பதிற்றுப்பத்து உ.வே.சா முதற்பதிப்பு - சில படங்கள்...

பதிற்றுப்பத்து சேர மன்னர்கள் பற்றிய வரலாற்றினை அறிவதற்கு மிகவும் துணைசெய்யும் நூல்.இந் நூலினை உ.வே.சா அவர்கள் 1904 இல் முதன் முதலாகப் பதிப்பித்தார்.இந்நூல் வெளியீட்டிற்கு முன் பல நூல்களைப் பதிப்பித்த பட்டறிவு இருந்ததால் இப்பதிப்பு முந்தைய பதிப்புகளைவிட சிறப்பாக உள்ளது.196 பக்கங்களில் நூல் செய்திகள் இடம்பெற்றுள்ளன. முகப்பு,இந்தப் புத்தகத்தில் அடங்கியவை,இந்தப்பதிப்பில் எடுத்துக்காட்டிய நூல்கள் முதலியவற்றின் முதற்குறிப்புகள்,முகவுரை,கிடைத்த கையெழுத்துப் பிரதிகள்,நூலாசிரியர் வரலாறு,உரையில் கண்ட இலக்கணக் குறிப்பகராதி, பிழையும் திருத்தமும்,பதிற்றுப்பத்து மூலமும் உரையும்,பதிற்றுப்பத்துச் செய்யுளகராதி,பிரயோக விளக்கம்,அரும்பத அகராதி முதலியன என்னும் அமைப்பில் நூலின் செய்திகள் இடம்பெற்றுள்ளன.முன்பும் என் தளத்தில் நூல் பற்றிச் சில பதிவுகள் இட்டுள்ளேன்.படங்களைப் பயன்படுத்துவோர் மறக்காமல் இசைவுபெறுக.இணைப்பு வழங்குக.
என் மின்னஞ்சல் : muelangovan.gmail.com


பதிற்றுப்பத்து முகப்பு


பதிற்றுப்பத்து இரண்டாம் பக்கம்


முகவுரை


பதிற்றுப்பத்து மூலம்


பதிற்றுப்பத்து மூன்றாம் பத்து


பதிற்றுப்பத்து நான்காம் பத்து


பதிற்றுப்பத்து ஐந்தாம் பத்து


பதிற்றுப்பத்து ஆறாம் பத்து


பதிற்றுப்பத்து ஏழாம் பத்து


பதிற்றுப்பத்து எட்டாம் பத்து

சிலப்பதிகாரம் உ.வே.சாமிநாத ஐயர் முதற்பதிப்பு- படங்கள்

தமிழர்களின் கலையறிவு காட்டும் ஆவணம் சிலப்பதிகாரம் ஆகும்.இந்நூலின் முதற்பதிப்பை உ.வே.சா அவர்கள் பல்வேறு இடையூறுகளுக்கு இடையே 1892 இல் கொண்டுவந்தார்.
அம் முதற்பதிப்பு இன்று காணுதற்கு அரிய பதிப்பாக உள்ளது.முதற்பதிப்பு எவ்வாறு இருக்கும் என அறிய விழைவார்க்குச் சில படங்களைப் பார்வைக்கு வழங்குகிறேன். இப் படங்களைப் பயன்படுத்துவோர் இசைவுபெற்றுப் பயன்படுத்தும்படி கேட்டுக்கொள்கின்றேன்.
என் மின்னஞ்சல் முகவரி:
muelangovan@gmail.com


சிலப்பதிகாரம் முதற் பக்கம்


சிலப்பதிகாரம் இரண்டாம் பக்கம்


முகவுரை


முகவுரை


முகவுரை


அடியார்க்குநல்லார் உரையால் அறியலாகும் நூல்கள்


தொகையகராதி


விஷயசூசிகை


அரும்பதவகராதி


விளங்காமேற்கோள் அகராதி


சிலம்பு. கதைச்சுருக்கம்


சொல் விளக்கம்


சூசிபத்திரம்


சூசிபத்திரம்


சிலம்பு.அடியார்க்.உரை


உரைப்பாயிரம்


சிலம்பு புகார் காண்டம்


கானல்வரி


சிலப்பதிகாரம் அரும்பத உரை


சிலப்பதிகாரம் அரும்பத உரை

நாட்டுப்புறவியல் பேராசிரியர் தே.லூர்து அவர்கள் மறைவுக்கு வருந்துகிறேன்...


பாளையங்கோட்டை என்றால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணத்தால் அவ்வூர் நினைவுக்கு வரும்.புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள் பல உள்ளதால் கற்றவர்களுக்கு அவ்வூர் கல்வி சார்ந்து நினைவுகளை ஏற்படுத்தும்.புகழ்பெற்ற பேராசிரியர்கள் பலர் ஆவ்வூரில் கல்விப்பணி செய்துள்ளனர் அவர்களுள் பேராசிரியர் தே.லூர்து அவர்கள் குறிப்பிடத்தகுந்தவர்.

நாட்டார் வழக்காற்றியல்(நாட்டுப்புறவியல்) துறையில்ஆழ்ந்த புலமைபெற்றவர்.பல நூல்களை உலகத்தரத்திற்கு இத்துறையில் எழுதியவர்.பல மாணவர்களை இத்துறையில் கற்கவும் ஆராய்ச்சி செய்யவும் ஊக்கப்படுத்தியவர்.நாட்டார் வழக்காற்றியல் பற்றிய களப்பணிகளுக்கு முதன்மை கொடுத்தவர். ஆவணக்காப்பகம் ஒன்றை உருவாக்கி ஒளிப்படங்கள், ஒலி-ஒளிக்காட்சிகள்,நூலகம் அமைத்தவர்.முதுகலை நாட்டார் வழக்காற்றியல் துறையை முதன்முதல் உருவாக்கிப் பல மாணவர்கள் படிக்கவும் ஆய்வு செய்யவும் வழி வகுத்தவர்.

தமிழகம் மட்டுமன்றி அயல்நாட்டினர் பலரும் தமிழகத்தில் நாட்டுப்புற ஆய்வுகளை மேற்கொள்ள துணைநின்றவர்.நாட்டுப்புறவியல் என்னும் தலைப்பில் நான் எழுதிய நூலினைக் கண்ணுற்ற பேராசிரியர் அவர்கள் எனக்கு மடலிட்டு ஊக்கப்படுத்தினார்கள்.என்னுடன் தொலை பேசியில் பேசி ஊக்கப்படுத்தினார்.இத்துறையில் ஆர்வம்காட்டும் யாரையும் அன்புடன் வழிகாட்டி நெறிப்படுத்துவது பேராசிரியரின் இயல்பாகும்.

பேராசிரியர் தே.லூர்து அவர்களின் முன்னோர்கள் ஊர் தேவகோட்டைக்கு அருகில் உள்ள வடக்கு ஆண்டாவூரணியாகும்(?).பர்மா சென்ற முன்னோர்கள் அங்கே தங்கி வாழ்ந்தனர். எனவே லூர்து அவர்கள் பர்மாவில் உள்ள தாந்தபீனில் 1937 சூன் 26 ஆம் நாள் பிறந்தவர்.பர்மாவில் தனியாக சவரிமுத்து ஆசிரியரிடம் கல்வி கற்றார். வாய்பாடுகள், ஆத்திசூடி,கொன்றைவேந்தன்,விவேகசிந்தாமணி முதலியவற்றைக் கற்றார்.

உலகப்போரின் போது தம் சொத்துகளை இழந்த குடும்பத்தினருடன் புறப்பட்டு ரங்கூன் வந்து ஆண்கள் பள்ளியில் படித்தார்.இரண்டாம் உலகப்போருக்குப் பின் தமிழகம் வந்த லூர்து 1947 இல் தேவகோட்டை தேபிரித்தோ உயர்நிலைப்பளியில் சேர்ந்து ஐந்தாம் வகுப்பில் படித்தார்.ஏழாண்டுகள் அங்கு படித்தார்.இளம் வயதில் கதை கேட்பதிலும் படிப்பதிலும் நாட்டம்.திராவிட இயக்க ஏடுகளையும் படிக்கத் தொடங்கினார்.

பள்ளி இறுதித் தேர்வில் வெற்றி பெற்று திருச்சி தூயவளனார் கல்லூரியில் இணைந்து படித்தார்.வரலாற்றுப் பாடத்தை இண்டர்மீடியட்டில் படித்தவர்.பிறகு பி.ஏ.பொருளாதாரம் பயின்றவர்.காரைக்குடி அழகப்பா கல்லூரியில் முதுகலை தமிழ் இலக்கியம் வ.சுப.மாணிக்கம் அவர்களிடம் கற்றவர்.சவேரியார் கல்லூரியில் பணியில் இணைந்து தமிழ்ப்பணிபுரிந்தார்.1965 சூன் 24 இல் திருமணம்.

தமிழ்ப்பழமொழிகள் ஓர் ஆய்வு என்னும் தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு செய்தவர்.24 ஆண்டுகள் தமிழ்த்துறையில் பணிபுரிந்தவர்.நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுமையம்(1987) உருவாக்கி நாட்டுப்புறவியலுக்குத் தனித் துறையை உருவாக்கிய பிறகு பல்வேறு பயிற்சிப் பயிலரங்குகள் நாட்டார் வழக்காற்றியல் துறைக்கென நடத்தி அத் துறை சார்ந்த மேனாட்டு அறிஞர்களை அழைத்து வந்து பலருக்குத் தமிழகத்தில் பயிற்சியளிக்கச் செய்தார்.

தாம் பயன்படுத்திய நூல்களைத் தாம் உருவாக்கிய நாட்டார் வழக்காற்றியல் மைய நூலகத்திற்கு வழங்கிவிட்டார். நாட்டுப்புறவியல் ஆய்வையே தம் வாழ்க்கையாக்கிக் கொண்ட பேராசிரியர் தே.லூர்து அவர்கள் 05.04.2008 இல் மறைவுற்றார் என்ற செய்தி காலத்தில் அறியமுடியாமைக்கு வருந்துவதுடன் பேராசிரியரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும் அவரின் மாணவர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவர்தம் நூல்களுள் சில :

1.தமிழ்ப்பழமொழிகள் ஓர் ஆய்வு(முனைவர் பட்ட ஆய்வேடு,1980)
2.நாட்டார் வழக்காற்றியல் ஓர் அறிமுகம்(1976)
3.நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகள் தொகுதி ஒன்று(1981)
3.நாட்டார் வழக்காற்றியல் கள ஆய்வு (1986)
4.நாட்டார் வழக்காறுகள்(1988)

நன்றி
1.வல்லினம்
2.உங்கள் நூலகம்

நன்னூல்,அகப்பொருள்விளக்கம், புறப்பொருள் வெண்பாமாலை,யாப்பருங்கலக்காரிகை, தண்டியலங்காரம் அடங்கிய நூலின் பழைய பதிப்பு...


தாண்டவராய முதலியார்,அ.முத்துச்சாமிப் பிள்ளை பதிப்பித்த இலக்கணப் பஞ்சகங்களில் நன்னூல் மூலமும்,அகப்பொருள் மூலமும், புறப்பொருட்கிலக்கியத்தோடு வெண்பாமாலை மூலமும் என்னும் நூலின் முதல் பக்கம்.ஜய(1835) வருடம் வெளியானது என்ற குறிப்பு உள்ளது.பழைய பதிப்பு என்பதால் மூலம் மட்டும் கொண்டுள்ளது.

அச்சுவரலாறு,பதிப்புவரலாறு அறிய இந்நூல்படிகள் உதவும்.புதுச்சேரி பிரெஞ்சு நிறுவன நூலகத்தில் இப் படி உள்ளது


நன்னூல் நூல்பகுதி


அகப்பொருள் விளக்கம் நூல்பகுதி



புறப்பொருள் வெண்பாமாலை நூல்பகுதிகள்





யாப்பருங்கலக் காரிகை நூல்பகுதிகள்















தண்டியலங்காரம் நூல் பகுதிகள்



விழுப்புரம் வலைப்பதிவர் பயிலரங்கம் - படங்கள்.














விழுப்புரம் வலைப்பதிவர் பயிலரங்கு : 100 பேர் பங்கேற்பு - படங்கள்..

விழுப்புரம் வலைப்பதிவர் பயிலரங்கில் 100 பேர் பயிற்சி பெறுகின்றனர். இவர்களுள் 37 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பல்வேறு கல்லூரிகளில் பயில்பவர்களும், பல நிறுவனங்களில் பணிபுரிபவர்களும் அடங்குவர். புதுச்சேரி, சென்னையிலிருந்து வந்து வலை நுட்பம் அறிந்தவர்கள் பயிற்சி அளிக்கின்றனர்.

பயிற்சிப் பெறுபவர்கள் படங்கள்:




>


புதிய வலை: தமிழருவி

விழுப்புரம் வலைப்பதிவர் பயிலரங்கு தொடங்க உள்ளது...

விழுப்புரம் வலைப்பதிவர் மன்றம் ஏற்பாடு செய்துள்ள வலைப்பதிவர் பயிற்சிப் பயிலரங்கு இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது.பயிற்சியாளர்கள்,பயிற்சி பெறுபவர்கள் விழா அரங்கில் கூடியுள்ளனர்.தமிழ்நாட்டு அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு முனைவர் க.பொன்முடி அவர்கள் பயிலரங்கைத் தொடங்கி வைக்க உள்ளார்கள்...

விழுப்புரம் வலைப்பதிவர் பயிலரங்கில் உங்கள் பங்களிப்பு?

விழுப்புரம் வலைப்பதிவர் பயிலரங்கு 11.05.2008 ஞாயிறு காலை ஒன்பது மணிக்கு விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் நடைபெறுவதை இணையத் தோழர்களுக்குத் தெரிவித்த உடன் உலகின் பல பகுதிகளிலிருந்தும் வாழ்த்துகள்
வந்த வண்ணம் உள்ளன.அனைவருக்கும் நன்றி.

நாளை நடைபெறும் நிகழ்ச்சிகள் உடனுக்குடன் வலையேற்றப்படும்.அதுபோல் இணையத்தில் உள்ள அனைத்துப் பயன்களும் பயிற்சியாளர்களுக்கு விளக்கப்படும்.

தமிழ்மணம்,தமிழ்வெளி,தேன்கூடு,கூகுள்,யாகு நிறுவனம் அவை சார்ந்த செயல்பாடுகள், இணைய இதழ்கள்,தமிழ் மின்னஞ்சல்,தமிழ் உரையாடல்(அரட்டை),படம் அனுப்புவது,ஒலிப் பதிவு செய்வது,வலைப்பூ உருவாக்கம் பற்றிப் பயிற்சியாளர்களுக்குச் செய்முறைப்பயிற்சி வழங்க உள்ளோம்.

நாளை இணைய இணைப்பில் உள்ள தோழர்கள் பயிற்சியில் உள்ளவர்களுக்கு வாழ்த்துச் சொல்லாம். உரையாடலின் வழி நீங்களும் பங்குகொண்டு உதவலாம்.முந்தைய பயிற்சியில் இணைப்பில் இருந்த தோழர்களுடன் தொடர்புகொள்ள முயன்றோம்.அவர்கள் தொடர்பில் வராததால் பயிற்சி வழங்கியவர்களும் பயிற்சிபெற்றவர்களும் ஏமாற்றம் அடைந்தோம்.

வெளிநாட்டில் உங்கள் மொழிக்காரரை, ஊர்க்காரரைப் பார்த்தால் கைகுலுக்கிப்பேசி மகிழ்வதுபோல் தமிழ் இணையத்துறையில் கைபதிக்கும் ஆர்வலர்களை ஊக்கப்படுத்துவது உங்கள் கடமையல்லவா?

எந்த வேலை இருந்தாலும் சிறிதுநேரம் ஒதுக்கி வைத்துவிட்டுப் புதியவர்களுக்கு உதவ முன்வாருங்கள்.

தமிழ் வளர்ச்சிக்கு இணையத்தைப் பயனபடுத்துவது,தங்கள் எண்ணங்களை,படைப்புகளை இணையத்தில் வெளிப்படுத்துவது எவ்வாறு? என்ற நோக்கில் அமையும் இப்பயிலரங்கிற்குத்
தங்கள் அறிவுரைகளை மின்னஞ்சலில்,உரையாடலில், பதிவுகளில் வெளிப்படுத்துங்கள்.
மீண்டும் சந்திப்போம்.

விழுப்புரத்தில் வலைப்பதிவர் பயிலரங்கு

விழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் மன்றத்தின் சார்பில் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் 11.05.2008(ஞாயிறு) வலைப்பதிவர் பயிலரங்கு நடைபெறுகிறது.காலை ஒன்பது மணிமுதல் மாலை வரை நிகழ்ச்சி நடைபெறும்.தமிழ்நாட்டு அரசின் உயர் கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு க.பொன்முடி அவர்கள் வலைப்பதிவர் பயிலரங்கைத் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.கல்லூரி முதல்வர் அவர்களும் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார்.

விழுப்புரம் புதுவைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் பயிலரங்கில் கலந்துகொண்டு பயிற்சிபெற-பயன்பெற உள்ளனர்.பயிற்சியாளர்களுக்குப் பயன்படும் வண்ணம் குறுவட்டு ஒன்று உரூவா பதினைந்து விலையில் வழங்கப்படும்.ஆர்வமுடையவர்கள் கலந்துகொண்டு பயிற்சி தரலாம்.பயன்பெறலாம்.

வலைப்பூ உருவாக்கம்,தமிழ் இணையப் பயன்பாடு பற்றி அறிந்துகொள்ள விழைவார்க்குப் பயன்தரும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும் செய்திகள் பெற விரும்புபவர்கள் http://vizhuppuramvalaippathivar.blogspot.com/
என்னும் தளத்திலும் திரு. தமிழநம்பி அவர்களின் 94434 40401 என்ற செல்பேசி எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்.
விழுப்புரம் வலைப்பதிவர் மன்றம் பக்கதிற்குச் செல்ல இங்கு இணைப்பு

புறநானூறு உ.வே.சா. முதற்பதிப்பு ஆய்வுரை

தமிழ் வாழும் காலம் எல்லாம் இறப்பின்றி வாழ்பவராகப் பாரதியாரால் பாடப்பெற்ற அறிஞர் உ.வே.சாமிநாத ஐயரின் புறநானூற்று முதற்பதிப்பைக்(1894) காணும் வாய்ப்பு எனக்கு அண்மையில்அமைந்தது.

அச்சுத் துறை வளர்ச்சியும், ஆராய்ச்சி வன்மையும் தொடக்கநிலையில் இருந்த அக் காலகட்டத்தில் உ.வே.சா அவர்கள் தம் கல்லூரிப் பணிகளுக்கு இடையில் புறநானூற்றைப் பொறுப்புணர்வுடன் பதிப்பித்துள்ள திறம் அறிந்து மலைப்பும் வியப்புமே மேலிடுகின்றது.

குடந்தையில் பணிபுரிந்துகொண்டு சென்னையில் அச்சு வேலைகளை மேற்கொண்ட அவர்தம் உழைப்பைஅவரின் வாழ்க்கை வரலாற்றில் பரக்கக் காணலாம்.தமிழ் இலக்கிய உலகிற்கு ஆவணமாகப் பல நூல்களைப் பதிப்பித்த அறிஞர் அவர்களின் நூல்களை ஆழ்ந்து பார்க்கும்பொழுது அக்காலப் பதிப்புமுறைகள்,அச்சுமுறைகள் யாவும் தெளிவாக விளங்குகின்றன.


ஓலைச் சுவடிகளிலிருந்து கையெழுத்துப் படியாக்கி அவற்றில் காணப்படும் பாட வேறுபாடுகளைப் பல ஏடுகளின் வழி ஒப்பிட்டு உண்மை வடிவம் கண்டு,பொருளுணர்ந்து.உண்மைப்பாடம் வழங்கிய அவரின் உழைப்பைத் தலைவணங்கி மதித்தே ஆதல் வேண்டும்.இன்று அச்சிட்ட புத்தகங்களை மறுபதிப்புச் செய்யும்பொழுது அச்சுப்பிழைகளும்,சொல்,தொடர்,பத்தி,பக்கம்,படிவம் காணாமல் போதல் பற்றி யாரும் அக்கறை காட்டாமல் பதிப்பை ஒரு வணிகத் தொழிலாக்கிவிட்ட நிலையில் உ.வே.சா அவர்களின் பணி மீண்டும் மீண்டும் போற்றத்தக்கதாக விளங்குகிறது.


(படம் 1 புறநானூறு முதற்பதிப்பு முதற்பக்கம்)

புறநானூறு உ.வே.சா அவர்களால் முதன்முதல் 1894 இல் பதிப்பிக்கப்பெற்றது.சீவக சிந்தாமணியை உ.வே.சா அவர்கள் பதிப்பித்தபொழுது நச்சினார்க்கினியர் உரையில் காணப்படும் மேற்கோள்கள் எந்த நூல்களில் வருகின்றன என்பதை ஆராயும்பொழுது அவருக்குப் பொருநராற்றுப்படை முதலான பத்துப்பாட்டு நூல்கள் பற்றி அறிய நேர்ந்ததைத் தம் வாழ்க்கை வரலாற்றில் (பக்கம் 599,600)குறிப்பிட்டுள்ளார்.அதே நேரத்தில் வேறொரு சுவடியின் 'கொற்றுறைக் குற்றில' என்னும் தொடரைக் கண்டு அது புறநானூற்றின் 95 ஆம் பாடல் என்று உணர்ந்தார்.அதுமுதல் புறநானூற்றுப் பாடல்களைத் தனியே தொகுக்கும் முயற்சி மேற்கொண்டார்(பக் 600-01).

புறநானூற்றைப் பதிப்பிக்கத் தொடங்கியபொழுது முன்பே சில நூல்களைப்([சிந்தாமணி,சிலம்பு) பதிப்பித்த பட்டறிவு இருந்ததால் முந்தைய நூல்களைவிடப் பன்மடங்கு புறநானூறு சிறப்பாக வெளிவரவேண்டும் என்று நினைத்தார்.தம்முடன் கல்லூரியில் வரலாற்றுப் பேராசிரியராக இருந்த துரைசாமி அவர்களிடம் இருந்த பைபிள் சிறப்புப் பதிப்பைக் கண்ணுற்றுப் பல புதுமைகளைத் தம் ஆராய்ச்சியில் புகுத்தினார். சங்கப்புலவர்களின் வரலாறு, தொடர்கள்,கருத்துகளைப் பல்வேறு அகராதிகளாக எழுதிவைத்துக்கொண்டு ஆய்வு செய்தார்.திருமானூர்க் கிருட்டிண ஐயர், ம.வீ.இராமானுசாசாரியார்,சொக்கலிங்கத் தம்பிரான்,ஏம்பல் பொன்னுசாமி உள்ளிட்டவர்கள் இந்தப் பணியில் துணைநின்றதை உ.வேசா அவர்கள் புறநானூற்று முன்னுரையில் நன்றியுடன் பதிவுசெய்துள்ளார்.


(படம் 2 புறநானூறு முதற்பதிப்பு அருஞ்சொல் அகராதி)

புறநானூற்று வரிகள் எந்த எந்த நூல்களில் மேற்கோளாக ஆளப்பட்டுள்ளன என்பதை அரும்பாடுபட்டுக் கண்டுபிடித்து எழுதியுள்ளார். அக்காலத்தில் நூல்கள் மூலமும் உரையும் வேறுபாடு காணமுடியாதபடி ஒன்றாகப் பின்னிக்கிடக்கும்.இவற்றைப் படிக்கும் புலவர்கள் தங்களுக்குத் தோன்றும் ஐயங்கள், விளக்கங்களையும் இவ்வேட்டில் எழுதி வைப்பதால் உண்மை வடிவம் காண்பதில் மிகப்பெரும் சிக்கல் இருந்தது.இன்றைக்கு நன்கு நமக்கு அறிமுகமாகியுள்ள பல தொடர்கள் எங்கு வருகின்றன எனத் தெரியாமல் உ.வே.சா அவர்கள் திகைத்ததை முதற் பதிப்பிலே குறிப்பிட்டுள்ளார்.

'அகலிரு விசும்பிற்...பரிதி ' எனும் தொடர் எங்கு இடம்பெற்றுள்ளது என்பதை அறியமுடியாமல் இருந்ததையும் பின்னர்ப் பெரும்பாணாற்றுப்படையில் 1 - 2 அடி என விளங்கியதையும் குறிப்பிடுகிறார். அதுபோல் புறநானூற்று உரையில் இடம்பெறும்,

'ஏவ விளையர் தாய்வயிறு கரிப்ப ' (புறம்.41,78 மேற்கோள்)

'பண்டு காடுமன்' (புறம்.138 உரை)

'பெண்கொலை புரிந்த நன்னன்' (புறம்.147 உரை)

என்ற தொடர்கள் உ.வே.சா அவர்களுக்கு எந்த நூலில் இடம்பெற்றுள்ளது என்பது விளங்காததைப் பெருந்தன்மையுடன் குறிப்பிட்டுள்ளது இன்றைய ஆய்வாளர்களுக்குத் தேவையான ஒன்றாகும்.

புறநானூற்றுக்குப் பழைய உரை உள்ளமையையும்,அதற்கு முன்பே உரை வரையப்பட்டிருக்க வேண்டும் என்பதையும் புறநானூற்று முதற்பதிப்பில் உ.வே.சா.பதிவுசெய்துள்ளார். சங்க இலக்கியத்தில் இடம்பெறும் விளங்காத பல பகுதிகளுக்கு அத்துறை வல்லாரிடம் கருத்துகளைப் பெற்று நன்றியுடன் அவற்றைப் பயன்படுத்தியுள்ளார்.இவ்வகையில் வி.வெங்கையர்,வி.கனகசபைப்பிள்ளை ஆகியோரின் கருத்துகளை நூலில் இணைத்துள்ளார்.


(படம் 3 புறநானூறு முதற்பதிப்பு நூல் தொடக்கம்)

1893 இல் சனவரி மாதம் சென்னை சூபிலி அச்சகத்தில் புறநானூற்று முதல் பதிப்பின் அச்சுப்பணிகள் தொடங்கின.வை.மு.சடகோப ராமானுசாசாரியார்அவர்கள் பதிப்பு வகையில் மிகப் பெரிய துணையாக விளங்கியதை உ.வே.சா அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.1894 செப்டம்பர் மாதம் புறநானூறு பதிப்புவேலை நிறைவெய்தியது. புறநானூறு வெளிவந்தால் தமிழகத்தின் பல வரலாறுகள் வெளிப்படும் என நினைத்து அரசர் வரலாறு,புலவர் வரலாறு,நாடுகள் கூற்றம் பற்றிய பல செய்திகளை உ.வே.சா வெளிப்படுத்தி யிருந்தார்.

புறநானூறு நூல் அமைப்பு

உ.வே.சா பதிப்பித்த புறநானூறு முதல் பதிப்பு பக்க எண்கள் ஒரே சீராக அமைக்காமல் துண்டு துண்டாகப் பக்க எண்கள் உள்ளன.அவ்வகையில் உள்ள பக்கங்களைக் கூட்டினால் 488 பக்கம் உள்ளது.(முகப்பு-2,முகவுரை-12,நாடு முதலியன - 3,பாடினோர் வரலாறு,நாமபேதம் -12+1=13,பாடப்பட்டோர் வரலாறு,நாமபேதம் -18,விஷயசூசிகை -24,மூலம் உரை 310,பாட்டு முதற்குறிப்பு அகராதி - 6,திணை,துறை விளக்கம் -10,அரும்பத அகராதி,புறநானூறு உரை இலக்கணக்குறிப்பு - 83,பிழைத்திருத்தம் -2,வெங்கையர் விசேடக்குறிப்பு - 3,கனகசபைப்பிள்ளை விசேடக்குறிப்பு -2 பக்கம். ஆக 488 பக்கங்கள்).

புறநானூற்று நூலிலும் உரையிலும் கண்ட அரியசொற்கள் இவை எனச் சில சொற்களை உ.வே.சா காட்டியுள்ளார்.

அடார்,அடிக்கீழ்,அணுமை,அதரிதிரித்தல்,அதற்பட,அருப்புத்தொழில்,அல்லிப்பாவை,ஆவுதி,ஆன்பொருந்தம்,இட்டிய,இடைகழி,ஒப்பமிட்ட நீலமணி,ஒருதலை,ஒருவீர்,ஓரிபாய்தல்,ஓரியர்,கட்டிலெய்தினானை,கடாவழித்தல்,கண்ணுறை,கதுவாய்,கந்தாரம்,காவிய,காளாம்பி,குறித்துமாறெதிர்ப்பை,

கூப்பீடு,கைநீட்டு,கொளுத்துச்செறிந்த,கோசர்,சாணாகம்,செண்டுவெளி,தலையாட்டம்,தறிகை,தாளியடிக்கப்பட்ட,துஞ்சிய,நெருநற்று,பல்லியாடிய,

பவணழிந்து,பவாழிந்து,பனைநுகும்பு,பார்ப்பார்ப்படுக்க,பாறுமயிர்,பிசிர்,பெண்டாட்டி,,பையாப்பு,மட்டையாகியதலை,முகுத்தம்,முட்டுக்கள,முதுமக்கட்டாழி,

முழுத்தம்,முழுநெறி,மூரிநிமிர்தல்,வடக்கிருத்தல்,வண்டற்பாவை,வளையமாலை,வேணாவியோர் முதலான அரியசொற்களை உ.வே.சா பட்டியலிட்டு நூலை அனைவருக்குமானதாக மாற்ற முயன்ற அறிவு உழைப்பு இங்கு வெளிப்பட்டு நிற்கின்றது.

புறநானூற்றில் காணப்படும் நாடு முதலியன என்னும் தலைப்பில் நாடுகள், கூற்றங்கள், ஊர்கள், மலைகள்,ஆறுகள் பற்றிய பட்டியலிட்டுக் காட்டும் உ.வே.சா அவர்கள் பின்வருவனவற்றை என்னவென்று அறியமுடியவில்லை என்று விளங்காதவைகளாகப் பட்டியலிடுகின்றார்.ஆராய்ச்சியாளர்களுக்கு மிகச்சிறந்த தோற்றுவாயாகும் இப்பணி.

அரிசில்,இலவந்திகைப்பள்ளி,எருமைவெளி,ஏறை,கண்டீரம்,கள்ளில்,காரி,குராப்பள்ளி,குளமுற்றம்,கூடகாரம்,

கோட்டம்பலம்,சிக்கற்பள்ளி,சித்திரமாடம்,நச்செள்ளை,நாலை,நொச்சி நியமம்,மல்லி, விச்சி,வீரைவெளி, வேண்மாடம் என்பன உ.வே.சா அவர்களின் காலத்தில் விளங்காச் சொற்களாக இருந்தன.இவற்றுள் பெரும்பான்மையான சொற்கள் இன்று பயன்பாட்டிற்கு வந்து அறிமுகமாகியுள்ளதை நினைக்கும் பொழுது தமிழ் ஆராய்ச்சியின் வளர்ச்சிநிலை விளங்கும்.

பாடினோர் வரலாறு என்னும் பகுதியில் புறநானூறு பாடிய புலவர்களின் வரலாற்றைத் தொகுத்து விளக்குகின்றார்.விளக்கம் தெரியும் புலவர்களின் வரலாற்றை விரித்து எழுதும் உ.வே.சா விளக்கம் தெரியாத இடங்களை ' இவராற் பாடப்பட்டவர்கள் பெயரும்,இக்காலத்தவர் இன்னாரென்பதும் விளங்கவில்லை'(அடைநெடுங்கல்லியார் வரலாற்றில்) எனவும் குறிப்பிடுகின்றார்.

ஆலியார் எனும் புலவரைப் பற்றி எழுதும்பொழுது இவர் பெயர் 'ஆனியாரென்றும்' காணப்படுவதைப் பாடவேறுபாடாகக் காட்டுகிறார். அள்ளூர் நன்முல்லையார், ஆலங்குடிவங்கனார், ஒக்கூர்மாசாத்தியார், கணியன் பூங்குன்றனார்,கதையங்கண்ணனார், கயமனார், காவற்பெண்டு,கூகைகோழியார்,கோடைபாடிய பெரும்பூதனார் , சிறுவெண்டேரையார், தும்பிசேர்கீரனார்,நெடுங்கழுத்துப் பரணர்,நொச்சி நியமங்கிழார்,பக்குடுக்கை நன்கணியார், பிரமனார்,பூங்கணுத்திரையார்,பெரும்பதுமனார்,மதுரை இளங்கண்ணிக்கெளசிகனார்,,..மதுரைக்

கணக்காயனார்,...மதுரைப்பூதனிளநாகனார்,உள்ளிட்ட புலவர் பெருமக்களின் வரலாறு விளங்காமல் இருந்துள்ளது.

ஆசிரியர் பெயர் அறியமுடியது இருந்த பாடல்களின் பட்டியலைத் தந்து 15 பாடல்களைப் பாடிய புலவர்களின் பெயர்கள் அறியமுடியவில்லை என்பதையும் உ.வே.சா முதற்பதிப்பில் குறித்துள்ளார்.இதுநாள் வரை நம்மால் அப்பெயர்கள் ஆராய்ந்து வெளிப்படுத்தப்படவில்லை என்பதை நினைக்கும்பொழுது உ.வே.சா. அவர்களால் ஒருவேளை புறநானூறு வெளிப்படுத்தப்படாமல் போயிருந்தால் தமிழர்களின் வீர வரலாறு அறியப்படாமல் போயிருக்கும் என்று கருதுவதில் தவறில்லை.

பாடியவர்களின் பெயர் வேறுபாட்டை ஓலைச்சுவடிளின் துணையுடன் விளக்கியுள்ளார்.

ஆவியார் / ஆனியார்

உறையூர் முதுகூத்தனார் / உறையூர் முதுகூற்றனார்.

ஆவூர் கிழார் / ஆவூரழகியார்

ஐயூர் முடவனார் / ஐயூர் கிழார் / உறையூர் முடவனார்

ஓரேருழவர் / ஒன்னாருழவர்

காக்கைபாடியார் நச்சென்னையார் / காக்கைபாடியார் நச்செள்ளையார்

குறுங்கோழியூர் கிழார் / குறுங்கோளியூர் கிழார்

கோதமனார் / கெளதமனார்

சோழன் நல்லுருத்திரன் / சோழன் நல்லுத்தரன்

மோசிகீரனார் / மோசுகீரனார்

வெண்ணிக்குயத்தியார் / வெண்ணிற்குயத்தியார்

வெறிபாடிய காமக்கண்ணியார் / வெறியாடிய காமக்கண்ணியார்

என்று உ.வே.சாவின் முதற் பதிப்பு நூல் அக்காலத்தில் இருந்த ஆராய்ச்சி இடர்ப்பாடுகளை நமக்கு உணர்த்துகிறது.

ஓலைச்சுவடியிலிருந்த புறநானூற்றுச் செய்யுள்களை நூலுருவாக்கம் செய்தபொழுது மிகக் கவனமுடனும் எச்சரிக்கை உண