகுக.

    அன்புடன்,
    நா. கணேசன்

    பதிலளிநீக்கு
  7. உங்கள் சேவை வளர்க.
    உங்களுக்கு ஒரு தகவல்.கணினியில் தமிழ் ரொம்ப எளிதான வழியில் அழகி மூலம் தட்டச்சு செய்யலாம்( இலவசம்).அதன் விபரங்களுக்கு :
    www.azhagi.com/.
    அல்லது தொடர்பு கொள்ளுங்கள்:
    Phone:
    Landline ~ 91-44-42024669 , Mobile ~ 0-98403-39750

    Email:
    contact@azhagi.com, sales@azhagi.com
    அன்புடன் அருணா

    பதிலளிநீக்கு
  8. ஐயா தங்களின் சேவை அளப்பரியது. எப்பொழுதும் தமிழ், தமிழ் அறிஞர்கள் பற்றிய பேச்சு, ”இப்படி தமிழ் பேச்சு என் மூச்சு” என்று நினைக்கும் தங்களின் ஆயுள் நீடுழி வாழ்க. ஈழத்தமிழரின் சார்பாக வாழ்த்துகின்றேன்.

    பதிலளிநீக்கு
  9. அன்பு நண்பரே தொடர்ந்த உங்களின் தமிழ்ப்பணிக்கு பாரட்டுகள்.

    தமிழ்மண நட்சத்திரமானதற்கும் பாராட்டுகள்.

    உங்கள் அயராத தமிழ்ப்பணி வெற்றியடையவும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  10. நன்முயற்சிக்கு வாழ்த்துகள் ஐயா...

    பதிலளிநீக்கு
  11. அன்புள்ள இளங்கோவன் ஐயா அவர்களுக்கு.

    தாங்கள் புதுவையில் புதிதாக பொறுப்பேற்க உள்ள தமிழாசிரியர்களுக்கு தமிழ்இணையம் பற்றிய பயிற்சி அளித்தமை குறித்து படங்களுடன் வெளியிட்டுள்ள செய்தி அருமை.

    நான் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக கணினியைப் பயன்படுத்தி வருகிறேன்.

    கணினியில் நாம் நினைப்பது போன்று நம்மால் தமிழைப் பயன்படுத்த முடியவில்லையே என்ற தவிப்பு எனக்கு நீண்ட காலமாகவே இருந்து வந்தது. ஆனால் தங்களின் தற்போதைய பயிற்சி வகுப்புகள் மிகுந்த மனமகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளிப்பதாய் உள்ளது ஆனால்

    தமிழாசிரியராக உள்ள என்னால் தங்கள் வகுப்பில் கலந்து கொள்ள முடியாதது பெரும் ஏக்கமாக இருக்கிறது.

    இருந்தாலும் தங்களை நேராக கண்டு பேசும் வாய்ப்பும் தங்களின் மேலான நட்பும் கிடைத்தது எண்ணி உண்மையில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.


    வாழ்க உம் தமிழ்ப்பணி.
    வளர்க தமிழ் கணினி

    நன்றி

    தங்களின் மேலான வழிகாட்டுதலில் தமிழ்இணையம் பற்றிய பல செய்திகளை அறிந்து கொள்ள பேராவலாயுள்ள
    அன்பன்,
    பைந்தமிழ்ப்பாவல்ர், பொன்.மூர்த்தி(எ)பூங்குன்றன், காரைக்கால்

    பதிலளிநீக்கு