banner

நிகழ்வுகள்

// முனைவர் மு.இளங்கோவன் நூல்கள் புதுவையில் வெளியீடு, விவரம் விரைவில்...//

திங்கள், 26 பிப்ரவரி, 2007

தமிழ் நாட்டியக்கலைஞர் இரகுநாத் மனே

தமிழ் நாட்டியக்கலைஞர் இரகுநாத் மனே raghunathmanet
இரகுநாத் மனே மிகச்சிறந்த நாட்டியக்கலைஞர்.புதுவையைச்சார்ந்த இவரும் நானும் புதுவைப்பல்கலைக்கழத்தில்
ஆய்வுமாணவர்களாக இருந்தபொழுது ஒன்றாகப்பழகினோம்.பதினைந்து ஆண்டுகளுக்குப்பிறகு 23.02.2007 இல்
கண்டேன்.பழைமையை மறவாமல் பழகினோம்.பிரான்சு நாட்டுக்குப் பயணமான இவருடன் நெருக்கடியான சூழலிலும் உரையாடினேன்.பல குறுவட்டுகளில் பாடியுள்ளார்.நடித்துள்ளார்.இவருக்கு நிகராகத்தமிழ் நாட்டிய உலகில் ஒப்புமை
காட்ட ஒருவரும் இல்லை.அந்த அளவு நாட்டியத்தைத் தம் உயிர்மூச்சாக்கிக்கொண்டவர்.தமிழ்மரபு மீட்கும் உலகம்
புகழும் இரகுநாத்மனே அவர்களைத்தமிழ்த்திரைப்படத்துறையினரும்,மக்கள் தொலைக்காட்சி முதலான ஊடகத்துறை
யினரும் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.இந்த நாட்டியநன்னூல் நன்கு கற்றமேதையைத் தமிழ் உலகிற்கு முன்மொழிந்து அறிமுகப்படுத்துவதில் உள்ளம் பூரிப்படைகிறேன்.இவரைப்பற்றி விரிவாக எழுதுவேன்.மேலும்
அறிய www.raghunathmanet.com
மு.இளங்கோவன்,புதுச்சேரி
பேசி -9442029053